Sunday, March 27, 2011

Sunday, March 27, 2011

மெஹந்தி பார்ட்டி



திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் மறக்க முடியாத பரவச நிகழ்வுதான்.சமீபத்தில் என் உறவினர் வீட்டுப் பெண்ணிற்கு திருமணம் நிச்சய மாகி இருந்தது.ஜாதக்பபொறுத்தம், நாள், நட்சத்திரம் எல்லாம் முறையாகப்பார்த்து பெரியோர் களால்நிச்சயிக்கபட்ட அரேன்ஞ்ட் மேரேஜ்தான். பெண்ணின் பெற்றோர் தோஹா(கத்தார்) ரில் 25 வருடங்களாக வேலை பார்த்து வந்தவர்கள்.தங்களொரே பெண்ணின் திருமணத்தை ஆசை, ஆசை யாக வெகு சிறப்பாக நடத்தனும்என்று பார்த்துப், பார்த்து எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தனர்.

முதலில் இருந்தே திருமணம் நம்ம சம்பிரதாயப்படி சாஸ்த்ரோக்தமாக நடக்கனும் என்றுமாப்பிள்ளை அழைப்பில் தொடங்கி, ஊஞ்சல், முகூர்த்தம், நலங்கு, ரிசெப்ஷன் இசைக்கச்சேரிஎன்று அமக்களமாக எல்லா ஏற்பாடுகளும் செதிருந்தார்கள்.திருமணம் சென்னையில் வைத்திருந்தார்கள். அனால் அவர்கள் மும்பையில் தான் படித்துவளர்ந்தவர்கள். அங்குதான் அவர்களுக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருந்தார்கள். நிறைய உறவுமனிதர்களும் மும்பையிலேயே இருந்தார்கள். அவர்களில் பாதிப்பேருக்கு மேல சென்னை வந்துதிருமணத்தில் கலந்து கொள்ளமுடியாத நிலமை. அவர்களுக்காக ஒருவாரம் முன்பு மும்பையில்ஒரு கெட் டுகெதர் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.



காலை 9டு1 மணிவரையிலும் மெஹந்தி இடும் பங்க்‌ஷன்+ லஞ்ச். மாலையில் 6டு9 கார்பா நடனம்தாண்டியா கோலாட்டம் என்று பெரிய 5 ஸ்டார் ஹோட்டலில் ஏற்பாடுகள் செதிருந்தார்கள். நமக்கு
இதையெல்லாம் பார்க்க ஒரு வாய்ப்பு. காலை நாங்க போகும்பாது பார்ட்டி ஹாலில் வரவேற்புஅறையில் நடுவில் பெரிய கோலம் போட்டிருந்தார்கள். முழுவதும் வாசனை மலர் களால்அலங்கரித்திருந்தார்கள். கோலத்தின் நடுவில் 2 கைகள் மாதிரி வைத்து அதில் மருதானியால்
அழகாக டிஸைன் செய்திருந்தார்கள். பார்க்கவே அத்தனை அழகு.
ஒருபக்கமாக பிள்ளையாரின் பெரிய விக்ரகம்வைத்து பெரிய பூமாலையும் போட்டிருந்தார்கள்.பிள்ளையார் விக்ரஹத்துக்கு கிழே அந்த குடும்பத் தலைவியின்(லேட்) போட்டோவும் வைத்து
மறியாதை செய்திருந்தார்கள்.யாரு உள்ளே நுழையும் போதும் மனசு நிறஞ்ச கட்டிப்பிடிச்சு உற்சாகமான வரவேற்பு.உள்ளே நுழைந்ததும் ஒரு ப்ரம்மாண்டமான ஹால். மேலேயிருந்து பெரிய, பெரிய
ஷாண்டில்யர்கள் ஆரவாரமாகத் தொங்கிக்கொண்டிருந்தன. பக்கதில் வைத்திருந்த ம்யூசிக்ஸிஸ்டத்திலிருந்து அந்த சூழலுக்கு தகுந்த மாதிரி (குத்தாட்டம்) பாட்டுக்கள் அலறிக்கொண்டுஇருந்தன. ஒரு புற்மாக சோபா, திண்டுகள் எல்லாம் போட்டு வைத்திருந்தது. வருகிறவர்
கள் அனைவருக்கும் மெஹந்தி இட்டுவிட அதில் தேர்ச்சி பெற்ற பெண்கள் அமர்ந்திருந்தார்கள்.ஒவ்வொருவருக்கும் அழகாக மெஹந்தி இட்டு விட்டார்கள்.நடு ஹாலில் ரவுண்ட், ரவுண்டாக டேபிள்கள், சுற்று 4,4 சேர்கள் போட்டிருந்தார்கள்.முதலில் அனைவருக்கும் ஜூஸ் சப்ளை. யாருக்கு என்ன ஜூஸ் தேவை என்று கேட்டுக்கேட்டு உபசரித்தார்கள்.டிட், பிட்சாக சாப்பிடுவதற்கு ஏதாவது வந்துகொண்டே இருந்தது.

இதில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து பிள்ளை வீட்டுக்காரகளும் அவர்களின் உறவினர்களும் கூட வந்திருந்தார்கள். ம்யூசிக்குக்கு தகுந்தவாறு பிள்ளை வீட்டுக்காரகள்பெண்வீட்டுக்காரர்கள் வந்திருந்த உறவினர்கள் நண்பர்கள் என்று எல்லாருமே ஹாலின்நடுவில் வந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் போட்டர்கள். கல்யாண்ப்பெண்ணும்
பையனும் கூட உற்சாகமாக கலந்துகொண்டு அனைவரையும் சந்தோஷப்படுத்தினார்கள்.வந்தவர் அனைவரின் முகங்களிலும் அப்படி ஒரு மகிழ்ச்சி துள்ளல்.அவர்கள் ரொம்ப வருடங்களாக வெளி நட்டில் வசித்து வருவதால் அங்கிருந்தும் நிறைய
நண்பர்கள்வந்திருந்தனர்.போட்டோ கிராபர்கள் ஒரு நிகழ்ச்சியைக்கூட விட்டு விடாமல்எல்லாவற்றையும் கிளிக்கி கொண்டே இருந்தனர்.1 மணி ஆனதும் லஞ்ச்ஹாலின் ஒருபக்கம் சூடுசூடாக லஞ்ச் ரெடி ஆகிக்கொண்டு இருந்தது.ப்ஃபே லஞ்ச்.யாருக்கு எந்த ஐட்டம் வேனுமோ தாராள்மாக எடுத்துக்குங்கோ யாரும் சங்கோசப் படவேண்டாம் என்று டேபிள், டேபிளாக வந்து விசாரித்தார்கள். நார்த் இண்டியன், சௌத்இண்டியன் என்று வெரைட்டியாக இருந்தது. எல்லாருமே சந்தோஷமாக வயிறு நிரம்ப
சாப்பிட்டார்கள் ஒவ்வொருவரையும் எங்களுக்கு இவா இந்த உறவுமுறை, எங்களுக்குஇவா ரொம்ப நெருங்கிய நண்பர்கள் என்று பெண்ணின் பெற்றோர் அருமையாக அறிமுகம்செய்து வைத்தார்கள். டீன் ஏஜ் பெண்கள் ஆர்வத்தில் 2கைகளிலும் மருதானி வைத்துக்கொண்டிருந்தனர்

அவர்களுக்கு சாப்பாட்டை ஸ்பூனால் ஊட்டி விட்டார்கள். இந்த கண்கொள்ளாக் காட்சிகளெலாம்பார்க்கவே ரொம்ப சந்தோஷமாக இருந்தது. சரி, சரி சீக்கிரம் லஞ்ச் முடிச்சு கார்பா வுக்குரெடி ஆகுங்கோ என்று அடுத்தகட்டளைஅடுத்தஃப்ங்க்‌ஷன் எப்ப்டி இருக்கும் என்ற சந்தோஷ ஆர்வத்தில் அனைவரும் ரெடி ஆனார்கள்.காலையில் பட்டுப்புடவையில் அம்சமாயிருந்த பெண்கள் எல்லாரும் கார்பா, தாண்டியாவுக்கு
பொறுந்தும் படி நிறைய சரிகை வேலைப்பாடுகளுடன் கூடிய லெஹெங்கா+டாப்ஸ்.அணிந்துகண்ணைக்கவரும் வித மாக கலர், கல்ராக வளைய வந்தார்கள்.ஆண்கள் எல்லாரும் ஷெர்வாணிகுர்த்தா+கழுத்தில் நீள்மான துப்பட்டா மாதிரி ஒரு துனியும் போட்டிருந்தார்கள்
அதற்குள்முன்புற ஹாலில்அல்ங்காரங்கள்வேறுமாதிரிபண்ணியிருந்தார்கள். கோலத்தையேகேரளாவில் ஓணம் பண்டிகைக்கு போடுவதைப்போல வாசனை மலர்களாலேயே அலங்கரித்துஇருந்தார்கள் கோலத்தின் நடுவிலும் சுற்றி வரவும் வாழை இலைகளைப்பரப்பி தாண்டியா குச்சிகளை
(கோலாட்டங்கள்) அழகாக அடுக்கி வைத்திருந்தார்கள். சுற்றிலும் வாசனை மெழுகு வத்திகளைஏற்றி யிருந்தார்கள் சூழலே மிக, மிக, ரம்யமாக இருந்தது. டேபிள், சேர்களை ஓரமாக போட்டுநடுவில் தாண்டியா ஆடுபவர்களுக்கு இடம் விட்டு வைத்திருந்தார்கள். பெண்ணுக்கும், பிள்ளைக்கும் கூட ஸ்பெஷலாக அலங்காரம்,மேக் அப் எல்லாம் செய்து பூவினால் அலங்கரித்திருந்த பூப்பல்லாக்கில்ஊர்வலமாக அந்த ஹோட்டலை சுற்றி அழைத்து வந்தனர்.அனைவருமே குஜராத்தி ஸ்டைலில்ஆடை, அணி, மணிகள் அணிந்திருந்தனர்.முதலில் கும்மி அடிப்பதுபோல ச்ற்றி,சுற்றி வட்டமாக ஆடினார்கள்.ம்யூசிக் ஸிஸ்டத்திலிருந்துகோலாட்டப்பாட்டுக்கள், கும்மிப்பாட்டுக்கள் ஹிந்தியில் வந்துகொண்டிருந்தன. அனை வருமே
உற்சாகமாக கலந்து கொண்டு ஆடினார்கள் நாங்க பிள்ளை வீட்டுக்காரா, நாங்க பெண்வீட்டுக்காராஎன்ற எந்தவித ஈகோ வும் இல்லாமல் எல்லாரும் ஒன்ற்கலந்து ஆடிப் பாடி மகிழ்ந்தது ரொம்பவேநன்றாக இருந்தது.
இரவு டின்னரில் ஒரு புரம் ச்சாட் ஐட்டங்கள், இன்னொறுபுரம் வெரைட்டி ஐட்டங்கள் என்று ஏகஅமர்க்களமான டின்னர்.மாலை லஞ்சுடன் அனைவருக்கும் கூல், கூலா ஐஸ்க்ரீமும் சூடு, சூடா
குலாப்ஜாமுனும் செர்வ் பண்ணினார்கள். இப்போ டின்னருக்குப்பின் குல்ஃபி ஐஸ்  வந்திருந்த அனைவருக்கும் புடவை,பெண்களுக்கும், ஆண்களுக்கு பேண்ட், ஷர்ட் துணியும்வைத்துகொடுத்தார்கள். நினைவுப்பரிசாக தேங்காய்மாதிரி பண்ணி அதற்குள் 10காஜுகத்லி(ஸ்வீட்)
போட்டுக்கொடுத்தார்கள். வந்திருந்தவர்களின் அத்தனை முகங்களிலும் அத்தனை சந்தோஷம்மேலோட்டமாக பார்க்கும்போது இதெல்லாம் ஒரு ஆடம்பரமாக, படாடோபமாக தோனலாம்.ஆனால் நம் கருப்புக்கண்ணாடி புத்தியை கழட்டிவிட்டுப் பார்த்தால் சில நிதர்சனங்களை நம்மால்
புரிந்துகொள்ள முடியும்.என்னதான் வெளினாட்டில் வேலை என்றாலும் ஒன்று கை நிறைய காசு கிடைக்கறது.இதுஒன்றுதான்

ப்ளஸ் பாயிண்ட். அதற்காக அவர்கள் கொடுக்கும் விலையும் மிகாதிகமே.
நம்ம சொந்தபந்தங்களை சந்திப்பது, நாள்கிழமைகளை கொண்டாட முடியாததுஎன்று அடுக்கிகொண்டேபோகமுடியும். அந்த மூச்சுமுட்டும் வாழ்க்கை முறையில் இருந்து ஒரு ரிலாக்செஷன் வேண்டி இருக்கு.
அனேகமாக எல்லார் வீடுகளிலுமே ஒன்னு, அல்லது 2 குழந்தைகள்தான் இருக்கிறார்கள். அவர்களுக்குசெய்யவேண்டிய கடமைகளை நிறைவாக சேயனும் என்று நினைக்கிறார்கள் இதில் ஒன்றும்
தவரில்லையே. இப்போ இவர்களைப்பொறுத்தவறை நாம, நம்ம குழந்தைகள்மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதும்
என்று நினைக்காமல் உற்வினர்கள், நண்பர்கள் என்று அனை வரையும் சந்தோஷப்படுத்தி இருக்கிறார்கள்.அதுமட்டுமில்லைஅனைவருக்கும் வயிறார உணவு உபசாரம் பண்ணனும் என்று நினைக்கிரார்கள்.
இப்படி அனைவரையும் சந்தோஷப்படுத்தி, அவர்களையும் ரிலாக்ஸ் செய்து கொள்கிரார்கள்.அதுமட்டும் இல்லை மெஹந்திகாரா, சமையல்காரா, ஹோட்டல்காரா என்று திற்மையானவர்களைதேடிப்பிடித்து அவர்க்ளுக்கும் அவர்கள் திறமையை நன்கு பயன் படுத்த ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக்
கொடுத்து, தகுந்த சன்மானங்களும் வழங்கி பெருமைப்படுத்தி இருக்கிறார்கள்.
நிறைய செலவாகி இருக்கும்தான். பணம் இருப்பவர்களுக்கு அவ்வளவ் சீக்க்ரம் செலவு செய்ய மனசு வராது. மேலும் மேலும் பணம் சேர்ப்பதில் தான் அவர்கள் கவனம் செல்லும். ஆனால் இவர்களோ
தாராளமாக செலவுகளையும் செய்து வந்திருந்த அனைவரையும் சந்தோஷப்படுத்தி, ஒருவரைஒருவர் சந்தித்து பேசி பழக என்று ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்திருப்பதை நாம் மனம்
திறந்து பாராட்டியே ஆகவேண்டும். அன்று வந்திருந்த அனைவருமே வயிறு மனசு நிறைந்துபுதுப்பெண், மாப்பிள்ளையை மனசார வாழ்த்தினார்கள்...

35 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

நம்மூர்ல யாரும் இப்படி செலவு செய்ய மாட்டாங்க... பதிலா மொய்ய நிறைய எதிர்பார்ப்பாங்க...

கோலா பூரி. said...

தமிழ் வாசி, நீங்க சொல்வது உண்மைதான்.

Asiya Omar said...

மிக அருமையான பகிர்வு,ஒரு நல்ல அனுபவமும் கூட.வாழ்த்துக்கள் மணமக்களுக்கு...

Chitra said...

ஊருக்கு ஊரு கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் மாறுபடுகின்றன. நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டோம். தொடர்ந்து எழுதுங்க.

கோலா பூரி. said...

ஆஸியா ஓமர், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

கோலா பூரி. said...

சித்ரா வருகைக்கு நன்றி.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஆச்சரியமா இருக்குங்க! ஒவ்வொரு ஊரில ஒவ்வொரு மாதிரியா?

கோலா பூரி. said...

மாத்தியோசி வாங்க சார். ஒரொரு ஊர்ல
ஒவ்வொருபழக்கவழக்கம்தான். நமக்கு கிடைக்கும்சந்தர்ப்பம்பொறுத்து நமக்கு
பாக்க கிடைக்குது.

Unknown said...

நல்லா இருக்கு நீங்க சொன்னதெல்லாம்! :-)

MANO நாஞ்சில் மனோ said...

நல்ல பகிர்வு....

கோலா பூரி. said...

ஜீ வருகைக்கு நன்றி.

கோலா பூரி. said...

நாஞ்சில்மனோ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ம.தி.சுதா said...

////ப்ளஸ் பாயிண்ட். அதற்காக அவர்கள் கொடுக்கும் விலையும் மிகாதிகமே.////

உண்மையாகவே தானுங்க... மிக அதிகம் தான்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்

கோலா பூரி. said...

ம.தி. சுதா, வருகைக்கும் கருத்துக்கும்
நன்றிங்க.

Jaleela Kamal said...

நல்ல அனுபவ பகிர்வு, எங்கே மெகந்தி படங்கள்

கோலா பூரி. said...

ஜலீலாம்மா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.படம் சேக்கமுடியலை.

கோலா பூரி. said...

பிரகாஷ் என்னை வலைச்சரத்தில்
முதல் முறையாக அறிமுகம் செய்ததற்கு நன்றிங்க.

ஆனந்தி.. said...

வலைச்சரத்தில் தங்களின் உபயோகமான பதிவை பற்றி குறிப்பிட்டுள்ளேன்.
http://blogintamil.blogspot.com/2011/04/to-z-tips-pedia.html

கோலா பூரி. said...

ஆனந்தி நன்றி.

குறையொன்றுமில்லை. said...

உங்களை வலைச்சரத்தில்
அறிமுகப்படுத்தி இருக்கேன்.
நேரம் கிடைக்கும் போது
பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_6777.html

குறையொன்றுமில்லை. said...

உங்களை வலைச்சரத்தில்
அறிமுகப்படுத்தி இருக்கேன்.
நேரம் கிடைக்கும் போது
பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_6777.html

Sumitra srinivasan said...

proud to say that i m the boys mother
lucky to have such good family incl
echumi mami
sumitra srinivasan

சி.பி.செந்தில்குமார் said...

ரொம்ப லேட் போல .

கோலா பூரி. said...

ரொம்பவா ர்....ரொ............ம்..........ப......... லேட்டாக்கும்

அம்பாளடியாள் said...

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும் உரித்தாகட்டுக்கும் மிக்க நன்றி
பகிர்வுக்கு ......

கோலா பூரி. said...

அம்பாளடியாள் வருகைக்கு நன்றி

Easy (EZ) Editorial Calendar said...

நல்ல பகிர்வு......

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)


வலைப்பூ தலையங்க அட்டவணை
info@ezedcal.com
http//www.ezedcal.com

Easy (EZ) Editorial Calendar said...

அருமையான பகிர்வு........உங்கள் பகிர்வுக்கு நன்றி.


நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

கோலா பூரி. said...

varavukku nanri

Yaathoramani.blogspot.com said...

நேரடியாகப் பார்ப்பதைப் போன்று
திருமண நிகழ்வினை மிக அருமையாக
விளக்கிப் போனது மனம் கவர்ந்தது
மகிழ்வான தருணம் மட்டுமல்ல அனைவரையும்
மகிழ்விப்பதற்கான தருணம் திருமணம் என்பதை
நீங்கள் சொல்லிப் போன விதம் அருமை
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

ரொம்ப நல்லா கதைபோல ஒவ்வொரு விஷயமும் சொல்லி இருக்கீங்க.

Unknown said...

ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க. கதை கேட்பதுபோல சுவாரசியமா இருந்தது.

Unknown said...

ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க.

Unknown said...

ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க.

Unknown said...

ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க.