Monday, March 21, 2011

Monday, March 21, 2011

மும்பை டு கோவா.(3)சாயங்காலம் 6 மணிக்கு குழந்தைகளும், ஆண்களும் ஹோட்டலின் பின் புறம்

இருந்த ஸ்விம்மிங்க் பூல் போனார்கள்.லேடீசுக்கு தனியாக டைம் ஒதுக்கி

இருந்தார்கள். அதனால் லேடிஸ் எல்லாருமே அங்கு போட்டிருந்த ஈசி சேரில்

உக்காந்து அரட்டை அடிச்சுண்டு இருந்தோம். சூழ் நிலையே மிகவும் ரம்யமாக

இருந்தது.6 டு 9 வரை நீச்சல் குளியலெல்லாம் முடிந்து கரைஏறினார்கள்.அடுத்து

பசிதானே. நீச்சல் குளத்தைசுற்றிவர டேபிள் சேர் எல்லாம் போட்டு டின்னரும்

அங்கேயே கொண்டு தந்தார்கள்.சூடு, சூடாக பரோட்டா ஆலு பாஜி தால் ரைஸ்

என்று அமர்க்களமான சாப்பாடு. திரும்ப ரூம் கொஞ்ச நேரம்டி.வி.11மணிதூக்கம்.
மறு நாள் இன்னும் கொஞ்சம் தள்ளி இருந்த கொலங்கோட் பீச் போனோம்.

நிறைய ஃபாரினர்ஸ்தான் தென்பட்டார்கள். பீச்சை சுற்றிவரஇருந்த கேரளா 

ஆயுர் வேத மஸாஜ் பார்லர்களில் வழிய. வழிய எண்ணை தடவிண்டு மேலே

கையகலதுணி, கீழே கையகலதுணி போட்டுண்டு மணலில் சின்ன துண்டு

விரித்து ஸன் பாத் எடுக்கிரார்கள். நாமல்லாம் வெள்ளைதோலுக்கு ஆசைப்பட்டு 

சிகப்பழகு க்ரீமா காலி பண்ரோம்,அவங்கல்லாம் ப்ரௌன்கலருக்காக இப்படி 

வேகாத வெய்யில்ல காயராங்க.ஆக எல்லாருக்குமே கலர் காம்ளெக்ஸ் 

இருக்கும்போல.
எல்லாரும் சமுத்ர ஸ்னானம் 3 மணி நேரங்கள் அலுக்காம குளிக்கமுடிகிரது. 

அலையும் அவ்வளவா இல்லை. கரை ஏறலாம்னு தோணவே மாட்டேங்குது.

11 மணிக்கு ரூம்போயி நல்லதண்ணீரில் ஷவர் குளியல். துணிகள் துவைத்து

காயப்போட்டு டைனிங்க் போனோம்.பெங்காலிக்கார நண்பர்களுக்கு தொடர்ன்

து ரெண்டு நாளா வெஜிடேரியன் சாப்பாடே சாப்பிட்டு போராச்சாம்.அதனால

அவங்கமட்டும் வெளில வேர ஹோட்டல் போயி நான்வெஜ் சாப்பிட போனாங்க. 

நாங்க சாப்பாடு முடிந்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு சாயங்காலம் 

எல்லாரும் சுத்திப்பாக்கப்போனோம்.
அங்கே இருக்கும் பெரிய மார்க்கெட் போனோம். என்னகூட்டம் அதுவும்

அங்கயும் ஃபாரினர்ஸ்கூட்டம்தான். காசு பத்தியே கவலைப்படாம கடைக்காரன் 

என்ன விலை சொரானோ அதைகொடுத்து சாமான் வாங்கிபோராங்க. அதனால 

நம்மகிட்டயும் ஏகத்துக்கு விலை ஏத்தியே சொல்ராங்க கடைக்காரங்க.முந்திரி 

பருப்பு தோலோடு ஃப்ரெஷ்ஷா நல்லா கிடைக்குது.குழந்தைகளுக்கு ட்ரெஸ் 

,சப்பல் எல்லாமே வெரைட்டியா கிடைக்குது ஷாப்பிங்க் பண்ணும்படி 

அவ்வளவா எதுவுமே கண்ல படலை.

ஊரும் அப்படி ஒன்னும் பெரிசாவும் இல்லை சுத்தமாவும் இல்லை. நாங்க

ஒரு வாரம் தங்கரதா ப்ளான் போட்டிருந்தோம் 4 நாளுக்கு மேல தங்கவே 

முடியலை. காலி பண்ணிட்டு கிளம்பிட்டோம். இதைவிட மும்பைலயே பாக்க 

வேண்டிய இடங்கள் நிறையாவே இருக்கு.

7 comments:

எல் கே said...

கோவால இருந்து சீக்கிரம் கிளம்பின ஆட்கள் நீங்களாதான் இருப்பீங்க

komu said...

ஆமா, அது என்னமோ கோவா பிடிக்காமப்போச்சு.

vanathy said...

கோமு, நல்லா இருக்கு உங்க டூர். வெள்ளையர்களுக்கு ப்ரௌன் ஸ்கின் ரொம்ப பிடிக்கும்.
படங்களில் சுத்தமான இடம் போல காட்டுவார்களே!!!

komu said...

வானதி வருகைக்கு நன்றி. எல்லாருக்கும்
கோவா பிடிக்கும்.
எனக்கு பிடிக்கலை.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. என் நண்பர் ஒருவர் கூட கோவா பிடிக்கவில்லை என சீக்கிரம் திரும்பி வந்தார். பெரும்பாலான சுற்றுலாத் தலங்களில் இது போல வெளிநாட்டவரையும், வெளி மாநிலத்தினரையும் ஏமாற்றும் வியாபாரிகள் தான் அதிகம். பகிர்வுக்கு நன்றி.

komu said...

வெங்கட் நாக ராஜ் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நம்ம கன்யாகுமாரி பக்கமும் இப்படித்தான் வியாபார ஸ்தலங்களாகவே மாறி விட்டது.

Ramani said...

தாங்கள் சொல்ல நினைப்பதை
படிப்பவர்களும் உணரும்படி மிக மிக
அருமையாக எழுதுகிறீர்கள்
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்