Monday, February 7, 2011

Monday, February 7, 2011

குக் ”ஜி” & பேடாகாட்(3)பேடாகாட்(3)                          

கோபுவும், கிரிஜாவும் கீழே கார்டன் போனார்கள்.உள்ளே நுழைந்ததுமே
கும் மென்ற வாசம் மூக்கைதுளைத்தது.மல்லி, அடுக்குமல்லி,பலகல்ர்களில்
ரோஜாக்கள், கனகாம்பரம்,செம்பருத்தி, இருவாட்சி என்று கலர்,கலராக வாசமிக்கமலர்கள். செடிகளையும் புதராக மண்ட விடாமல் நன்கு கட் செய்து நன்றாகபராமறித்திருந்தார்கள். உண்மைலயே மனதுக்கு இதமாகவே இருந்தது. சுற்றிவரஒரு சின்ன வாக் பண்ணிட்டு மேலே போனார்கள். நாராயன் ஜி தோட்டம் யாருபராமறிக்கிராங்க? ஏம்மா, சமையல் வேலை போக பாக்கி நேரங்களில் நாந்தாம்மாகவனிக்கரேன். என்றார். சூப்பரா பராமறிக்கிரீங்க நாராயன் ஜி. நீங்க எதுபண்ணினாலும்ஆத்மார்த்தமாகப்பண்ணுகிரீர்கள் அதுதான் எல்லாத்துலயும் ஒரு பர்பெக்‌ஷன் இருக்கு.
என்று பாராட்டாகச்சொல்லவும் அவர் மிகவும் சங்கோசப்பட்டார்.


கரக்டாக மூன்றுமணி அளவில் மற்றவர்களும் வந்துவிட எல்லாரும் கிளம்பினார்கள்.இந்த ஊரில் பஸ் சர்வீஸ் சரி இல்லை. டெம்போ என்று ஒன்று இருக்கு. ஆட்டோவைவிடஉள்புறம் கொஞ்சம் இடம் கூட இருக்கும். இரண்டுபுறமும் பெஞ்ச் போல இருக்கும் 5,5 பேர்என்று 10 பேர்கள்வரை உக்காரமுடியும். நாங்க பெரியவர்கள் 10பேரும் குழந்தைகள் 5 பேர்களும்
இருந்தோம்.அட்ஜஸ்ட் செய்து உக்காந்தோம். டொர்,டொர்னு சத்தம் போட்டுண்டே ஓடுது.வழியில் யாரு, எங்க கைகாட்டினாலும் நிறுத்தி ஏற்றிக்கொள்கிரார்கள். அதுபோல எங்க இறங்கணும்னாலும் நிறுத்துகிரார்கள். சார்ஜ் கூட நல்ல சீப்தான். இஷ்டத்துக்கு ஆட்களை ஏற்றிக்
கொள்வார்கள்.2 மணி நேரம் ஓடி நர்மதா நதிக்கரை ஓரமாக இருந்த பேடாகாட் போய்ச்சேர்ந்தோம்.நாராயன் ஜி சொன்னதுபோல வரும் வழி பூரா அத்துவானக்காடாக, பொட்டல் வெளிகளாகத்தான்இருந்தது.

                                                                              

அன்று ஃபுல் மூன் டே. அதாவது பௌர்ணமி. அன்று நிலா நடு உச்சிய்ல் வரும்போது இங்குள்ளமார்பிள் மலைக்குன்றுகள் பலகலர்களில் ஜொலிக்குமாம். அந்த அழகைக்காண நிறைய டூரிஸ்ட்கள் இன்று இங்குவந்து கூடுவார்களா. சுற்றிவர வெள்ளைக்கலரில் வானுயர்ந்த மார்பிள் மலைகள்
நடுவில் நர்மதை ஆறு அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. கரையில் கைவினைக்கலைஞர்கள் மார்பிளைச்செதுக்கி சின்ன சின்ன கலைப்பொருட்கள் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களைசுற்றிவர
அவர்கள் சுரண்டிப்போடும் மார்பிள் துகள்கள், வெள்ளைப்பவுடராக இறைந்து இருந்தது.கால் வைத்தால்வழுக்கும் அளவுக்கு மார்பிள்பொடிகள். பார்த்துகவனமாக நடக்க வேண்டி இருந்தது.7 யானை செட்
பலவித மிருகங்களின் செட்கள் சாய்பாபா, சிவலிங்கம், ஊதுபத்தி ஸ்டாண்ட் என்று விதவிதமாககைவினைப்பொருட்கள். கொஞ்ச தூரம் நடந்துபோய் ஒரு இடத்தில் உக்காந்து கொண்டு வந்த சாய்ஸ்னாக்ஸ் சாப்பிட்டோம். நாராயன் ஜி தாராளமாகவே எல்லாம் வைத்திருந்தார்.

17 comments:

எல் கே said...

என்ன மறுபடியும் இதே பதிவு ???? குட்டியா இருக்கற மாதிரி இருக்கு . நம்ம ஊரு ஆட்டோ மாதிரி இருக்கே

மாத்தி யோசி said...

it's nice to read...

மாத்தி யோசி said...

Madam,why don't you come to mybog? angry with me?

தமிழ்வாசி - Prakash said...

பயணம் நல்லா போய்கிட்டு இருக்கு போல...
*********
இதையும் படிங்க: மனைவியும் ஆம்லெட்டும்

Chitra said...

nice.

komu said...

ஆமா, கார்த்திக் போன பதிவு அப்டேட் ஆகலை.அதான். இது கொஞ்சம் பெரிய ஆட்டோ அவ்வளவுதான்.

komu said...

மாத்தியோசி, உங்க மேல எனக்கு என்னங்க கோவம்? ப்ளாக்கர்ஸ் எல்லாருமே எல்லார் ப்ளாக்குக்கும் போய்ட்டு வந்துகிட்டுதானே இருக்கோம்.வருகைக்கு நன்றி.இப்பவே உங்க ப்ளாக் வரேன்.

komu said...

தமிழ் வாசி வருகைக்கு நன்றி.

komu said...

சித்ரா, தேங்க்யூ.

யாதவன் said...

அருமை வாழ்த்துக்கள்

komu said...

தேங்க்யூ, யாதவன்.

ஆனந்தி.. said...

கலக்கல் படங்கள் எல்லாம் எங்கே இருந்து பிடிச்சிங்க கோம்ஸ்...எழுத தெரில எழுத தெரில னு நீங்க தான் பட்டைய கிளப்புரிங்க...

komu said...

ஆனந்தி, உங்க அளவுக்கெல்லாம் எனக்கு எழுத்து வராதுப்பா. ஆனா கூட
உற்சாக டானிக் கொடுக்குரீங்க.

Thanglish Payan said...

Its nice...

Chitra said...

Nice write up.Nice blog too :)

komu said...

தங்க்லீஷ் பையன் வருகைக்கு நன்றி.

komu said...

சித்ரா தேங்க்யூ, வெரிமச்.