Tuesday, March 1, 2011

Tuesday, March 1, 2011

இந்தியன்.



இந்தியன்.

இந்தாப்பா, சர்வர், அந்தஃபேனைப்போடுப்பா. அப்பாடா என்ன வெய்யில், என்ன வெயில்.ஃபேனில் இருந்து வீசிய காற்றுக்கூட அனலாக தகித்தது. ஷர்ட்டின் முதல் பாட்டனைதளர்த்திக்கொண்டு,காலரை பின்னுக்குத்தள்ளிக்கொண்டுசேரில் சௌகரியமாகச்சாய்ந்து
கொண்ட அந்த நாகரீக பணக்கார மனிதர்களும், சர்வர், ஜில்லுனு என்னப்பா இருக்குஎன்றனர்.



சார், ஐஸ்க்ரீம்,ஃப்ரூட் சாலட், கஸ்டர்ட்ஃப்ரூட் ஆரஞ்ச், லெமன் பைனாப்பில் ஜூஸ்இருக்கு. என்ன சாப்பிடரீங்கன்னு சர்வர் சங்கர் கேட்டான். ஓ, கே, சர்வர், முதல்லபட்டர்ஸ்காட்ஸ் ஃப்ளேவர் ஐஸ்க்ரீம் கொண்டுவா, என்ரார்கள். சங்கர் உள்ளே போய்அவர்கள் கேட்டதை கொண்டு தந்தான். சார் பிறகு, என்றான். இந்தாப்பா சர்வர் ஃப்ரூட்சாலட் ரெண்டு கொண்டுவா. என்றார்கள். அதையும் பவ்யமாக கொண்டு தந்தான்.



அவர்கள் கேட்டதையெல்லாம் கொடுத்து விட்டு கொஞ்சம் தள்ளிப்போயி ஸ்டூலில்உக்காந்துஏதோஒருபுக்கைஎடுத்துபடிக்கத்தொடங்கினான்.திரும்பவும் அவர்களிடமிருந்துஅழைப்பு. இந்தாப்பா சர்வர், ஒரு லெமனேட். என்றார்கள். அதையும் கொண்டு தந்தான்.



சார் ஒரு சின்ன ரிக்வெஸ்ட், என்பேரு சங்கர், சங்கர்னே என்னைக்கூப்பிடலாமே, ப்ஃரெண்ட்லியா இருக்குமே, என்றான் பணிவாக.
பண்றது என்னமோ சர்வர் வேலை, இதுல சர்வர்னு கூப்பிட்டா ரோசமோ. உனக்கு மிஞ்சிமிஞ்சி போனா 15, 17 வயசு இருக்குமா? இந்த வயசில அமெரிக்க பையன்களெல்லாம்தன் படிப்புக்கு தேவையான பணத்தை அவங்களே சம்பாதிக்கிராங்க தெரியுமா? ஷூபாலிஷ்லேந்து ,கார் கழுவுவது, பேப்பர் போடுவது ஹோட்டலில் வேலை செய்வதுன்னு எந்தவேலைன்
னாலும் கௌரவம் பாக்காம செய்துவராங்க. நம்ம ஊர்லதான் இந்தவயசுல ஹோட்டல் வேலைகிடைச்சா மூணு வேளை சாப்பாடு கிடைச்சுடுமேன்னு இங்க சேந்துடரீங்க. போதாதற்கு கையிலஒரு சீப் நாவல் வேர. எப்படிடா நீங்கல்லாம் உருப்படுவீங்கன்னு கோபமாகச்சொல்லவும், சார்
கொஞ்சம் நிப்பாட்டுங்க. கொஞ்சம் மறியாதையாவே பேசுங்க. அமெரிக்கக்காரன் பண்ணினா உசத்திநம்ம நாட்ல பண்ணினா கேவலமா?



நானும் காலேஜ் படிக்கர பையந்தான். நாளை ஃபைனல் எக்சாம் சார். நான்படிக்கரபுக் என்னான்னுநீங்களே பாருங்க. கெமிஸ்ட்ரி புக். இது என் அப்பாவோட ஹோட்டல்தான். அவர் அவசர வேலையா
பக்கத்த் ஊருக்கு போயிருக்கார். நான் ஹோட்டலை கவனிச்சுண்டு, படிப்பையும் கவனிச்சுக்கரேன்.நீங்க சொல்ரா மாதிரி சீப் மர்ம நாவல் படிக்கலை. எங்களைப்போன்ற இளைஞர்களால தான் நாடு
உருப்படாம ப்போகுதுன்னு சொல்லி என்னை உசுப்பிட்டிங்க. . நீங்க நினைப்பதுபொல்ல இந்தக்காலஇளைஞர்கள் இல்லை சார். அதை நல்லா புரிஞ்சுக்கோங்க.மாணவச்முதாயம் இப்பல்லாம் எவ்வ்ளவோ
முன்னேறிட்டாங்க. உங்களைப்போல உள்ளவங்கதான் அன்னிய நாட்டானை உயர்வாகவும் நம்மஆட்களை மட்டம் தட்டியே பேசிக்கிட்டு இருக்கீங்க. அது தப்பு சார். இப்பவாவது எங்களை நல்லாபுரிஞ்சுக்கோங்க. என்று சிறிது கோபமாகவே சொன்னான் சங்கர்.

சாப்பிட வந்த இருவருமே, சங்கரின் இந்த ஆவேசமான பேச்சில் வாயடைத்து விட்டனர். ஓ, ஓ,நாமதான் தப்பு கணக்கு போட்டுட்டொம் போல இருக்கு. இவன் பேச்சைப்பார்த்தா இந்தக்காலமாணவர்கள் விவர்மானவங்க்களாகத்தான் இருப்பாங்கபோலன்னு பெருமூச்சு விட்டவாரே எழுந்துபோனார்கள்.

17 comments:

பத்மநாபன் said...

இந்த கால இளைநர்கள் என்றாலே இப்படித்தான் இருப்பார்கள் முன் முடிவு எடுத்துக்கொள்கிறார்கள்..இது தவறான போக்கு..அவர்கள் உருவாகுகிறார்கள், உருவெடுக்கிறார்கள்..பெரியவர்களிடமிருந்து தானே ,அவர்களே இளைநர்களை தாழ்த்தினால் ,எப்படி முன்னேறுவார்கள்.. ஒரு சம்பவத்தை வைத்து அழகான விழிப்புணர்வு கதை சொல்லியுள்ளீர்கள் ..வாழ்த்துகள்

பத்மநாபன் said...

இந்த கால இளைநர்கள் என்றாலே இப்படித்தான் இருப்பார்கள் முன் முடிவு எடுத்துக்கொள்கிறார்கள்..இது தவறான போக்கு..அவர்கள் உருவாகுகிறார்கள், உருவெடுக்கிறார்கள்..பெரியவர்களிடமிருந்து தானே ,அவர்களே இளைநர்களை தாழ்த்தினால் ,எப்படி முன்னேறுவார்கள்.. ஒரு சம்பவத்தை வைத்து அழகான விழிப்புணர்வு கதை சொல்லியுள்ளீர்கள் ..வாழ்த்துகள்

Chitra said...

நல்ல கருத்துடன் அமைந்த கதை.

எல் கே said...

இந்த மாதிரி நெறைய பேரு இருக்காங்க.

கோலா பூரி. said...

பத்மநாபன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோலா பூரி. said...

தேங்க்யூ, சித்ரா.

கோலா பூரி. said...

கார்த்திக், வருகைக்கு நன்றீ.

enrenrum16 said...

நல்ல நெத்தியடி பதில்.. கதை நல்லாருக்கு...

கோலா பூரி. said...

enrnerum16, வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

vanathy said...

கோமு, கலக்கலா ஒரு கதை. சூப்பர்.

கோலா பூரி. said...

வானதி வருகைக்கு நன்றி.

Yaathoramani.blogspot.com said...

அருமை எதையும் வெளி நாட்டினர் செய்தால்
ஆகா ஓ கோ எனப் புகழ்வதும் அதையே நாம் செய்தால்
இழிவாக நினைத்தலும் நம் இந்திய பாரம்பரிய
குணமாக ஆகிப்போனது அதை மிக அழகாக
சாடி இருக்கிறீர்கள்
படைப்பும் தலைப்பும் சூப்பர்
தொடர வாழ்த்துக்கள்

கோலா பூரி. said...

ரமணி சார், வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க.

தமிழ்வாசி பிரகாஷ் said...

நல்ல நல்ல பதிவுகளா போடுறிங்க... சூப்பர்...

சென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோ

கோலா பூரி. said...

தமிழ்வாசி பிரகாஷ் வருகைக்கு நன்றி.

Unknown said...

இரண்டாயிரத்து பதினொன்றாம் ஆண்டின் உங்களுடைய பத்தாவது பதிவாகிய இந்த இந்தியன் தலை குனிந்து புத்தகம் படித்து, மற்றவர்களை தலைநிமிர்ந்து
பார்க்கச்செய்தான் .....ஜெய்ஹிந்த்...வாழ்த்துக்கள்

கோலா பூரி. said...

பொன். செந்தில் குமார், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.