Tuesday, November 23, 2010

Tuesday, November 23, 2010

just for funகொஞ்ச நாட்கள் முன்பு ஒரு பண்டிகை நாளில்(சதுர்த்தியோ,ஜன்மாஷ்ட்மியோி நினைவில்லை)

என்ஃப்ரெண்ட் வீட்டில் சமயலுக்கு கத்தரிக்காய் கட்செய்தப்போ

மேலே உள்ளதுபோல ஓம் என்று ஹிந்தியில் தெரிந்ததாம்.

இது ஒருஆச்சர்யமான விஷயமாகத்தோன்றவே செல்லில்

போட்டோ எடுத்து எனக்கும் அனுப்பினா. நானும் சில ஃப்ரெண்ட்ஸ்

களுக்கு அதை அனுப்பினேன். அன்று அவ வீ்ட்டில் நட்ந்த விஷயங்களை

பொனில் சொல்லிசொல்லி ஒரே சிரிப்பு.


அன்று காய் கட் செய்யும்போது வேலைக்காரி சிங்கில் பாத்திரம் தேய்த்துக்

கொண்டிருந்தாளாம். அவளும் இதைப்பாத்திருக்கா. உடனே மேம்சாப் ஆப்கா

கர்மே பப்பா ஆயாஹை. அதாவது அம்மா, உங்க வீட்டுக்கு கண்பதிபப்பா

வந்திருக்காரு.உடனே அந்த பைங்கனை பூஜா ரூம்ல வையி.சந்தன்,குங்கும்

வய்யி. நா கீழபோயி பூவு கொண்டரேன்.என்று கிளம்பிபோயி அக்கம்பக்க வீடுகளில் கண், காது,மூக்கு வச்சு பேனைப் பெருமாள் ஆக்கி எல்லாரிடமும்

சொல்லிட்டு வந்தா.

முதல்ல பக்கத்து வீட்டு மராட்டிக்காரி வந்தா.அஹொ,காய் ஸாலா?

என்னாச்சு? என்று கேட்டுண்டெ கிச்சன்ல வ்ந்தா.காயப்பாத்துட்டு அரெ

டேவான்னு கனனத்ல போட்டுண்டு விழ்ந்து நமஸ்காரமே பண்ணா .

ஒர்வழிஆ அவளைகிளப்பி அனுப்ப வேண்டி இருந்தது.

அடுத்து ் எதிர்வீடு பெங்காலிக்காரி, அரே பெஹன் கி ச்சாய்? ஆமி கிச்சு

கோர்போ நாக்க. திக்காவ். அவளும் வந்து பாத்்துட்டு பெஹன் ஆப்

பஹுத் குஷ் நசீப் வாலி ஹை. ( ரொம்ப லக்கி) உங்க விட்ல பகவான்

வந்திருகாங்க. உன்க்கு லாட்ரில முத பரிசு கிடைச்சு ப் பெரிய அமிர் ஆப்போராய் அப்போ என்னைலாம் மறன்துடாதே.என்று அவளும் புலம்பிட்

டு போனா.
அடு்த்து மேல் வீ்ட்டு மலயாள மாமி தன்னோட 80 கி் லோ உடம்ப

தூக்க முடியாம தூக்கிண்டு வந்தா. எந்தா மோளே. என்னவாக்கும் ஆச்சு?

எனக்குக்காட்டிக்கொடு. நா பாக்கட்டும் என்று கிச்சனில் வந்து கத்தரிக்காய்

தரிசனம்பண்ணினா. ஓ. இவ இன்னம் என்ன சொல்லப்போராளோன்னு

நினைச்சேன். அடி பொண்ணே, இந்தக்காய்ல யாரோ ஏவலோ.சூன்யமோ

வச்சிருக்காங்கன்னு தோணரதுடீ. உடனே இதைக்குப்பைல களைஞ்சுடுடீ

பொண்ணே.எண்ட குருவாயூரப்பா, நீதான் இவளுக்கு எந்தகஷ்டமும் நேராம

ரட்சிக்கணும். என்று வந்த வேகத்லியே திரும்பிட்டா. இந்த வேலைக்காரி

நாளைக்கு வரட்டும் அவ்ளை வச்சிக்கரேன்.இப்படியா ஊர்பூரா கொட்டுவா.

என்று அவமேல கோபம் ஒருபுற.ம் வந்தவர்கள் அடித்தகாமெண்ட்களில்

ஏற்பட்ட காமெடிகளென்று ஒருகத்தரிக்காய் படுத்தின பாடு இருக்கே.

அதோட நிக்கலை, அடுத்ததெருவிலும் ந்யூஸ்பரவி அனிமேஷன் படிக்கும்

இரண்டு மாணவர்கள் வேறு,ஆண்டி அந்தக்கத்தரிக்காய் காட்டுங்க என்கிரார்கள்.

3 நாள்ல அந்தக்கத்தரிக்காய் வாடி வதங்கி கடைசில குப்பைல

போட்டாச்சுன்னு,செல் ல எடுத்த்போட்டோவைக்காட்டினேன்.அந்தரெண்டு பசங்களும்

ஆண்டி இது அஸ்லி போட்டோதானே, ஏதும் க்ராபிக் ட்ரிக் இல்லியேன்னு வேர

கேக்கரா. என்னத்தை சொல்ல.

14 comments:

நிலாமதி said...

கல்லிலும் கடவுளை காணலாம் . உள்ளத்தில் இருப்பவனே இறைவன். நன்றி

LK said...

ஹஹஅஹா... நல்ல காமெடிதான் போங்க

komu said...

நிலாமதி நன்றி வருகைக்கு.

komu said...

L. K. வருகைக்கு நன்றி. இந்த பதிவு சரியா இருக்கா.
பார்மேட் ப்ராப்ளம்????????

meera said...

சூப்பர் கோமு நல்ல நகைசுவை உங்க மூன்லைட் டின்னர் ஞாபகம் வந்துடுத்து

komu said...

மீரா வருகைக்கு நன்றி.

nagasundari said...

கத்தரிக்காயில் கணபதியா,இதை நிஜம் என நினைத்தால் கடவுள் பக்தி,இது இயற்க்கையான விசயம் என நினைத்தால் நல்ல காமெடி என சிரிக்க வேண்டியது தான்.மொத்ததில் வேலைக்காரியின் கலாட்டா சிரிப்பை தான் வர வழைத்தது.

komu said...

எப்படியோ எல்லாரும் நல்லா சிரிக்கிரீங்க.

ஆனந்தி.. said...

என்ன கோமு...புது போஸ்ட் எதுவும் போடலையா?? சத்தமே காணோம்...??!!

komu said...

என்ன இன்னமும் நம்ம தார்க்குச்சியைக்காணோமேன்னு பாத்தேன். வந்தச்சா.

sivatharisan said...

சூப்பர்

komu said...

சிவதர்ஷன் சார் வருக.மீண்டும்,மீண்டும் வருக.

goma said...

2000ல் என் வீட்டுக்கு பிள்ளையார் வந்த கதை தெரியுமா பாருங்கள்...

http://valluvam-rohini.blogspot.com

komu said...

goma- பாத்துட்டு பின்னூட்டமும் கொடுதுட்டு வந்தேன்.