Sunday, March 27, 2011

Sunday, March 27, 2011

மெஹந்தி பார்ட்டி



திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் மறக்க முடியாத பரவச நிகழ்வுதான்.சமீபத்தில் என் உறவினர் வீட்டுப் பெண்ணிற்கு திருமணம் நிச்சய மாகி இருந்தது.ஜாதக்பபொறுத்தம், நாள், நட்சத்திரம் எல்லாம் முறையாகப்பார்த்து பெரியோர் களால்நிச்சயிக்கபட்ட அரேன்ஞ்ட் மேரேஜ்தான். பெண்ணின் பெற்றோர் தோஹா(கத்தார்) ரில் 25 வருடங்களாக வேலை பார்த்து வந்தவர்கள்.தங்களொரே பெண்ணின் திருமணத்தை ஆசை, ஆசை யாக வெகு சிறப்பாக நடத்தனும்என்று பார்த்துப், பார்த்து எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தனர்.

Monday, March 21, 2011

Monday, March 21, 2011

மும்பை டு கோவா.(3)



சாயங்காலம் 6 மணிக்கு குழந்தைகளும், ஆண்களும் ஹோட்டலின் பின் புறம்

இருந்த ஸ்விம்மிங்க் பூல் போனார்கள்.லேடீசுக்கு தனியாக டைம் ஒதுக்கி

இருந்தார்கள். அதனால் லேடிஸ் எல்லாருமே அங்கு போட்டிருந்த ஈசி சேரில்

உக்காந்து அரட்டை அடிச்சுண்டு இருந்தோம். சூழ் நிலையே மிகவும் ரம்யமாக

இருந்தது.6 டு 9 வரை நீச்சல் குளியலெல்லாம் முடிந்து கரைஏறினார்கள்.அடுத்து

பசிதானே. நீச்சல் குளத்தைசுற்றிவர டேபிள் சேர் எல்லாம் போட்டு டின்னரும்

அங்கேயே கொண்டு தந்தார்கள்.சூடு, சூடாக பரோட்டா ஆலு பாஜி தால் ரைஸ்

என்று அமர்க்களமான சாப்பாடு. திரும்ப ரூம் கொஞ்ச நேரம்டி.வி.11மணிதூக்கம்.

Tuesday, March 15, 2011

Tuesday, March 15, 2011

மும்பை டு கோவா.(2)

மறு நாள் காலை பீச் போகாமல் ஒரு கால் டாக்சி புக் பண்ணி ஊர் சுத்தி
பாக்க கிளம்பினோம்.ரூம்லெயே குளித்து கரக்டாக 8 மணிக்கு கிளம்பினோம்
பெரிய டூரிஸ்ட் ப்ளேஸ்னு சொல்ராங்க. ஊர் அப்படி ஒன்னும் சுத்தமாவே
 இல்லை. திரும்பின பக்கமெல்லாம் கடல்தான். மீன் பிடிக்கும் வலைகளை
பக்கம் பக்கமா காய வைத்திருந்தார்கள். ஊர் பூராவும் மீன் நாத்தம் தாங்கலை.
ஒரு ஃப்ரெண்ட் ஃபேமிலி பெங்காலிக்காரா. அவங்களைப்பொறுத்தவரை மீன்
வெஜிடேரியனாம். அவங்க கல்யாணங்களில் கூட முதல் பூஜை மறியாதை
 பெரிய மீனுக்குத்தான் செய்வார்களாம்.

Friday, March 11, 2011

Friday, March 11, 2011

மும்பை டு கோவா.(1)

கொஞ்ச நாட்கள் முன்பு நாங்கள் நண்பர்கள்10 பேர்கள் மும்பைலேந்து கோவா
சுற்றுலா ஒரு வாரத்திற்கு போய் வந்தோம். இரவு12 மணிக்கு சத்ரபதி சிவாஜி
டெர்மினசிலிருந்து ட்ரெயினில்போனோம்.குழந்தைகள் 4 பேர், பெரியவர்கள்
6 பேர்.3 டயர் ஸ்லீப்பரில் புக் பண்ணியிருந்தார்கள்.வண்டி சரியான நேரத்தில்
 கிளம்பியது.இரவு நேரம் ஆதலால் அவரவர்கள் சீட்டில் ஏறி படுத்து விட்டோம்.
ரயிலின் சுகமான தாலாட்டில் இயற்கையான காற்றி சுகத்தில் எல்லாருமே
நன்கு தூங்கினோம்.

Tuesday, March 1, 2011

Tuesday, March 1, 2011

இந்தியன்.



இந்தியன்.

இந்தாப்பா, சர்வர், அந்தஃபேனைப்போடுப்பா. அப்பாடா என்ன வெய்யில், என்ன வெயில்.ஃபேனில் இருந்து வீசிய காற்றுக்கூட அனலாக தகித்தது. ஷர்ட்டின் முதல் பாட்டனைதளர்த்திக்கொண்டு,காலரை பின்னுக்குத்தள்ளிக்கொண்டுசேரில் சௌகரியமாகச்சாய்ந்து
கொண்ட அந்த நாகரீக பணக்கார மனிதர்களும், சர்வர், ஜில்லுனு என்னப்பா இருக்குஎன்றனர்.