Sunday, December 26, 2010

Sunday, December 26, 2010

ஹிமாச்சல் பிரதேஷ்(4)

ஹிமாச்சல்ப்ரதெஷ்(பகுதி-4)

டல்ஹௌஸி 5மலைகளின் மேலே கட்டப்பட்டிருக்கு.katlog, patreyn, tehra, bakroda, and, balun.
19-வதுசெஞ்சுரி கவர்னர் ஜெனரல் லார்ட் டல்ஹௌஸி. அவர் இங்கு அடிக்கடி இங்கு
வந்து தங்கியதால், அவரின் ஞாபகார்த்தமாக, இந்த இடத்திற்கு அவரின் பெயரைவைத்திருக்கிறார்கள். கடல் மட்டத்திலிருந்து 2036 மீட்டர் உயரத்தில் உள்ளது. பைன்,ஓக், தியோதர்ஸ் மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன. rhododendron என்ற பூக்களின் தோட்டமும்நம் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.ரவி என்கிறபெயரில் ஒரு பெரிய நதி டல்ஹௌஸியைச்சுற்றி
வெள்ளியை உருக்கி வார்த்ததுபோல வளைந்து, நெளிந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. பனி மூடியdhauladhar மலைகள் வேறு திரும்பிய பக்கமெல்லாம். டெல்லியிலிருந்து485 கிலோமீட்டர்,ரோட்ஸைட்டில்
சாம்பாவிலிருந்து 52கிலோமீட்டர், 80கிலோமீட்டரில் பதான்கோட். ஏர்போர்ட் gaggal,,in,kangraa 135கிலோமீட்டரில்.இங்கேருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் சுபாஷ்போலி என்று ஒரு இடம். 1937-ல்
சுபாஷ் சந்த்ரபோஸ் இங்கு, அடிக்கடி தங்குவதுண்டாம். மெடிடேஷனுக்கு பெஸ்ட் ப்ளேஸாம்.காந்திசௌக் என்னுமிடத்தில் அழக்ழகான சர்ச்சுகள் இருக்கிறது. ஷாப்பிங்க்செண்டரில்திபேத்தியர்களின் கைவண்ணத்தில் உருவான ஃபுலோவர், கார்பெட், சம்பா ஸ்பெஷல் ஸ்லிப்பர்ஸ்,ஷால்,
க்ளௌஸ், சாக்ஸ் என்று கம்பளி உடைகள் நிறைய கிடைக்கின்றன.
நான்7 மணிக்கு எழுந்தேன்.ரூம் ஹீட்டர் இர்ந்தாலும்கூட ரொம்பவே குளிறாகத்தான் இருந்தது.

Monday, December 20, 2010

Monday, December 20, 2010

ஹிமாச்சல் பிரதேஷ்(3)

                                                             

ஹிமாச்சல் ப்ரதேஷ்( பகுதி-3)

எல்லாருக்கும் ஒரே இடத்தில் தங்க இடம் கிடைக்கலை. நானும் 2 குழந்தைகளும்முதல் மாடி வராண்டாவில், பாக்கி எல்லாரும் 2வது, 3வது மாடி வராண்டாக்களில்கிடைத்த இடங்க்ளில் மூட்டையாக சுருண்டு கொண்டோம். அந்த நேரத்திலும்குளிரிலும் தூக்கம் வரலை. வராண்டா ஓரமாக நின்று வெளியில் வேடிக்கை பார்த்துண்டு இருந்தேன். அந்த முழு நிலா ஒளியில் பெயர்தெரியாத பெரிய,பெரிய மரங்கள்எல்லாம் தக,தக என்று ஜொலித்துக்கொண்டிருந்தன. 3மனிவரையிலும் பார்த்துட்டு
வராண்டாவில் குழந்தைகள் கிட்ட உக்காந்தேன். வராண்டா பூராவும் கால்வைக்க இடமில்லாமல் அதனை ஜனங்கள்கம்பளிக்குள் சுருண்டிருந்தார்கள். எனக்கு படூக்க எல்லாம் இடமில்லை. சுவரில் சாய்ந்து காலை கம்பளிக்குள் நீட்டிண்டு உக்காந்தேன்.4மணிக்கு லேசா
கால் வலிக்க ஆரம்பிச்சுடுத்து. நான் எப்பவுமே பெயின்பாம் எல்லாம் கையோட கொண்டுபோயிடுவேன். கால்கட்டை விரலில் ஆரம்பித்து மெள்ள, மெள்ள முட்டி வரை விரு,விருஎன்று வலி ஏற ஆரம்பித்து விட்டது. வலி மட்டும் ஆரம்பித்து விட்டால் என்னை ஒரு வழிபண்ணிடும். அதுவும் இன்று ரொம்பவே ஸ்டெயின் பன்ணிண்டு 14கிலோ மீட்டர் ஏறி வந்து
காலுக்கு ரொபவே வேலை கொடுத்திருக்கேன். அது என்னை சும்மா விடுமா?வலி ஆரம்பித்துவிட்டால் நிக்கவோ, படுக்கவோ முடியவேமுடியாது.

Tuesday, December 14, 2010

Tuesday, December 14, 2010

ஹிமாச்சல்பிரதேஷ்(2)

                                                                      ஹிமாச்சல் ப்ரதேஷ். (பகுதி-2.)

மலை அடி வாரத்திலேயே தடிக்கம்பு விற்கிறார்கள். ஆளுக்கு ஒரு கம்பு வாங்கிண்டோம்.ஏற்றப்பாதை இல்லையா கம்பை சப்போர்ட்டுக்கு ஊனிண்டு ஏறலாமே. எல்லாருமே கீழேகம்பு வாங்கிண்டு தான் மலை ஏறுகிறார்கள். நம்மலக்கேஜை சுமப்பதற்கும் கூலி ஆட்கள்கிடைக்கிறார்கள்.4மணிக்கு மலை ஏற ஆரம்பித்தோம்.அகல,அகலமாக படிக்கட்டுகள் கட்டி,
தலைக்கு மேலே தகரத்தினால் கூரையும் போட்டு நல்ல வசதிகள் செய்திருந்தார்கள். மலைஏறுவதுபோலவே இல்லை. ஜாலியாக சிரிச்சு பேசிண்டு தான் ஏற ஆரம்பித்தோம். ஒரொருகிலோமீட்டருக்கும், ஒரு செக் போஸ்ட் வைத்திருக்கா. மெட்டல் டிடெக்டர் கொண்டு எல்லாரையும் செக் பண்ணிதான் மேற்கொண்டு செல்லவே அலவ் பண்ணறா.அப்படியும் இப்படியுமா3 கிலோமீட்டர் வ்ரையும் ஏறிட்டோம். அதுவரை எந்த சிரமமும் தெரியலை.பாதையின் இரண்டுபுரமும், சின்ன,சின்ன கடைகள். பூரா,பூராவும் பாதாம், பிஸ்தா,அக்ரூட்,முந்திரி, பேரீச்சை கிஸ்மிஸ் என்று எல்லாமே ட்ரைஃப்ரூட்ஸ் தான். நாங்கள் எதுவும் வாங்கலை. அந்த வெயிட்டையும்
சுமந்துண்டு எப்படி மலை ஏறமுடியும்?. ஆனா குஜராத்திக்காரா கொஞ்சம்கூட யோசிக்கவே இல்லஎல்லாவற்றிலும் 5, 5 கிலோ வாங்கிண்டா.சுமைதூக்கும் கூலிகளையும் அவர்கள் ஏற்பாடு பண்ணிண்டா.எங்களிடம் என்ன் நீங்க எதுவுமே வாங்கலை, நாம மும்பைல 100 க்ராமுக்கு கொடுக்கற விலையில்
இங்க 1 கிலோ வாங்கிடலாம்.அவ்வளவு சீப் ரேட். அதுவும் தவிர நாங்க எல்லாம் காலை ப்ரேக்பாஸ்ட்டுடன் டெய்லி ஒரு பிடி ட்ரை ஃப்ரூட்ஸ்ம் எடுத்துப்போம். நீங்க எல்லாம் ட்ரைஃப்ரூட்ஸ் சாப்பிடவே
மாட்டீங்களா என்று கேள்வி வேறு கேக்கறா. பொதுவா நம்மள்ள பலபேரு விசேஷ தினங்களில்பாயசமோ, ஸ்வீட்டோ பண்ணினா அதில் கொஞ்சம் முந்திரி,த்ராட்சை நெய்ல வறுத்துபோடுவோம்.தீபாவளிசமயம்னா, பாதாம் அல்வாவோ,வேறு எதுவுமோ ஸ்வீட்பண்ணும் போதுதான் இந்தமாதிரி
ட்ரைஃப்ரூட்ஸ்களை யூஸ் பண்ணறோம். இந்தபக்கம்லாம் சிலபேரு, குழந்தைகளுக்கு காலை டிபனுடன் 2பாதாம், 2பிஸ்தா என்று கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் இவர்கள் போல தினசரி

Thursday, December 9, 2010

Thursday, December 9, 2010

ஹிமாச்சல் பிரதேஷ்(1)

சிரியா கட்டுரையை படிக்கும்போதே நான் போய் வந்த சில வெளி நாடுகளைப்
பற்றி எழுதி அனுப்ப எனக்கும் மிக ஆர்வமாக இருக்கிறது. அவங்களை மாதிரி
அவ்வளவு தெளிவா எழுத வருமா, சந்தேகம்தான்.(புலியைப்பார்த்து பூனையும்
சூடுபோட்டுக்கொள்கிறதது.)
நம்ம ஸௌத்திலேயே பார்த்து ரசிக்க நிரைய இடங்கள் எவ்வளவு இருக்கு.
நான்முதலில் என் ஹிமாச்சல் ப்ரதேச சுற்றுலா விலிருந்து ஆரம்பிக்கிரேன்.
இது வெற்றிகரமாக எழுதி முடித்தால், ஆப்ரிக்கா,சிங்கப்பூர், ஹாங்காங்க்,
ஜப்பான் சுற்றுலாக்கள்பற்றி எழுதலாம் என்றிருக்கிரேன்.

Tuesday, November 23, 2010

Tuesday, November 23, 2010

just for fun



கொஞ்ச நாட்கள் முன்பு ஒரு பண்டிகை நாளில்(சதுர்த்தியோ,ஜன்மாஷ்ட்மியோி நினைவில்லை)

என்ஃப்ரெண்ட் வீட்டில் சமயலுக்கு கத்தரிக்காய் கட்செய்தப்போ

மேலே உள்ளதுபோல ஓம் என்று ஹிந்தியில் தெரிந்ததாம்.

இது ஒருஆச்சர்யமான விஷயமாகத்தோன்றவே செல்லில்

போட்டோ எடுத்து எனக்கும் அனுப்பினா. நானும் சில ஃப்ரெண்ட்ஸ்

களுக்கு அதை அனுப்பினேன். அன்று அவ வீ்ட்டில் நட்ந்த விஷயங்களை

பொனில் சொல்லிசொல்லி ஒரே சிரிப்பு.


Thursday, November 18, 2010

Thursday, November 18, 2010

week end.




ஒருதடவை நான் என்ப்ஃரெண்ட்வீட்டுக்குப்பொயிருந்தப்போ, எப்ப பாத்தாலும்

சினிமா, பீச், மால் என்றே சுத்திருக்கோம். இந்ததடவை கொஞ்சம் வித்யாசமா

ஒரு இடம்போலாம்னு, என்னை க்கூட்டிப்போனா. மும்பையில் கல்யாண்,பிவண்டி

என்னும் இடங்களுக்கு நடுவில் ஒரு பெரிய மைதானம் இருக்கு. அங்கே போனோம்.

(chokhi dhani) சோக்கிதானி என்கிரபெயரில் ராஜஸ்தானிகளுடைய( மார்வாடி) பாரம்பர்யம் கலைகள், உடைகள், பழக்கவழக்கங்களை பொதுஜனங்களுக்கு காட்சியாக்கி இருந்தார்கள்.

முதலில் நுழைவாயிலே அவர்களின் கட்டட்டக்கலைக்கு சாட்சியாக அருமையாக வடிவமைத்திருந்தார்கள்.

வருபவர்களை அவர்களின் சங்கீதம், நாட்டியங்களுடன் உற்சாக

வரவேற்பு. உள்ளே போனதும் எண்ட்ரன்ஸ் டிக்கட் வாங்க ஒருபெரிய க்யூ.



Monday, November 1, 2010

Monday, November 1, 2010

சில நம்பிக்கைகள்.

எங்கேன்ஜ் மெண்ட் ரிங்க் மோதிர விரலில் ஏன் போடுராங்க?




தெரிஞ்சுக்கலாமா? வாங்க.

முதல்ல உள்ளங்கைரெண்டையும் சேத்து சாமி கும்பிடுவதுபோல வைங்க.

வைச்சீங்களா? இப்போ நடுவிரலைஉள்ளங்கையை தொடுவதுபோல உள்ள

மடக்கி வைங்க. பாக்கி நாலுவிரல்களையும் சேத்து கும்பிடு வதுபோல ஒட்டி

வைங்க.ஆச்சா? இப்ப முதல்ல ரெண்டுகட்டை விரல்களையும் கொஞ்சமா விலக்கிட்டு திரும்பவும் ஒட்டவச்சுக்குங்க. அடுத்து ஆள்காட்டி விரல்களையும்

அதுபோலவே கொஞ்சம் விலக்கிட்டு திரும்ப ஒட்ட வச்சுக்குங்க. அடுத்து

சுட்டுவிரலையும் அதேபோல விலக்கி, சேருங்க. இப்ப மோதிர விரலையும் விலக்கி சேருங்க.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!. என்னங்க முடியலை இல்லியா?

Wednesday, September 1, 2010

Wednesday, September 1, 2010

கொஞ்சம் சிரிங்க..

ஆனந்தம் துள்ளும் நுரை ததும்பும் காதல்கதை இது. நெட்டில் படித்ததில் பிடித்தது.

காதலி ரேக்சொனவும் காதலன் சிந்தாலும் ஒருவரையொருவர் மனமார நேசித்தனர்.

இருவரும் அறிமுகமானது பவர் தெருவில் உள்ள லிரில் ஜிம்மில்

ரெக்சின் பெற்றோர் விவேல்,மார்கோ மற்றும் சிந்தலின் பெற்றோர் ஏ ரியல்,நிர்மா.

காதலுக்குத் தடைபோடவில்லை . எதிர்பார்த்தபடி சிந்தால் தன் லைஃபாய் ஆக




(வாழ்க்கைத்துணையாக) வருவதில்ரேக்சுக்கு கொள்ளை மகிழ்ச்சி.

மெடிமிக்ஸ் டவுனில் ஸந்தூர் தியேட்டருக்கு எதிரிலுள்ள பேர்&லவ்லி தோட்டத்தில்

கல்யாணம் நடக்க ஏற்பாடாயிற்று.




குட்டி க்யுரா அழகுநிலையம் ரேக்சை கனவுமங்கை ஆக்கியது.

மஞ்சள் பெர்க்ளோ மேஹந்தியிட்டு அசத்த ஹமாம்

நலங்கு நடத்தி கலகலக்கவைத்தாள். நண்பர்கள் குழாம் லக்ஸ், டவ், சாவ்லான், பா,

டெட்டால், நிவியா , சந்திரிகா முதலானோர் வந்திருந்து அழகுக்கு அழகு சேர்த்தனர்.

தென் நிலவுக்கு இருவரும் சன்லைட் தீவில் ப்ரீஸ் காட்டேஜில் தங்கிக் கொண்டு

கடலில் சர்ப் செய்து மகிழ்ந்தனர்.

தங்களது பியர்ஸ் கனவு மாளிகையில் தனிக்குடித்தனம் ஆரம்பித்தனர்.

அடுத்த வருடம் இருவர் நால்வராயினர் . ஆம் அவர்களுக்குப் பிறந்தது இரட்டையர்

ஜான்சன்ஸ்&ஜான்சன் .

Tuesday, August 31, 2010

Tuesday, August 31, 2010

for kids

 PACK MY BOX WITH FIVE DOZEN JUGS OF LIQOR

one1, two2, three3 four4, five5

        3, 8, 7,   A,    Q,  6,  4,  2,   J,  K,  10,   9,  5.

          IN THE  YEAR 387,  THERE LIVED  ONE QU EEN.  HER AGE  WAS  64.  SHE HAD
       
          TWO SONS  ONE OF THE SONS  NAME WAS JACK.  AND THE  SONS NAME WAS KING.

             JACK' AGE WAS  10,  AND KING'S  AGE WAS 14.

Monday, August 30, 2010

Monday, August 30, 2010

எப்படிபேசணும்?

அன்பாகப் பேசுக.

இனிமையாகப் பேசுக.

உண்மையே பேசுக.

நன்மையே பேசுக.

மெதுவாகப்பேசுக.

சிந்தித்துப்பேசுக.

சமயமறிந்து பேசுக.

சபையறிந்து பேசுக.

பேசாதிருந்து பழகுக.

ரசிக்க.சிரிக்க.

ஜான வாசம். 20 குழந்தைகளின் நடுவே 30 வயதுக்குழந்தை காரில் செல்லும்

வைபவம்.

நலங்கு. கணவன் மனைவியின் காலைப்பிடிக்கும் அத்யாயத்தின் தொடக்கம்.

கேஸ் லைட். ஊர்வலம் முடிந்த பிறகும் வந்து சேராதது.

திருமண சத்திரம். மாப்பிள்ளையை விட கிராக்கி மிகுந்தது.




தொண்டைக்கட்டு. பாடத்தெரிந்த பெண்களுக்கெல்லாம் திரும ணத்தன்று

வரும் திடீர் வியாதி.

புரோகிதர். எல்லா போட்டோவிலும் நிச்சயமாக இருப்பவர்.

பழமொழிகள்.

 வாழ்க்கையில்முன்னேற வேண்டுமா? உன் கால்களாலேயே நடந்து போ.
 ஆரோக்கியமும் அறிவும் வாழ்வின் இரு பெரும் பேறுகள்.

  அறிந்து கொண்டதே அறிவு, அதற்கு வழியும், வலிவும் கொடுப்பது புத்தி.

  வரங்களை இறைவன் விற்பனை செய்கிறார். முயற்சியே அதற்கு விலை.

சோம்பல், வேலை செய்வதற்கு முன் எடுத்துக்கொள்ளும் ஓய்வு.

அனுபவம், வழுக்கை விழுந்த பிறகு  வாழ்க்கையில் கிடைக்கும் சீப்பு.

உத்தரவால் வாழ்கிரான் பணக்காரன். உழைத்து வாழ்கிரான் ஏழை.

தாயின் இதயம் என்றுமே வாடாத மலர்ந்த மலர்.

ஒரு தந்தைக்கு தம் முதிய பருவத்தில் மகனை விட பிரியமானது எதுவுமில்லை.

முடி்ந்hதவன் சாதிக்கிரான். முடியாதவன் போதிக்கிரான்.


பேசாத வார்த்தைக்கு நீஎஜமான். பேசிய வார்த்தை உனக்கு எஜமான்.

இன்றே சிரியுங்கள் நாளை இன்னமும் மோசமா இருக்கலாmம்.