ஆனந்தம் துள்ளும் நுரை ததும்பும் காதல்கதை இது. நெட்டில் படித்ததில் பிடித்தது.
காதலி ரேக்சொனவும் காதலன் சிந்தாலும் ஒருவரையொருவர் மனமார நேசித்தனர்.
இருவரும் அறிமுகமானது பவர் தெருவில் உள்ள லிரில் ஜிம்மில்
ரெக்சின் பெற்றோர் விவேல்,மார்கோ மற்றும் சிந்தலின் பெற்றோர் ஏ ரியல்,நிர்மா.
காதலுக்குத் தடைபோடவில்லை . எதிர்பார்த்தபடி சிந்தால் தன் லைஃபாய் ஆக
(வாழ்க்கைத்துணையாக) வருவதில்ரேக்சுக்கு கொள்ளை மகிழ்ச்சி.
மெடிமிக்ஸ் டவுனில் ஸந்தூர் தியேட்டருக்கு எதிரிலுள்ள பேர்&லவ்லி தோட்டத்தில்
கல்யாணம் நடக்க ஏற்பாடாயிற்று.
குட்டி க்யுரா அழகுநிலையம் ரேக்சை கனவுமங்கை ஆக்கியது.
மஞ்சள் பெர்க்ளோ மேஹந்தியிட்டு அசத்த ஹமாம்
நலங்கு நடத்தி கலகலக்கவைத்தாள். நண்பர்கள் குழாம் லக்ஸ், டவ், சாவ்லான், பா,
டெட்டால், நிவியா , சந்திரிகா முதலானோர் வந்திருந்து அழகுக்கு அழகு சேர்த்தனர்.
தென் நிலவுக்கு இருவரும் சன்லைட் தீவில் ப்ரீஸ் காட்டேஜில் தங்கிக் கொண்டு
கடலில் சர்ப் செய்து மகிழ்ந்தனர்.
தங்களது பியர்ஸ் கனவு மாளிகையில் தனிக்குடித்தனம் ஆரம்பித்தனர்.
அடுத்த வருடம் இருவர் நால்வராயினர் . ஆம் அவர்களுக்குப் பிறந்தது இரட்டையர்
ஜான்சன்ஸ்&ஜான்சன் .
12 comments:
உ
ஒரே கலர் ஃபுல்லாயுடுத்து!
கதை நல்லா நுரை பொங்க... வாசனையா கம கமனு இருந்தது கோமு....முதல்ல எனக்கு புரியவே இல்ல.. அப்பறம் தான் இந்த டியுப்லைட்க்கு புரிஞ்சுது எல்லாமே சோப்பு பவுடர் பேருன்னு... என்ன செய்ய குடும்பமே அப்படி... யாரைச்சொல்ல.... சும்மா கலர்புல்லா இருக்கு ப்ளாக்... ஆல்திபெஸ்ட்...
ராதா ப்ளாக் பக்கமே வர டைம் கிடைக்கலை.
இன்னிக்குத்தான் உங்க பதிவு பார்த்தென். நன்றிம்மா.
உ. மாமி தேங்க்யூ வெரி மச்.
கோமு உங்க ப்ளாக் இப்போ தான் பார்த்தேன்...எப்படி இருக்கீங்க? ஆரம்பமே அமர்க்களமா இருக்கே...நல்லா பண்ணுங்க..ஆல் தி பெஸ்ட் கோமு!!
ஆனந்தி என்ப்ளாக் பக்கமும் வந்து எட்டிப்பாத்ததுக்கு ஒரு பெரிய தேங்க்ஸ்.
கோம்ஸ்...என்ன புது போஸ்ட் எதுவும் இன்னும் போடாமல் இருக்கீங்க? கம் ஆன்...!
ஆனந்தி இதுபோல யாரானும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தாதான் மேலும், மேலும் நிரைய எழுதவே தோணுது.
அடடா! நம்ம கோமு மாமியும் ப்ளாக் ஆரம்பிச்சுட்டாங்க. மாமி, சூப்பர். தொடர்ந்து எழுதுங்கோ.
வந்துட்டோம்ல :-). வாழ்த்துக்கள் கோமு.
சோப்பு பெயர்களா வச்சு அழகா கோர்வையா எழுதியிருக்கீங்க. ரசித்தேன் :)
தொடர்ந்து நிறைய எழுதுங்க! கலக்குங்க!
சுவாரசியமா படிச்சதில் நீங்க எழுதியிருந்த முதல் வரி மறந்து போச்சு :(. நெட்டில் படிச்சதா இருந்தாலும் எனக்குப் புதிதாக இருந்தது. நன்றி கோமு!
வானதி, கவி பாக்கரதோட மட்டுமில்ல ஏதானும் குறை
நிறைகளையும் சுட்டிக்காணும். ஆனாதான் ப்ளாக்கை
சிறப்பாக வைத்திருக்க முடியும். நீங்கல்லாம் வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அடிக்கடி வாங்க.
Post a Comment