Saturday, January 29, 2011

Saturday, January 29, 2011

குக் ”ஜி” & பேடாகாட்(2)



குக் ”ஜி” & பேடா காட்(2)




மறு நாள் கோபு காலை எழுந்து ஷேவ்பண்ணி குளித்து8-மணிக்குடைனிங்க்

ஹால் வந்தான்.கிரிஜாவும் கூடவே வந்தாள். நாராயன் ஜி நேற்று போலவே

ப்ரெட் டோஸ்ட் பண்ணி வெண்ணை தடவி,ஜாம் தடவி கொடுத்தார்.சாயும்

கொடுத்தார். 8.30-க்கு ஆபீசிலிருந்து கோபுவைக்கூட்டிப்போக கார் வந்தது.

கோபு கிளம்பி போனதும் கிரிஜா கிச்சனில் நாரயன் ஜியுடன் பெச்சுக்கொடுதுக்

கொண்டே வந்தாள். கிச்சனையும் சுத்தமாகவே வைத்திருந்தார். அவரையும்

டிபன் சாப்பிடச்சொன்னாள். அவரும் சாப்பிட்டு பாத்திரங்களை ஒழுத்து சிங்கில்போட்டுவிட்டு, மேம் சாப் லஞ்சுக்கு என்ன சாப்டுரீங்க?என்ரார். நாராயன் ஜி நீங்கஎதுபண்ணினாலும் ஓ. கே தான். என்றாள்.

Thursday, January 27, 2011

Thursday, January 27, 2011

குக் ”ஜி” & பேடாகாட். (1)

                     குக் ”ஜி”   &       பேடாகாட்.
  உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதியது இந்தக்கதை.

 கோபு,கிரிஜா மணமாகி 6-மாதங்களே ஆன புது தம்பதிகள். கோபு நாக்பூரில்
 வேலை பார்த்து வந்தான். கிரிஜா ஹௌஸ் ஒய்ஃப். கோபுவுக்கு ஆபீசில்
 ஒரு 10  நாட்களுக்கு டெபுடேஷனில் ஜபல்பூர் போகும்படி ஆர்டர் வந்தது,புதுமனைவியை எப்படி தனியாக விட்டுப்போவது என்று பெரிய ஆபீசரிடம்
 ரிக்வெஸ்ட் பண்ணீ அவளையும் கூட்டிப்போக பர்மிஷன் வாங்கினான்.இருவரும் கிளம்பி ஒரு விடி காலை நேரம் ஜபல்பூர் போய்ச்சேர்ந்தார்கள்.
 சிட்டியை விட்டு 30. 40 கிலோ மீட்டர் உள்ளே தள்ளீ இருந்தது ஆபீஸ். அங்குஅவர்கள் தங்குவதற்கு ஆபீசின்கெஸ்ட்ஹவுசில்இடம்கொடுத்திருந்தார்கள்.

Saturday, January 22, 2011

Saturday, January 22, 2011

ஆல்பம்






ஆல்பம்.




ப்ளாக்கில் நான் எழுதும் முதல் கதை.




தெரிந்தவர்கள் வீட்டில் போனமாதம் ஒருகல்யாணம் இருந்தது.வாசுவாலும் லதாவாலும்அதில் கலந்துக்கமுடியாமல் போச்சு. அதனால் ஒருசண்டே லீவு நாளில் அவர்கள் வீட்டில்கல்யாணம் விசாரிக்கப்போனார்கள். காபி,ஸ்னாக்ஸுடன் தடபுடலான வரவேற்பு. பின்பு

அந்தவீட்டு மாமியும் புதுமாட்டுப்பெண்ணீடம் சுபா, இவா ரெண்டுபேரும் கல்யாணத்துக்குவரலை. அந்தபோட்டோ ஆல்பத்தை எடுத்துண்டு வந்து காட்டுன்னாங்க. மருமகளும் உள்ளே

இருந்து ஆல்பம் கொண்டுதந்தா. எங்க இரு புரமும் மாமியும் மருமகளும் உக்காந்தாங்க. நாங்கஆர்வமுடன் ஆல்பம் பாக்க ஆரம்பித்தோம். நல்ல ஆடம்பரமாக, நிறைய செலவு செய்து க்ராண்ட்டாக கல்யாணம் செய்திருப்பது ஆல்பத்திலேயே தெரிந்தது. மாப்பிள்ளை பெண்ணின் ட்ரெஸ்ஸிலிருந்து, நகை நட்டுக்கள் வரை நல்ல பணம் விளையாடி இருந்தது.


Sunday, January 9, 2011

Sunday, January 9, 2011

ஹிமாச்சல்பிரதேஷ்(கடைசி பகுதி)

ஹிமாச்சல் ப்ரதேஷ்(பகுதி6) (கடைசி பகுதி)

இன்று கிளம்பணும் என்று எல்லாரும்7மணிக்கே எழுந்து ப்ரெக்ஃபாஸ்ட்டுக்காக டைனிங்க்ஹால்போனோம். அங்கு வட்டமாக உக்காந்து நேற்றுபோய் வந்த இடங்களைப்பற்றி பேசிக்
கொண்டிருந்தோம். பஞ்சாப் த்லை நகர் சண்டிகரிலிருந்து235 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதுபொற்கோவில்.சுற்றுலா வரும் எல்லா பயணிகளும் தவறாமல் பொற்கோவில் வருகிறார்கள்.குரு அர்ஜுன் தேவ் அவர்களால் 1588-ம் ஆண்டு இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது.சீக்கிய
மத வழிபாட்டின் மையமாக இவ்வாலயம் உருவாக்கப்பட்டது.

Sunday, January 2, 2011

Sunday, January 2, 2011

ஹிமாச்சல்பிரதேஷ்(5)

ஹிமாச்சல்ப்ரதெஷ்.(பகுதி-5)




காலை எல்லாரும் சீக்கிரமே எழுந்தோம். இன்று கிளம்பணுமே? நேற்று போல இன்றுபனிப்பொழிவு இல்லை. ஆனாலும் செமை குளிர்.8மணிக்கு கிளம்பினோம். வளைந்துவளைந்து செல்லும் ரோட்டின் இரு புறமும் நீண்டு, நெடிதுயர்ந்த பச்சை,பசேல் மரங்கள்அணிவகுத்து வரிசையாக இருந்தன.சிறிதுதூரம் சென்றதும் தர்மசாலா என்று ஒரு இடம்வந்தது.அங்குபூராவும்திபேத்தியர்களின்கட்டுப்பாட்டில்இருக்கிறது.கொவில்,ஸ்கூல், வீடுகள் எல்லமே திபேத்திய கலாச்சாரம்.பெண்கள் கலர்,கலராக, உடலை சுற்றி,சுற்றி உடை அணிகிறார்கள். சிறுவர்,பெரியவர்,ஆண்கள் தலாய் லாமா ஸ்டைலில் உடலைச்சுற்றி டார்க் ப்ரௌன்கலரில் உடை அணிகிறார்கள்.ஆண்கள் தலை முடியும் முழுவதும் மழித்து விடுகிறார்கள்..