Sunday, December 26, 2010

Sunday, December 26, 2010

ஹிமாச்சல் பிரதேஷ்(4)

ஹிமாச்சல்ப்ரதெஷ்(பகுதி-4)

டல்ஹௌஸி 5மலைகளின் மேலே கட்டப்பட்டிருக்கு.katlog, patreyn, tehra, bakroda, and, balun.
19-வதுசெஞ்சுரி கவர்னர் ஜெனரல் லார்ட் டல்ஹௌஸி. அவர் இங்கு அடிக்கடி இங்கு
வந்து தங்கியதால், அவரின் ஞாபகார்த்தமாக, இந்த இடத்திற்கு அவரின் பெயரைவைத்திருக்கிறார்கள். கடல் மட்டத்திலிருந்து 2036 மீட்டர் உயரத்தில் உள்ளது. பைன்,ஓக், தியோதர்ஸ் மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன. rhododendron என்ற பூக்களின் தோட்டமும்நம் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.ரவி என்கிறபெயரில் ஒரு பெரிய நதி டல்ஹௌஸியைச்சுற்றி
வெள்ளியை உருக்கி வார்த்ததுபோல வளைந்து, நெளிந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. பனி மூடியdhauladhar மலைகள் வேறு திரும்பிய பக்கமெல்லாம். டெல்லியிலிருந்து485 கிலோமீட்டர்,ரோட்ஸைட்டில்
சாம்பாவிலிருந்து 52கிலோமீட்டர், 80கிலோமீட்டரில் பதான்கோட். ஏர்போர்ட் gaggal,,in,kangraa 135கிலோமீட்டரில்.இங்கேருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் சுபாஷ்போலி என்று ஒரு இடம். 1937-ல்
சுபாஷ் சந்த்ரபோஸ் இங்கு, அடிக்கடி தங்குவதுண்டாம். மெடிடேஷனுக்கு பெஸ்ட் ப்ளேஸாம்.காந்திசௌக் என்னுமிடத்தில் அழக்ழகான சர்ச்சுகள் இருக்கிறது. ஷாப்பிங்க்செண்டரில்திபேத்தியர்களின் கைவண்ணத்தில் உருவான ஃபுலோவர், கார்பெட், சம்பா ஸ்பெஷல் ஸ்லிப்பர்ஸ்,ஷால்,
க்ளௌஸ், சாக்ஸ் என்று கம்பளி உடைகள் நிறைய கிடைக்கின்றன.
நான்7 மணிக்கு எழுந்தேன்.ரூம் ஹீட்டர் இர்ந்தாலும்கூட ரொம்பவே குளிறாகத்தான் இருந்தது.
பாத்ருமில் பல்தேய்க்கப்போனேன். 5ஸ்டார் ஹோட்டல் ஆத்லால் பெரிய டர்கிஷ் டவல்,சிறியடர்கிஷ் நாப்கின், புது சோப் எலாம் புதுசாக ஃப்ரெஷ்ஷாக சுத்தமாக வைத்திருந்தார்கள். பல்தெய்ச்சுட்டுரூம் சர்வீஸை கூப்பிட்டு காபி இருக்கா என்றேன். எஸ் மேடம் என்றான். ஒன் காபி ப்ளீஸ் என்றேன்.
காபி குடிச்சே5 நாட்களாச்சு. ஜன்னலில் போட்டிருந்த கனமான திரைகளை ஒதுக்கி வெளியில் வேடிக்கைபார்த்தேன். அப்பப்பா!!!!!!!!!!!!!!! என்னஒரு அற்புதமான காட்சி.அருமையாக பனி பொழிந்து கொண்டிருந்தது.
ஆகாசத்திலிருந்து யாரோ அவலை பவுடராக்கி ஸ்ப்ரே பண்ணுவதுபோல வெள்ளை பனிமழைமலைகளிந்தலையில் வெள்ளை தொப்பி போட்டதுபோலபனி மூடி இருந்தது. உயர, உயர மரங்களின்
இலைகள் மேலும் பனித்துளிகள். இந்த குளிரிலும் கீ, கீ என்று கத்திகொண்டு கிளிகள் கூட்டம்,கூட்டமாகபறந்துகொண்டிருந்தன. அவற்றை பிடிக்க குரங்குகளின் கூட்டமும் மரத்திர்கு,மரம் தாவி குதித்து
விளையாடிக்கொண்டிருந்தன. கிளி, குரங்குக்கெல்லாம் குளிரவே, குளிராதா?இந்த அழகை ரசிக்காமல்எல்லாரும் இன்னமும் எப்டிதூங்கிண்டு இருக்கா. வேடிக்கை பார்த்துண்டு இருந்ததில் காபியை மறந்தே
போனேன். ரூம் சர்வீஸ் பையன் டீபாயின்மேல் குட்டி ஃப்ளாஸ்கில் காபியும், கூடவே அன்றைய நியூஸ்பேப்பரும் கொண்டு வைத்திருந்தான். மேலோட்டமாக பேப்பரில் ஹெட்லைன்ஸ் மட்டும் பார்த்துட்டு
காபியை துளி, துளியாக ரசித்துகுடிச்சுண்டே ஜன்னலுக்குவெளியே வேடிக்கைதான்.ஒவ்வொருவராக8மணிக்கு எழுந்து வந்தார்கள்.அவர்களுக்கும் இந்த அற்புதமான காட்சிகளைப்பார்த்ததும் அவ்வளவுசந்தோஷம். 9மணிக்கு கீழே டைனிங்க் ஹாலில்போய் எல்லாரும்ஒன்றாக ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டு ரூம்.
அடுத்து என்ன? ட்ரைவரும் கூடவே இருந்ததால அவனே எங்க போலாம் என்று ஐடியா கொடுத்தான்.குளித்து 12மணிக்கே அனைவரும் ஒன்றாக அமர்ந்து லஞ்ச் சாப்பிட்டு சரியாக ஒரு மணிக்கு கிளம்பி
னோம். ஹஜ்ஜியார் என்னும் பிக்னிக் ஸ்பாட்டுக்கு.


இண்டியாவின் ஸ்விட்சர்லாந்த் என்று ஹஜ்ஜியாரை சொல்வார்களாம். ஹஜ்ஜினாக் என்று ஒரு
கோவில் இருக்காம். 12-வதுசெஞ்சுரியைசேர்ந்ததாம்.அங்கு பஞ்ச பாண்டவர்களுக்கு லைஃப்ஸைஸ்சிலைகளை மரத்தினால் செய்துவைத்திருக்கிறாகள்.அதை எல்லாம் பார்த்துவிட்டு இன்னும் மேலே,
மேலே ஹஜ்ஜியார் போனோம்.25கிலோமீட்டர் டல்ஹௌஸிலேந்து டெல்லிலேந்து520கிலோமீட்டர்.அப்போதுதான் சூரிய பகவான் வெளியில் வரலாமாஎன்று மேகங்களில் இருந்து எட்டிப்பார்த்துக்கொண
டிருந்தார். மேலே போகப்போக மேகங்களையே கைகளால் தொட்டு விடலாம் போல அவ்வளவுகிட்டத்தில் மேகங்கள். சூரிய ஒளியில் மரங்களில் இருந்த பனித்துளிகள் உருகி வைரத்துளிகள் போலடாலடித்துக்கொண்டிருந்தன. இரவின் பனிப்பொழிவால் ரோடெல்லாம் ஒரே ஈரமா இருந்தது.போகும்
வழி பூராவும் மடிப்பு,மடிப்பாக மலைகளின் அடுக்குகள் அவைகளின் த்லையில் பனியால் வெள்ளைதொப்பிகள். நீள நெடுக வளர்ந்திருந்த பை,ன் ஓக் மரங்கள். வேன் மலைப்பாதையில் வளைந்து, வளைந்துபோகும்போது எல்லா காட்சிகளுமே கண்களுக்கு விருந்தாக இருந்தன. எதைப்பார்பது எதை விடுவது
என்று கழுத்தை திருப்பி, த்ருப்பி பார்த்துக்கொண்டே வந்தோம்.


ஒடிக்கொண்டே இருந்த வேன் ஒருஇடத்தில் நின்றது. இறங்கி பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் பரந்த பச்சை,பசேல் புல் வெளி
வெல்வெட் கார்பெட் விரித்திருப்பதுபோல அப்படி ஒரு புல்வெளி மைதானம். சுற்றிவர பைன், ஓக்டியோதார்ஸ் மரங்களின் அணி வகுப்பு. பெரியவர்கள், சிறியவர் களுக்கு விளையாடி மகிழ நிறையபொழுதுபோக்குகள். ராட்சச பலூன்களை உருட்டி, உருட்டி குழந்தைகள் குதூகலித்தார்கள். பெரியவர்கள்
பாராக்ளைடிங்க் விளையாடி களித்தார்கள். ஹிந்தி சினிமாக்களில் டூயுட் சாங்கெல்லாம் இங்கு வந்துதான் ஷூட் செய்வார்களாம். கொஞ்சம்தள்ளி ரோட்டொரமாக கைவண்டியில் சோளம் சுட்டுக்கொண்டிருக்கும் வாசனை மைதானத்தில் இருக்கும்


அத்தைனைபேரையும்வாங்கவைத்துவிட்டது.அல்லாரும் ஜாலியக எஞ்சாய் பண்ணினதில் டயம் போனதே தெரியலை. மணி6 ஆயிடுத்து. ட்ரைவர் தான் அதைஞாபகப்படுத்தவேண்டி இருந்தது. இருட்டிலும் குளிரிலும் வண்டி மெதுவாகத்தான் போக முடிந்தது.மணிமஹேஷ் ஹோட்டல் வந்து சேரும்போது 8 மணி ஆயிடுத்து.கைலாஷ் மானசரோவர் யாத்திரை போகும்போது அங்குள்ள மலை உச்சிக்கு மணிமஹேஷ்
என்று பெயராம். இமயத்தின் உச்சியில் இருக்கும் இந்தஒட்டலுக்கும் அந்த பெய்ரை வைத்தாகளாம்.இரவு டின்னரும் கீழே டைனிங்க் ஹால் போய் அனைவரும் ஒன்றாகவே அமர்ந்து சாப்பிட்டோம்.
ட்ரைவரும், கிளீனரும் ரொம்பவே நெகிழ்ந்து போயிருந்தார்கள். சாப் நாங்களும் இந்த ஹிமாச்சலில்பலவருடங்களாக இருக்கோம். இந்த ஓட்டலுக்கும் நிரைய தடவை டூரிஸ்டுகளை கொண்டு விட்டிருக்
கோம் ஆனா இந்தமாதிரி ஒரு5ஸ்டார் ஹோட்டலில் சொகுசா ஒருனாள்தங்குவோம் என்றோ,இப்படிஅருமையான சாப்பாடுகளை சாப்பிடுவோம் என்றோ கனவில்கூட நினைத்ததில்லை. நீங்க எப்படி
எல்லாம் எஞ்சாய் பண்ணினீங்களோ எல்லாவற்றையும் எங்களையும் உங்களில் ஒருவனாக எண்ணிஎங்களுக்கும் கிடைக்க செய்ஞ்சீங்க.


உண்மைலேயே உங்களுக்கெல்லாம் ரொம்ப பெரிய, தாராள
மன்சுங்க. யாருக்கு இப்படி ஒரு மனசு வரும். உண்மைல நாங்க எங்க நன்றியை எப்படி தரியப்படுத்துவது என்று தெரியாம தவிக்கறோம். மனசு பூராவும் சந்தோஷம் நிரைஞ்சிருக்கு. நீங்க் திரும்ப எப்போ
இந்த பக்கம் வந்தாலும் எனக்கு ஒரு போன் பண்ணிடுங்க. நான் ஸ்டேஷனுக்கே வந்து உங்களைஅழைச்சுண்டு வரேன். உங்களுக்கு எங்கேயெல்லாம் சுற்றிபார்க்கணுமோ நானே எல்லா இடங்களுக்கும்
கூட்டிண்டு போரேன். இனி இப்படி ஒரு அருமையான மனிதர்களை எப்போ பார்க்கப்போறோமோ?பிறகு ரூம் போய் கம்பளிக்குள் சுருண்டு கொண்டோம். நாளைய ப்ரோக்ராம் என்னா?

15 comments:

ஆமினா said...

சூப்பர் கோமு!!!

வழக்கம் போல அந்த இடத்துக்கே போய்ட்டு வந்துட்டேன்

komu said...

தேங்க்ஸ் ஆமி.

vanathy said...

கோமு, சூப்பரா இருக்கு. அதுவும் கடைசி பாரா மனதை தொடுகிறது. அவர்களும் மனிதர்கள் தானே என்று நிறையப் பேர் நினைப்பது இல்லை.

komu said...

வானதி வருகைக்கு நன்றிம்மா.

ஆனந்தி.. said...

super koms

komu said...

தேங்க்யூ ஆனா.

komu said...

தேங்க்ஸ் ஆனா.

ஆனந்தி.. said...

இன்ச் by இன்ச் விவரிக்கும் கோமு...உங்களுக்கு அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..:))

ஆமினா said...

உங்களுக்கு விருது கொடுத்துருக்கேன்!!!

மறக்காம/மறுக்காம வாங்கிக்கோங்க

http://kuttisuvarkkam.blogspot.com/

Mahi said...

நல்லா ஊர் சுற்றி காமிக்கிறீங்க கோமு!
ட்ரைவர்,க்ளீனரை கவனித்துக்கொண்டதுக்கு பாராட்டுக்கள்!

எல் கே said...

நல்ல விவரிப்பு கோமதி மேடம். புதிய இடங்களை தெரிந்து கொள்கிறோம்

komu said...

ஆனந்தி பாராட்டுக்கு நன்றி. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

komu said...

என்ன விருது ஆமி?:)

komu said...

மஹி, வருகைக்கு நன்றி. அவங்களும் மனுஷங்கதானே.

komu said...

கார்த்திக் புதிய இடங்களை படிச்சுத்தெரிஞ்சுண்டா போறுமா? ஒரு ட்ரிப்புக்கு அரேஞ்ச் பண்ணி போயிட்டுவாங்க.