Showing posts with label கற்பனை. Show all posts
Showing posts with label கற்பனை. Show all posts

Wednesday, September 1, 2010

Wednesday, September 1, 2010

கொஞ்சம் சிரிங்க..

ஆனந்தம் துள்ளும் நுரை ததும்பும் காதல்கதை இது. நெட்டில் படித்ததில் பிடித்தது.

காதலி ரேக்சொனவும் காதலன் சிந்தாலும் ஒருவரையொருவர் மனமார நேசித்தனர்.

இருவரும் அறிமுகமானது பவர் தெருவில் உள்ள லிரில் ஜிம்மில்

ரெக்சின் பெற்றோர் விவேல்,மார்கோ மற்றும் சிந்தலின் பெற்றோர் ஏ ரியல்,நிர்மா.

காதலுக்குத் தடைபோடவில்லை . எதிர்பார்த்தபடி சிந்தால் தன் லைஃபாய் ஆக




(வாழ்க்கைத்துணையாக) வருவதில்ரேக்சுக்கு கொள்ளை மகிழ்ச்சி.

மெடிமிக்ஸ் டவுனில் ஸந்தூர் தியேட்டருக்கு எதிரிலுள்ள பேர்&லவ்லி தோட்டத்தில்

கல்யாணம் நடக்க ஏற்பாடாயிற்று.




குட்டி க்யுரா அழகுநிலையம் ரேக்சை கனவுமங்கை ஆக்கியது.

மஞ்சள் பெர்க்ளோ மேஹந்தியிட்டு அசத்த ஹமாம்

நலங்கு நடத்தி கலகலக்கவைத்தாள். நண்பர்கள் குழாம் லக்ஸ், டவ், சாவ்லான், பா,

டெட்டால், நிவியா , சந்திரிகா முதலானோர் வந்திருந்து அழகுக்கு அழகு சேர்த்தனர்.

தென் நிலவுக்கு இருவரும் சன்லைட் தீவில் ப்ரீஸ் காட்டேஜில் தங்கிக் கொண்டு

கடலில் சர்ப் செய்து மகிழ்ந்தனர்.

தங்களது பியர்ஸ் கனவு மாளிகையில் தனிக்குடித்தனம் ஆரம்பித்தனர்.

அடுத்த வருடம் இருவர் நால்வராயினர் . ஆம் அவர்களுக்குப் பிறந்தது இரட்டையர்

ஜான்சன்ஸ்&ஜான்சன் .