Monday, December 20, 2010
Monday, December 20, 2010
ஹிமாச்சல் பிரதேஷ்(3)
ஹிமாச்சல் ப்ரதேஷ்( பகுதி-3)
எல்லாருக்கும் ஒரே இடத்தில் தங்க இடம் கிடைக்கலை. நானும் 2 குழந்தைகளும்முதல் மாடி வராண்டாவில், பாக்கி எல்லாரும் 2வது, 3வது மாடி வராண்டாக்களில்கிடைத்த இடங்க்ளில் மூட்டையாக சுருண்டு கொண்டோம். அந்த நேரத்திலும்குளிரிலும் தூக்கம் வரலை. வராண்டா ஓரமாக நின்று வெளியில் வேடிக்கை பார்த்துண்டு இருந்தேன். அந்த முழு நிலா ஒளியில் பெயர்தெரியாத பெரிய,பெரிய மரங்கள்எல்லாம் தக,தக என்று ஜொலித்துக்கொண்டிருந்தன. 3மனிவரையிலும் பார்த்துட்டு
வராண்டாவில் குழந்தைகள் கிட்ட உக்காந்தேன். வராண்டா பூராவும் கால்வைக்க இடமில்லாமல் அதனை ஜனங்கள்கம்பளிக்குள் சுருண்டிருந்தார்கள். எனக்கு படூக்க எல்லாம் இடமில்லை. சுவரில் சாய்ந்து காலை கம்பளிக்குள் நீட்டிண்டு உக்காந்தேன்.4மணிக்கு லேசா
கால் வலிக்க ஆரம்பிச்சுடுத்து. நான் எப்பவுமே பெயின்பாம் எல்லாம் கையோட கொண்டுபோயிடுவேன். கால்கட்டை விரலில் ஆரம்பித்து மெள்ள, மெள்ள முட்டி வரை விரு,விருஎன்று வலி ஏற ஆரம்பித்து விட்டது. வலி மட்டும் ஆரம்பித்து விட்டால் என்னை ஒரு வழிபண்ணிடும். அதுவும் இன்று ரொம்பவே ஸ்டெயின் பன்ணிண்டு 14கிலோ மீட்டர் ஏறி வந்து
காலுக்கு ரொபவே வேலை கொடுத்திருக்கேன். அது என்னை சும்மா விடுமா?வலி ஆரம்பித்துவிட்டால் நிக்கவோ, படுக்கவோ முடியவேமுடியாது.
சுவரில் சாய்ஞ்சுண்டு காலை நீட்டிண்டுஉக்கார மாடுமே முடியும்.கால் கட்டை விரலைக்கூட அசைக்க முடியாது. பிறகு எங்கே எழுந்துநடப்பது? விண்,விண் என்று நரம்பையும்,எலும்பையும் சேர்த்து பிடிச்சு இழுத்துடும். வலியில் உயிர்போய் வரும். 4.30க்கு மேலே இருந்து ஒவ்வொருவராக எழுந்து வந்தார்கள். என் முகத்தைபர்த்ததுமே என் வீட்டுக்காரருக்கு தெரிந்து விட்டது. என்ன கோமு கால் வலி ஆரம்பிச்சுடுத்தா?என்றுகேட்டு ச்சூடு பறக்க உள்ளங்காலில் பெயின்பாம் தேய்ச்சு விட்டார்.
அதி காலை நேரம் சன்னதியில் கூட்டமே இருக்காது. இப்போ போனா ஈஸியா தரிசனம் செய்துட்டு வந்துடலாம் என்று அவா எல்லாரும் சன்னதி நோக்கி போனார்கள். என்னை இப்படி விட்டுட்டு போக யாருக்குமே மனசு வரலை.என்
ஒருத்தியால மத்த்வாளுக்கு, எந்த கஷ்டமும் கூடாதுன்னு நானே அவர்களை அனுப்பி வைத்தேன்.6மணிக்கு அவர்கள் எல்லாரும் ஆனந்தமாக தரிசனம் முடிந்து வந்தார்கள். 7மணிமுதல் கோவில் வாசலில் மீண்டும் பெரிய க்யூ கூடிடுத்து. 7மணிக்கு மேல தான் என்னால மெதுவாக எழுந்து நிக்கவே
முடிந்தது. இவரின் கையை பிடிச்சுண்டு வராண்டாவிலேயே மெதுவாக நடந்து காலை நீட்டி,மடக்கிஎன்று நார்மலுக்கு கொண்டு வரதுக்குள்ள 8மணியே ஆயிடுத்து. அவர்களெல்லாருமே என்னாலசாமிதரிசனம் செய்யமுடியாமபோச்சே என்று ரொம்பவே ஃபீல் பண்ணினார்கள். அதிலும் அந்தவயதான குஜரத்திமாமி பெகன்ஜி கோவில் வாசல் வரையிலும் உன்னகஷ்டப்பட்டு ஏறி வரவைத்த தேவி என்ன் தரிசனம் பண்ண விடாமல்உன்காலை ஏன் பிடிச்சு இழுத்துட்டா.அதுவும்
இந்த கோவில் வரையிலும் வந்து தரிசனம் கிடைக்காமல் ப்போனவர் யாருமே கிடையாது. நீதான்இருக்கும். என்று எனக்காக அவர்களெல்லருமே ரொம்பஃபீல் பண்ணிண்டே இருந்தா.என்ன செய்ய
முடியும்.
அடுத்து என்ன? என்றகேள்வி. நம்மபக்கம் திருப்பதி, பழனி எல்லாமலை களிலும் நடந்துஏற்முடியலைன்னா பஸ்ஸோ, காரோ, விஞ்சோ எதில் வெணாலும் ஏறி போயிடமுடியும்.இங்க நடந்து தான் போகமுடியும், நடந்துதான் இறங்கவும் ம்டியும்.எல்லாருமே நேற்று மலை ஏறு
முன்பு ஒரு ஹோட்டலில் சாப்பிட்டதுதான். பிறகு எதுவுமேஇல்லை. கிழே எதாவது ஹோட்டல்இருக்கா என்று தேடி, ஒரு சிறிய ஹோட்டல் தெரிந்தது.வழக்கம் போல காப்பி இல்லை ச்சாயா.
எல்லாருமே சாயாவும் பிஸ்கெட்டும் சாப்பிட்டோம். அங்கும் ஐயோஇன்னம்14கிலோமீட்டர் கீழேநடக்கணுமே என்றே பேசிக்கொண்டிருந்தோம். நாங்கள் பேசுவதை ஹோட்டலில் சாப்பிட்டுகொண்டிருந்தஒருவர் கேட்டுட்டு திரும்ப நீங்க 14கிலோ மீட்டர் இறங்க கஷ்டமா இருந்தா இன்னொரு வழி இருக்கு
என்றார். இங்கேந்து2கிலோமீட்டர் மேல ஏறி போனா ஹெலிபேட் இருக்கு. அங்கேந்து ஹெலிகாப்டர்லஈஸியா கீழ போயிடலாம். என்று ஒரு சூப்பர் ஐடியாகொடுத்தார்.உடனே எலாரும் மேல ஏறஆரம்பித்துவிட்டோம்.யாருக்குமே நடக்க தெம்பே இல்லை. அவர்களெல்லாரும் குதிரையில் போனா,நான் நேற்று செய்த குதிரைசவாரி இனி நான் குதிரையில் ஏறவேமாட்டேன் என்று சொல்ல வைத்தது.
நானும் அந்த 10 வயது பையனும் நடந்தோம்.2மணி நேரத்தில் 2கிலோமீட்டரை ஏறி முடித்தோ.ம்மேலேந்து கீழ பார்த்தா கிடு,கிடு பள்ளம். அவ்வளவு உச்சில இருந்தோம்
.ஒரே ப்ராப்ளம் யாரோடசெல்லிலும் சிக்ன்லே கிடைக்க மட்டறது.பெ,,,,,,,,,,,,,,ரி,,,,,,,,,,,,,யமைதானம். பக்கத்தில் சின்னரூம். ஒரு நேரத்தில் 4பேர் போகத்தான் டிக்கெட் கொடுக்கிறார்கள்.வித்யாசமான ஹெல்காப்டர் ப்ரயாணம்.ரொம்பவே த்ரில்லிங்கக இருந்தது.ஹெலிகாப்டரில் இருந்து வெடிக்கை பாத்துண்டே போவது ஸீனரிகளை நன்கு ரசித்துகொண்டே போகமுடிந்தது.5- நிமிடங்களில் கிழ கத்ரா வந்தாச்சு. நேர் ரூம்ல போய் விழுந்தோம். பால்கனி கதவை திறந்தால் குரங்குகள் ஹலோ சொல்றது. ஐயோ, திரும்பிய இடமெல்லாம்குரங்கு களின் கூட்டம்தான்.1மணி நேரம் ரெஸ்ட். கீழ போய் சாப்பிட்டு, மூட்டை,முடிச்செல்லாம் ரெடி
பண்ணிட்டு அடுத்த பயணத்துக்கு ரெடி ஆனோம். டல்ஹவுசி என்று ஒரு இடத்திற்கு ட்ராவலர் டெம்போவில் பயணம்.இதுவும் மலை வழி பயணம்தான். கரெக்டான டயத்தில் வேன் காரன் வந்துட்டான்.
பஞ்சாபி ட்ரைவர், ஒருக்ளீனர் நாங்க 15 பேர். பெரியவண்டிதான். நல்லச்வுகர்யமாகவே இருந்தது.வளைந்து,வளைந்து மலையில் வண்டி ஏறும்போது சிலபேருக்கு வய்ற்று உபாதை ஆயிடுத்து.
ட்ரைவர் ஃபுல்சவுண்டில் பஞ்சாபி பாடல்களை போட்டு கேட்டுண்டேதான் வண்டி ஓட்டினான்.அவனும்நல்லமாதிரி இருந்தான்.வெளியில் என்னஒரு அழகு.இயற்கை தன் பூரா அழகையும் ஹிமாச்சலில்
கொட்டிவைத்திருக்கு போல இருக்கு. அப்படி ஒரு அற்புதமான அழகு காட்சிகள்.வாழ் நாளில் என்றுமேமறக்கமுடியாது. இரவு சாப்பாட்டிற்கு ஒரு ரோட்டோர பஞ்சாபி தாபாவில் ஹால்ட். பெரிய பந்தல் போட்டு கிழ 10 கயற்று கட்டில்கள் வரிசையாக போட்டிருந்தா. நாம போய் ஆர்டர் பண்ணின பிறகுதான்சாப்பாடு ரெடி பண்ண ஆரம்பிக்கிறார்கள். ஃப்ரெஷ்ஷா சூடு,சூடா பூல்காரொட்டி தால்,பாஜி, க்ரீன் ச்லாட்ஸ்வீட் லஸ்ஸி என்று அமர்க்களமான சப்பாடு. ச்சூலா (கோட்டை அடுப்பு.) வில்தான் சப்பாத்தி சுட்டு எடுக்கிறார்கள். பஞ்சாப் கோதுமை இல்லையா அபார டேஸ்ட்.கை அலம்ப அடிபம்ப். எல்லாருமே அந்தஅட்மாச்பியரை நல்ல எஞ்சாய் பண்ணினோம். இருட்டில் எதயுமே பார்க்க முடியலை.வழியில் ஸாம்பா,
லக்கன்பூர்,பதான்கோட் என்று சின்ன,சின்ன ஊர்களைதாண்டி போனோம். டல்ஹவுசிக்குள் நுழைவதற்கு,நிறைய செக்போஸ்ட்களை தாண்டி போகவேண்டி இருக்கு
.ரொம்ப,ரொம்ப உச்சில இருந்தோம். முழு நிலா கையெட்டும் தூரத்தில் இருந்தது. நடு இரவு டல்ஹௌசி மணி மகேஷ் என்னும் ஹோட்டலில் வந்து இறங்கினோம். ரூம் எல்லாம் ஏற்கனவே ஆன்லைன் மூலமாக புக் பண்ணி யிருந்ததால எல்லாம்
ரெடியாக இருந்தது.2,2, பேருக்கு ஒரு ரூம்.ட்ரைவரையும், க்ளீனரையும் பார்த்ததும் ரொம்ப டயர்டாதெரிந்தார்கள். அவர் களுக்கும் ஒரு ரூம் புக் பண்ணிக்கொடுத்தோம். இருவருக்குமே ரொம்ப சந்தோஷம்.
எங்களுக்கு யார் சார் இப்படி ரூமெல்லாம் புக் பண்ணி தருவர்ர்கள்? ரொம்ப தேங்க்ஸ் சார் என்றுதிரும்ப,திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தார்கள். குளிர் இடம் என்பதால் பூராவும் மரத்தாலேயே ரூமை
கட்டி இருந்ததார் கள். தரையிலும் கனத்த கார்பெட் விரித்து இருந்தார்கள். வெளியில் வேடிக்கை பார்க்க வசதியாக பெரிய,பெரிய கண்ணாடிபதித்த ஜன்னல் கள். இரவு நேரம் எதுவும் பார்க்க முடியாது என்று
எல்லாருமே அவர் அவர் ரூம்களில் கம்பளிக்குள் சுருண்டுகொண்டோம். ரூம் ஹீட்டரும் வைத்திருந்தார்கள். நல்லதூக்கம். இனி நாளைய பயணம்.
Labels:
பிக்னிக் டூர்(3)
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
நல்லா எழுதறீங்க..
தொடர்ந்து எழுதுங்க சகோ.
நன்றி. அடிக்கடி வாங்க
அட என்ன இது இப்படி ஆய்டுச்சு அவ்வளவு தூரம் போயும் சாமி பார்க்க முடியலையா ??
ஆ...
அடுத்த பதிவும் போட்டாச்சா....
ம் வழக்கம் போல சூப்பர் கோமு
அதுவும் தனியா ரூம் போட்டு கொடுத்தது பார்த்து எனக்கும் உங்க மேல தனி மரியாதையே வந்துருச்சு!!!!!
super, Komu.
ஆமா கார்த்திக் வாசல் வரை வந்தவளை உள்ளவரவிடாம பண்ணின சாமி மேல கோபம் வருத்தம் எல்லாம் வந்தது.மத்தவங்கலாம் தரிசனம் பண்ணி குஷியோட இருக்கப்போ நம்ம ஃபீலிங்கை வெளிய காட்டிக்காம இருக்க ரொம்ப கஷ்டமா இருந்தது தெரியுமோ? எல்லாத்தையும் உள்ள முழிங்கிண்டேன்.
ஏன் ஆமி லேட்டு? ரொம்ப பிசியோ? அந்த ட்ரைவர், க்ளீனரும் மனுஷங்கதானே. நாமளாவது சும்ம உக்காந்து எஞ்சாய் பண்ணிகிட்டுப்போறாம். ஆனா, அவங்க எவ்வளவு பொறுப்பா மலைப்பாதையில் வண்டி ஓட்டீண்டு போகணும்.அவக்களுக்கும் ரெஸ்ட் வேனுமில்லையா? அதான்பா.
வானதி தேங்க்யூம்மா.
goms..will be back and read ur post...:))
ஆனந்தி வருகைக்கு நன்றி.
Post a Comment