Monday, November 1, 2010

Monday, November 1, 2010

சில நம்பிக்கைகள்.

எங்கேன்ஜ் மெண்ட் ரிங்க் மோதிர விரலில் ஏன் போடுராங்க?




தெரிஞ்சுக்கலாமா? வாங்க.

முதல்ல உள்ளங்கைரெண்டையும் சேத்து சாமி கும்பிடுவதுபோல வைங்க.

வைச்சீங்களா? இப்போ நடுவிரலைஉள்ளங்கையை தொடுவதுபோல உள்ள

மடக்கி வைங்க. பாக்கி நாலுவிரல்களையும் சேத்து கும்பிடு வதுபோல ஒட்டி

வைங்க.ஆச்சா? இப்ப முதல்ல ரெண்டுகட்டை விரல்களையும் கொஞ்சமா விலக்கிட்டு திரும்பவும் ஒட்டவச்சுக்குங்க. அடுத்து ஆள்காட்டி விரல்களையும்

அதுபோலவே கொஞ்சம் விலக்கிட்டு திரும்ப ஒட்ட வச்சுக்குங்க. அடுத்து

சுட்டுவிரலையும் அதேபோல விலக்கி, சேருங்க. இப்ப மோதிர விரலையும் விலக்கி சேருங்க.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!. என்னங்க முடியலை இல்லியா?



ஏன் தெரியுமா? நம்ம லைஃப்ல கட்டைவிரல் நம்மை பெத்தவங்கன்னு வச்சுக்குவோம். எப்பவேணா நம்மைவிட்டு விலகிடுவாங்க.ஆள்காட்டிவிரல்

நம்மகூடப்பிறந்தவங்கன்னு வச்சுக்குங்க.அவங்களும் எப்பவேணாலும் நம்மை விட்டு விலகிடலா.ம். இப்ப சுட்டுவிரல் நாமபெத்த குழந்தைகன்னு

வச்சுக்கலாம்.அவங்களும் ஒருஸ்டேஜ்ல நம்மைவிட்டு விலகிப்போயிடலாம்.

ஆனா மோதிர விரலை ஏன் விலக்கமுடியலை????? அது புருஷன் பெண்ட்டாட்டின்னு வச்சுக்கலாம். என்னிக்குமே விலகமுடியாத விலகக்கூடாத பந்தம் கணவன்மனைவி பந்தம்தான். அதனால தான் அந்தவிரல்களை விலக்கமுடியலை. அதை சிம்பாலிக்கா உணர்த்தத்தான்

மோதிரவிரலில் எங்கேஜ் மெண்ட் ரிங்க் போடுராங்க.சரிதானே?????

எல்லாரும் கும்பிட ஆரம்பிச்சுட்டீங்களா. ம் ம் ம் ட்ரை பண்ணிபாருங்க

உண்மை புரியும்.

4 comments:

kavisiva said...

கோமு முன்பே ஏதோ புத்தகத்தில் படித்திருக்கிறேன். மீண்டும் இங்கே படித்த போதும் கும்பிட்டுப் பார்த்தேன் :)

தலைப்பை அதற்கான பாரில் போட்டீங்கன்னா உங்களை பின் தொடர்பவர்களின் டேஷ் போர்டில் இருந்து நேரடியாக உங்கள் புதிய பதிவுக்கு வந்து விட முடியும். இல்லேன்னா உங்க ப்ரொஃபைலுக்குப் போய் அங்கிருந்துதான் இங்கு வர முடிகிறது. அது கொஞ்சம் சுத்தி வளைச்ச வேலை. அதனால் பலரும் வராமல் போக வாய்ப்புண்டு. சரி பண்ணிடுங்க.

ஆனந்தி.. said...

அப்பிடியா கோமு..மெய்யாலுமே எனக்கு தெரியாது பா..இந்த இம்மாம்பெரிய விஷயம் எதுவும்...!! கோம்ஸ் அந்த சிவப்பு மொபைல் நம்பர் மெயில் எங்க? தேடி பார்த்து களச்சு போயிட்டேன்...:(((

கோலா பூரி. said...

கவி அது எப்படி பண்ணனும். கொஞ்சம் சொல்லித்தரீங்களா.ப்ளீஸ்.
ஆனந்தி அதை எடிட் பண்ண போனேன் டெலிட் ஆயிட்டுது. நிரைய விஷயங்கள் தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு.

sundari arjun said...

கோமு நல்ல விளக்கம்.இது போல தெரியாத விசங்கள் நிறைய எழுதுங்கபா