குக் ”ஜி” &பேடாகாட்
சாய்குடிச்சுட்டு எல்லாரும் அங்கயே பெரிய போர்வையை விரித்துகொண்டு
கீழே உக்காந்துபேசிக்கொனிருந்தோம். அவரவர்கள் அறிமுகம், 2வயதில் ஒரு
குட்டிப்பையன்,எல்லாரிடமும் வேத்துமுகம் இல்லாமல் வந்து விளையாடிக்
கொண்டிருந்தான்.15வயதில் ஒருபையன், 10 வயதில் ஒரு பெண், 7 வயதில் ஒருபையன் என்று குழந்தைகள் ஒடிபிடிச்சு விளையாடிக்கொண்டிருந்தார்கள். நாங்கமார்பிள் ஷோபீஸ் எல்லாருமே நிறைய வாங்கினோம். ரொம்ப அழகாக இருந்தது.அப்படியும் இப்படியுமாக 9 மணீயே ஆச்சு.எல்லாருமே கையில் சாப்பாடு கொண்டுவந்திருந்தார்கள். டெம்போகாரர்களையும் எங்க கூட சாப்பிடக்கூப்பிட்டோம். ரொம்பசந்தோஷமாக வந்தார்கள். நாராயன் ஜி நல்ல தாராளமாகவே சாப்பாடு வைத்திருந்தார்.

