Thursday, November 18, 2010

Thursday, November 18, 2010

week end.
ஒருதடவை நான் என்ப்ஃரெண்ட்வீட்டுக்குப்பொயிருந்தப்போ, எப்ப பாத்தாலும்

சினிமா, பீச், மால் என்றே சுத்திருக்கோம். இந்ததடவை கொஞ்சம் வித்யாசமா

ஒரு இடம்போலாம்னு, என்னை க்கூட்டிப்போனா. மும்பையில் கல்யாண்,பிவண்டி

என்னும் இடங்களுக்கு நடுவில் ஒரு பெரிய மைதானம் இருக்கு. அங்கே போனோம்.

(chokhi dhani) சோக்கிதானி என்கிரபெயரில் ராஜஸ்தானிகளுடைய( மார்வாடி) பாரம்பர்யம் கலைகள், உடைகள், பழக்கவழக்கங்களை பொதுஜனங்களுக்கு காட்சியாக்கி இருந்தார்கள்.

முதலில் நுழைவாயிலே அவர்களின் கட்டட்டக்கலைக்கு சாட்சியாக அருமையாக வடிவமைத்திருந்தார்கள்.

வருபவர்களை அவர்களின் சங்கீதம், நாட்டியங்களுடன் உற்சாக

வரவேற்பு. உள்ளே போனதும் எண்ட்ரன்ஸ் டிக்கட் வாங்க ஒருபெரிய க்யூ.( வரும்படி வெணுமே)

லேடீஸ் நாங்கள் அந்த வட்ட வடிவமான ரூமைச் சுற்றிப்பார்த்தோம். அந்தக்காலத்தில் அவர்கள்

உபயோகித்த பாத்திரங்கள்,சங்கீத உபகரணங்கள், உக்காரும் நாற்காலி, மேஜைகள் என்று வைத்திருந்தார்கள்.

                                                      

அதையெல்லாம் சுற்றிப்பார்த்துவிட்டு டிக்கேட்ஸ் வாங்கிண்டு உள்ளே போனோம்.

அங்கே கொஞ்சம்பேர் அவர்களின் பாரம்பரிய உடையில் அதாவ்து,ஆண்கள் சிவப்புக்கலரில் பெரிய

தலைப்பாகை, குழந்தைகள் போடும் கவுன் போல மேலுடை, வெள்ளை காலுடை. அது சூடிதாரா, சல்வாரா, பாட்டியாலாவா என்று சொல்லவே முடியலை. போட்டிருந்தார்கள்.


                                                                  

பெண்கள் பலகலர்களில் அமைந்த புடவைமாதிரி ஒரு உடை, கைகளில் கலர்கலராக கண்ணாடி வளை

யல்கள், நெற்றி நிரைய வட்டப்போட்டு முந்தானையை தலையைச்சுற்றிப்போட்டிருந்தாரகள்.

வருகிரவர்களுக்கெல்லாம் திலகம் இட்டு கைகூப்பி வணங்கிpadahro mahro des என்றுகூறி வரவேற்றார்கள்.

எங்கள் ஊருக்கு வர்கை தந்ததற்கு சந்தோஷம் என்று அர்த்தம் வரும்.

உள்ளே நுழைந்ததும் ஜல்ஜீரா, ஆரஞ்ச் ஜூஸ், மேங்கோ ஜூஸ் என்றுஅமர்க்களமான வரவேற்பு.

                                                                      
உள்ளே குழந்தைகளுக்கான நிரைய விளையாட்டுக்கள்.குதிரை, ஒட்டகம்,யானை சவாரிகள்

மாட்டூவண்டி( மொட்டைவண்டி) ஜட்காவண்டி சவாரிகளென்று நிரைய பொழுதுபோக்கு அம்சங்கள்.

( எல்லாவற்றுக்குமே தனி சார்ஜ்சஸ்தான்)

மேஜிக்‌ஷோ, தலையில் வரிசையாக 10கலர் குடங்களை அடுக்கியவாரே சுழன்று, சுழன்று ஆட்டம்,

வருகிறவர்களுக்கெல்லாம் கயில்விதவிதமாக மெஹந்தி அலங்காரம் செய்து அசத்துகிரார்கள்.

ஒரு பெரிய மேடையில் ஒருவன் மத்தளம்போன்ற ஒருகருவியை இசைக்க இரண்டு சின்னப்
                                                          
பசங்க சுழன்று, சுழன்று என்னா ஆட்டம் ஆடரதுகள். வெள்ளை வெளேர் பேண்ட்( அதைப்பேண்ட் என்று

சொல்லமுடியாது), மேலேயும் வெள்ளை கவுன். தலையில் பெரிய முண்டாசு என்று பார்க்க மிகவும்

ஜோர்.

நம்ம ஊரு கழைக்கூத்தாடிகள்போல மேலே கயிற்றில் நடக்கும் திறமை சாலிகள். சுற்றிவர எல்லா

இடங்களிலும் அரிக்கேன் லைட்கள் தான் நிரைய மாட்டி வத்திருந்தார்கள். கண்ணைஉறுத்தாத இதமான

வெளிச்சம். இதுபோல ஒவ்வொரு இடமாக சுற்றிப்பார்க்கவே 3மணினேரம் ஆனது. பிறகு டைனிங்க் ஹால்

போனோம். ஒருபுறம் ப்ஃபே டின்னர். ஒருபுறம் வரிசையாக திண்டு பலகை போட்டு கீழே உக்காரவைத்து
                                                                        
அவர்களே பரிமாறும்டின்னர்ஹால். வரிசையாக பெரிய, பெரிய தாம்பாளங்கள், வைத்திருந்தார்கள்.

அனைவரும் வந்து அமர்ந்ததும் பரிமாற ஆரம்பிக்கிரார்கள். அன்பான உபசரிப்பு. முதலில் ஒருஸ்வீட்

பறிமாறி, யாருக்கானும்ஷுகர் கம்ப்ளைண்ட் இருக்கான்னு விசாரித்து பரிமாறுகிரார்கள்.

மொததமா 22 ஐட்டங்கள். பார்க்கும்போதே வயிறு நிறைந்துவிட்ட உணர்வு. இன்னும் கொஞ்சம் போட்டுக்கோங்க, இது ரொம்ப நல்லா இருக்கும், இது உடம்புக்கு ரொம்ப நல்லதுன்னு சொல்லி சொல்லி

பரிமாறுகிறார்கள்.அவ்வளவு டேஸ்டான உணவுவகைகள். இதில் பாதிஐட்டம் பேர் கூட தெரியலை.


                                                          

பிறகு ஃபையர் ஒர்க்ஸ்.பான் பீடா உபசாரம். மொத்தத்தில் ஒரு வித்யாசமான அருமையான

அனுபவம்

18 comments:

vanathy said...

Maami, super. Very nice photos.

ஆமினா said...

அவங்க கலாச்சாரங்களுக்கு எங்களையும் கூடிட்டு போன மாதிரி இருந்தது!

அழகான கட்டுரை கோமு! வாழ்த்துக்கள்

komu said...

வானதி வருகைக்கு நன்றி. அடிக்கடி வாங்க.

komu said...

ஆமி, ரொம்ப நன்றி. நேற்று அட்மின் அண்ணாவுக்கு
பர்த்டே விஷ் பண்ணிட்டு கொஞ்ச நேரம் சாட் பண்ணிட்டு இருந்தேன். நா ஒரு பயணக்கட்டுரை அனுப்பி 6 மாசமாச்சு எப்ப வரும்னுகேட்டிட்டுருந்தேன்.
என் ப்ளாக் வந்து பாத்து சில திருத்தங்கள் சொன்னாங்க உங்ககிட்டதான் விளக்கம் கெட்டு மெயில் ப்ண்ணுவேன்.

ஆமினா said...

நானும் கல்பனாவும் இத பத்தி தான் பேசிட்டு இருந்தோம். கல்பனா அனுப்புனதும் பெண்டிங்க்ல இருக்கு. யோகராணியும் நார்வே பத்தி எழுதுறதா சொல்லியிருந்தாங்க. அதுனால கொஞ்சம் லேட் ஆகும் கோமு. காத்திருங்க.

//உங்ககிட்டதான் விளக்கம் கெட்டு மெயில் ப்ண்ணுவேன். //

எப்ப வேண்டுமென்றாலும் தயங்காம கேளுங்க கோமு! எனக்கு தெரிந்தவரையில் சொல்றேன்.

Ravi kumar Karunanithi said...

images are nice....

kavisiva said...

அழகா எழுதியிருக்கீங்க கோமு! படங்களும் தெளிவா அழகா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க :)

ஆனந்தி.. said...

ஓ..கோம்ஸ்..நான் ரெண்டு நாள் இந்த பக்கம் வரலடா...இப்போ தான் பார்த்தேன்...நான் அப்புறம் வந்து படிச்சுட்டு reply பண்றேண்டா...அந்த தலைகீழா நிக்கிற நடராஜர் போட்டோ மட்டும் பார்த்து அசந்தேன்..இதோ கொஞ்ச நேரத்தில் வரேன்....

LK said...

அருமை. ஒரு சில யோசனைகள். தப்பா எடுத்துக்க வேண்டாம்...வரிகள் பார்மெட் கொஞ்சம் கவனியுங்கள். படிக்க கஷ்டமா இருக்கு

LK said...

அருமை. ஒரு சில யோசனைகள். தப்பா எடுத்துக்க வேண்டாம்...வரிகள் பார்மெட் கொஞ்சம் கவனியுங்கள். படிக்க கஷ்டமா இருக்கு

ஆனந்தி.. said...

கோம்ஸ்...படிச்சேன்...செமையான போஸ்ட் போட்ருக்கீங்க..இதுக்கு மேலே என்ன வேணும்? அழகான narration ,அழகான படங்கள்...உண்மையிலேயே உங்க விவரிப்பில் நானும் உங்க கூட சேர்ந்து அங்கே வந்து எல்லாத்தையும் ரசிச்ச மாதிரி உணர்வு...நிறைய எழுதுங்க கோம்ஸ்...

komu said...

ரவிகுமார் வருகைக்கு நன்றி.

komu said...

கவி, உங்க பதிவு எதிர் பாத்துகிட்டே இருந்தேன். சில டௌட்ஸ் இருக்கேம்மா.

komu said...

அப்பாடா ஒருவழியா எல்லாரையும் நம்ம பக்கம் பாக்கவச்சுட்டேன். ஆனந்தி இன்னமும் திருத்தங்கள்
என்ன சொல்லலாம்னு சொல்லி தாங்க. ஆஷிக்கோட
பதிவு பாத்தீங்களா???!!!!!!!!!!!!!

komu said...

L. K. வருகைக்கு மிகவும் நன்றி. நான் ப்ளாக்குக்கு ரொம்ப புதுசு. அந்த பார்மேட் எப்படி சரி செய்யனும்னு சொல்லித்தர முடியுமா?ப்ளீஸ்.

komu said...

ஆனந்தி, லேட்டா வந்ததால ரெண்டுமுறை வந்தீங்களா? தேங்க்ஸ்பா.

nagasundari said...

கோமு நேரில் பார்த்தது போல இருந்தது உங்க எதார்த்தமான வர்ணனனை.இது போல ஐதராபாத்தில் தோலாரி தனி என்கிற ஒரு இடம் இருக்கு,இதுவும் ராஜஸ்தானிகளின் பாரம்பரியத்தை விளக்குவதாகவே இருக்கும்.ஒட்டக சவாரி உட்பட அனைத்தும் இருக்கும்.

komu said...

சுந்தரி வரவுக்கு நன்றி. அடிக்கடி எட்டிப்பாருங்க.