Monday, February 14, 2011

Monday, February 14, 2011

குக் ”ஜி” & பேடாகாட்(4)குக் ”ஜி” &பேடாகாட்                

சாய்குடிச்சுட்டு எல்லாரும் அங்கயே பெரிய போர்வையை விரித்துகொண்டு
கீழே உக்காந்துபேசிக்கொனிருந்தோம். அவரவர்கள் அறிமுகம், 2வயதில் ஒரு
குட்டிப்பையன்,எல்லாரிடமும் வேத்துமுகம் இல்லாமல் வந்து விளையாடிக்
கொண்டிருந்தான்.15வயதில் ஒருபையன், 10 வயதில் ஒரு பெண், 7 வயதில் ஒருபையன் என்று குழந்தைகள் ஒடிபிடிச்சு விளையாடிக்கொண்டிருந்தார்கள். நாங்கமார்பிள் ஷோபீஸ் எல்லாருமே நிறைய வாங்கினோம். ரொம்ப அழகாக இருந்தது.அப்படியும் இப்படியுமாக 9 மணீயே ஆச்சு.எல்லாருமே கையில் சாப்பாடு கொண்டுவந்திருந்தார்கள். டெம்போகாரர்களையும் எங்க கூட சாப்பிடக்கூப்பிட்டோம். ரொம்பசந்தோஷமாக வந்தார்கள். நாராயன் ஜி நல்ல தாராளமாகவே சாப்பாடு வைத்திருந்தார்.                                                    

பேசி சிரித்து சாப்பிட்டு முடிக்க 10 மணி ஆச்சு. கிழே 10, 15 படகுகள் வரிசையாக இருந்தது.நிறைய டூரிஸ்டுகள் வந்திருந்தார்கள் படகுத்துறை போயி படகு புக் பண்ணிண்டோம்.அனேகமாக எல்லா படகுகளுமே ஹௌஸ்ஃபுல் ஆச்சு. ஒரு படகில் 15 பேர்களை ஏற்றிக்கொள்கிரார்கள்.11மணிக்கு படகுகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக கிளம்பியது அழகு. மேலே முழு நிலா
கீழே நர்மதையில் படகு சவாரி.என்ன அற்புதமான அனுபவம். மனசு பூராவும் சந்தோஷம்நிரம்பி இருந்தது. கரெக்டாக ஒருமணீனேரம் படகு ஓடி நடு ஆற்றில் வந்து நங்கூரம் இட்டுவரிசையாக நின்றது படகு ஓட்டுபவரெழுந்து நின்று இப்போ நிலா நடு உச்சிக்கு வரும்போதுஎல்லாரும் இரண்டுபுறமும் இருக்கும் மலைகளைபாருங்க என்றார்.எங்க படகுக்காரர் எழுந்துநிக்கும்போதுதான் அவருக்கு. ஒருகால் ஊனம் என்றே எங்களுக்குத்தெரிய வந்தது. தாங்கு கட்டையின் உதவியில்தான் அவரால் நிக்கவே முடிந்தது. 12 மணிக்கு நிலா நடுவானுக்குவரவும்

                                                


எல்லாரும் தலையை உயர்த்தி இருபுறமும் மாறி. மாறி பார்த்தோம். நாங்கள் பார்த்தகாட்சிகளைநம்பவேமுடியலை. பகல் வெளிச்சத்தில் வெள்ளையாக காட்சி தந்த மலைகள் எல்லாம் பலகலர்களில் ஜொலி, ஜொலிக்கும் காட்சி.பச்சை, நீலம், ஆரஞ்ச், மஞ்சள், ஊதா என்று மார்பிள் மலைகள்
ஜொலிக்கும் அழகை வார்த்தைகளில் வர்ணிக்கவே முடியாது. அப்படி ஒரு இயற்கையின்அற்புதம்அப்படிஒருஜொலிப்பைஇதுவரைகண்டிருக்கவேமுடியாது. இய்ற்கைதான் தன்னுள்ளே எத்தனை,எத்தனை அற்புதங்களை ஒளித்துக்கொண்டிருக்கிரது. ஒவ்வொரு பௌர்ணமி இரவிலும் நடு இரவு
நிலா உச்சிக்கு வரும் நேரம் இந்தாற்புதம் நிகழ்கிரதாம்.அரைமணி நேரம் இந்த அற்புத நிகழ்ச்சிகண்டு களித்தோம். நிலா ஒரு புறமாக இறங்க ஆரம்பித்ததும் மாஜிக் போல மலைகளின் கலர்கள்மாறி தன் சுய ரூபமான வெள்ளைக்கலருக்கு மாறிவிட்டது. கண்ணுக்கு நேரா பார்த்தஇந்தஅதிசயத்தை
நம்புவதா இல்லையா,என்றகுழப்பம். எல்லா போட்டிலிருந்தும், சூப்பர், மார்வெலஸ், ஃபெண்டாஸ்டிக்வாவ் என்ற உற்சாக கூக்குரல்கள் கேட்டவண்ணமே இருந்தது.எல்லார் மனங்களிலும் ஆனந்த அனுபவம்.
திரும்ப கரைக்குப்போக இன்னும் ஒருமணி நேரம் படகு சவாரி செய்யனுமே. மறுபடியும் எல்லாபடகுகளும் கரை நோக்கி திரும்பின. எங்க போட்டில் இருந்த 2 வயது சுட்டிக்குழந்தைஅம்மா மடியில்உக்காந்து கால்களைத்தண்ணீரில் விட்டு அளைந்தவாரே சிரித்துக்கொண்டே வந்தது. படகுக்காரர்,
பெஹன்ஜி குழந்தை காலை உள்ளே எடுங்க . தண்ணில கையோ காலோ விட வேண்டாம்மாஎன்ரார்.


                                                 

படகுக்காராரே எங்களுக்கு கல்யாணம் ஆகி 10 வருடங்களுக்குப்பிறகு அருமையா பிறந்தபிள்ளைஇவன் இவன் சந்தோஷத்துக்கு நாங்க குறுக்கே நிக்கமாட்டோம் அவனுக்கு த்ண்ணில விளையாடபிடிச்சிருக்கு, விட்டிடுங்க. அதில்லைமா, என்று படகோட்டி ஏதோ சொல்ல வரவும் தண்ணீரில் பெரிய
அலை அடிச்சமாதிரி தண்ணீரை கலக்கி அடிச்சது.திடீரென் க்ழந்தையும் பெரிய குரலில் வீறிட்டு அழஆரம்பித்தான். எல்லாரும் திரும்பிபாத்தோம். திடுக்கிடும் காட்சி, ஒரு பெரிய முதலை குழந்தையின்காலை கவ்விப்பிடித்து இழுத்துக்கொண்டிருந்தது. பகுக்காராரே முதலை குழந்தையை காலை பிடிச்சு
விடாம இழுக்குது. ஏதானும் செய்யுங்க என்று குழந்தையின் பெற்றோர் கதரி அழுதனர். அதான்மாநா சொல்ல வந்தேன் நடு ஆத்துல முதலைஇருக்கு தண்ணில கைகாலை விடாதீங்க என்ரேன்.சரி இப்ப குழந்தையை எப்படி காப்பாத்தரது சொல்லுங்க படகுக்காரரே.
.                                                                     

15 comments:

மாத்தி யோசி said...

kalakkal madem.is this the same story of the last episode?

மாத்தி யோசி said...

i welcorme you to myblog

தமிழ்வாசி - Prakash said...

இயற்கையை அருமையாக விவரிதிருகிறீர்கள். சூப்பர் மேடம்.

இதையும் படிங்க: இந்த சர்தார்ஜி காமடி தாங்க முடியல சாமி

எல் கே said...

enna aachu again and again?

komu said...

முதல்ல பப்ளிஷ் பண்ணீனது அப்டேட் ஆகவே இல்லை. அதான் ஒன்னு டெலிட் பண்ணி மறுபடி போஸ்ட் பண்ண வேண்டி வந்தது.

komu said...

எல்.கே.,தமிழ்வாசி, மாத்தி யோசி அனைவர் வருகைக்கும் நன்றி

யாதவன் said...

supper story

komu said...

தேங்க்யூ யாதவன் சர்

ஆனந்தி.. said...

கோம்ஸ் நல்லா கொண்டு போறீங்க..ஒவ்வொரு பத்தி க்கும் அதாவது பாரா வுக்கும் சிறிது கேப் கொடுங்க..இன்னும் பார்க்க நல்லா இருக்கும் கோம்ஸ்.....

komu said...

ஆனந்தி தேங்க்ஸ்.

ம.தி.சுதா said...

சிக்கனமா இருந்தலும் சிந்திக்க வைக்குது...

ம.தி.சுதா said...

தங்களை பின் தொடர்ந்து செல்கிறேன் முடிஞ்சால் நம்மளை கலைச்சு பிடிச்சி தொடருங்க பாப்பம்....

komu said...

ம.தி. சுதா, வருகைக்கு நன்றி.

சி.கருணாகரசு said...

நச்சின்னு எழுதிட்டிங்க.....

komu said...

சி.கருணாகரசு, வருகைக்கு நன்றி.