Friday, March 11, 2011

Friday, March 11, 2011

மும்பை டு கோவா.(1)

கொஞ்ச நாட்கள் முன்பு நாங்கள் நண்பர்கள்10 பேர்கள் மும்பைலேந்து கோவா
சுற்றுலா ஒரு வாரத்திற்கு போய் வந்தோம். இரவு12 மணிக்கு சத்ரபதி சிவாஜி
டெர்மினசிலிருந்து ட்ரெயினில்போனோம்.குழந்தைகள் 4 பேர், பெரியவர்கள்
6 பேர்.3 டயர் ஸ்லீப்பரில் புக் பண்ணியிருந்தார்கள்.வண்டி சரியான நேரத்தில்
 கிளம்பியது.இரவு நேரம் ஆதலால் அவரவர்கள் சீட்டில் ஏறி படுத்து விட்டோம்.
ரயிலின் சுகமான தாலாட்டில் இயற்கையான காற்றி சுகத்தில் எல்லாருமே
நன்கு தூங்கினோம்.
கொங்கன் எக்ஸ்ப்ரெஸ் அல்லது மட்காவ் எக்ஸ்ப்ரெஸ்னு பேர்.7மணி நேரம்
பிரயாணம் செய்து காலை 7மணிக்கு ”திவிம்”என்னும் குட்டி ஸ்டேஷனில்
இறங்கினோம்.3 டாக்சி பிடித்து கோவாபோனோம். கிட்டத்தட்ட 30, 35 கிலோ
 மீட்டர்தூரம்.8மணிக்கு கிளம்பி 10 மணி போய்ச்சேர்ந்தோம்.கோவா பிரபல
டூரிஸ்ட் ப்ளேஸ் என்று கேள்விபட்டிருந்தேன். சுத்திவர கடல் அலைகளின்
 ரீங்காரம் கேட்டுக்கொண்டே இருந்தது. எல்லாமே பீச் ரிசார்ட்டுகள் தான்.

 ஹோட்டல் ஜெர்மனியில் 3 ரூம் புக் பண்ணி இருந்தோம். எல்லாமே இண்டெர்னெட் மூலம்தான்.ஒரு ரூமில் 3 பேர்தான் தங்கலாமாம்.அதனால3ரூம்
புக் பண்ணினோம். ரூம் எல்லாமே விசாலமா நல்லாவே இருந்தது.டி.வி.ப்ரிட்ஜ்
எல்லாம் இருந்தது.ப்ரிட்ஜை திறந்துபாத்தா ஃபுல், ஃபுல்லா பியர் பாட்டில் அடுக்கி
வச்சிருக்கு.கரெண்ட் எல்லாம் ஸோலார் பவரில்தான் ஓடரது.எல்லா பார்மாலிட்டீசும் முடிய 12மணி ஆச்சு. குழந்தைகள் எல்லாருமே பசி, பசின்னு
ஆரம்பிச்சா.யாருக்குமே வெளில போயி சாப்பிட மூடில்லை.

ரூம் சர்வீசுக்கு போன் பண்ணி லஞ்ச் ஆர்டர் பண்ணினோம். 1 மணிக்கு சாப்பாடு
வந்தது. எல்லாரும் ஒரே ரூமில் ஒன்றாக உட்காந்து பேசி, அரட்டை அடிச்சுன்டே
சாப்பிட்டோம்.சாப்பாடு பரவால்லை ரகம்.குழந்தைகள் டி.வி. ஆன் பண்ணிட்டு
கார்ட்டூன் பார்த்தார்கள். லேடீசெல்லாரும் ஒரு ரூமில் அரட்டை. ஜெண்ட்ஸ்
எல்லாரும் இன்னொரு ரூமில் அரட்டை.5மணிக்கு டீ ஆர்டர் பண்ணி குடிச்சுட்டு
பீச் போனோம்.

நல்ல பெரிய பீச் கடல் தண்ணியில் கால் நனைத்து சிப்பி பொருக்கி குழந்தைகள்
ஓடி விளையாடி மகிழ்ந்தார்கள்.பெரியவர்களும் கால் நனைத்து மகிழ்ந்தார்கள்.
 நேரம் போனதே தெரியலை.8 மணி திரும்ப ரூம். ரிசப்ஷனில் கொஞ்சம் பேப்பர்
 படித்து ஹோட்டலை சுற்றிப்பார்த்தோம்.பின் புறம் பெரிய ஸ்விம்மிங்க் பூல்
இருந்தது, சுற்றிவர மரத்தாலும் குஷனாலும் நிறைய ஈசி சேர்கள் போட்டிருந்தா.
அதில் அமர்ந்து கொஞ்ச் நேரம் வேடிக்கை. அந்த நேரத்திலும் சிலர் ஸ்விம்மிங்க்
பூலில் குளித்துக்கொண்டிருந்தனர்.

இரவு சாப்பாடும் ரூம் சர்வீசுக்கே சொல்லி சாப்பிட்டு 11 படுத்தாச்சு. நாளை ஊர்
சுற்றி பார்க்கபோலாம்னு பேசிண்டே தூங்கியாச்சு.மறு நாள்காலை 7மணிக்கு
 எழுந்து காபி குடிச்சு எல்லாருமே குளிக்க கடற் கரை போனோம்.கடலில் இறங்கி
 குளிக்க ஆரம்பித்ததும் எல்லார் மனதிலும் அப்படி ஒரு உற்சாகம், சந்தோஷம்.
அலை வரும்போது குனிந்து, நிமிந்து எல்லாரும் குதி ஆட்டம்தான். இப்போ
பெரிய அலை வரும் பாரு, இப்போ சின்ன அலை வரும் பாருன்னு பெட் கட்டி
ஆரவாரமான குளியல். பெரியவர்களும் குழந்தைகளாகி விட்டனர்.

டயம் பாக்கவே தோனலை. வயறு கூப்பிடுமே. 12மணி ஆனதே தெரியாம அப்படி
ஒரு சமுத்ர ஸ்னானம்.ஈரத்துணியோடே ரூம் வந்து நல்ல தண்ணியில் திரும்ப
வும் ஒரு குளியல். துணிகளில் பூராவும் உப்பும் ,மண்லும் நிரம்பி இருந்தது.
அதையெல்லாம் துவைக்கனுமே? லேடீஸ் எல்லாருமே ஆளுக்கொரு வேலை
 செய்து வெளியில் கொடிகட்டி துணிகளை காயப்போட்டார்கள்,லஞ்ச் சாப்பிட
டைனிங் ஹால் போனோம். ஆளுக்கொரு ஐட்டம் ஆர்டர் பண்ணி சாப்பிட்டு
 முடிக்கவே 3 மணி ஆச்சு. இவ்வளவு நேரத்திற்குப்பிறகு ஊர்சுத்தி பாக்க போக
 முடியாது. பக்கத்தில் ஏதானும் பாக்கவேண்டிய சின்ன இடங்கள் இருந்தா போலாம் என்று5 மணீக்கு காலார ஒரு வாக்


8 comments:

தமிழ்வாசி - Prakash said...

அனுபவங்கள் வரவேற்கப்படுகிறது...

எனது வலைபூவில் இன்று:ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ

♔ம.தி.சுதா♔ said...

கவனமுங்க... சளி பிடிக்கலியா ?

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..

Chitra said...

ஜாலியான ஒரு பதிவு.. தொடருங்க...

எல் கே said...

எதோ நண்பர் ஒருவர் பேச்சு வாக்கில் விவரிப்பது போல் உள்ளது உங்கள் நடை. தொடருங்கள்

komu said...

தமிழ்வாசி வருகைக்கு நன்றி.

komu said...

ம.தி.சுதா வருகைக்கு நன்றி.

komu said...

சித்ரா நன்றி.

komu said...

கார்த்திக் பாராட்டுக்கு நன்றி.