Thursday, December 9, 2010

Thursday, December 9, 2010

ஹிமாச்சல் பிரதேஷ்(1)

சிரியா கட்டுரையை படிக்கும்போதே நான் போய் வந்த சில வெளி நாடுகளைப்
பற்றி எழுதி அனுப்ப எனக்கும் மிக ஆர்வமாக இருக்கிறது. அவங்களை மாதிரி
அவ்வளவு தெளிவா எழுத வருமா, சந்தேகம்தான்.(புலியைப்பார்த்து பூனையும்
சூடுபோட்டுக்கொள்கிறதது.)
நம்ம ஸௌத்திலேயே பார்த்து ரசிக்க நிரைய இடங்கள் எவ்வளவு இருக்கு.
நான்முதலில் என் ஹிமாச்சல் ப்ரதேச சுற்றுலா விலிருந்து ஆரம்பிக்கிரேன்.
இது வெற்றிகரமாக எழுதி முடித்தால், ஆப்ரிக்கா,சிங்கப்பூர், ஹாங்காங்க்,
ஜப்பான் சுற்றுலாக்கள்பற்றி எழுதலாம் என்றிருக்கிரேன்.



நாங்கள் இருவர், அவரோட ஃப்ரேண்ட்ஃபேமிலியில் ஹ்ஸ்பண்ட்,ஒய்ஃப்
10 வயதில் ஒரு பையன்,2 வயதில் ஒரு பையன்,இன்னுமொரு குஜராத்தி
ஃப்ரேண்ட் அவன்ஃபேமிலியில்6பெரியவர்கள்4சிறியவர்களென்று மொத்தம் 10
பேர்கள் டூர் கிளம்பினோம். இங்கெல்லாம் தீபாவளிசமயத்தில்தான் குழந்தகளுக்கு
25 நாட்கள் வரையிலும் ஸ்கூலில் லீவ் விடுவார்கள். அந்த சமயத்தில்தான்
க்ளைமேட்டும் ப்ளெஸண்டா இருக்கும் என்று அப்போதான் டூர் ப்ரோக்ராமையே
பிக்ஸ் பண்ணிக்கொள்வார்கள். நவம்பர்மாதம் 20தேதியில் கிளம்ப ஒருமாத்த்திற்கு முன்பே ஆன்லைன் மூலமாக ஃப்ளைட்,ட்ரைன் வேன் எல்லாமே
புக்பண்ணியிருந்தா. அதுமட்டுமில்லாம போகும் இடங்களில் தங்குவதற்கும் ஹோட்டல் களில் ரூம்களும் புக் பண்ணி இருந்தா. நாங்கள் இருவரும் முதல்
நாளே கிளம்பி, மும்பை யில் இருக்கும் ஃப்ரெண்ட் வீடு போய்ட்டோம்.
தாணே சைடில் வசதியான 3பெட் ரூம் ஃப்ளாட். எல்லா ரூமிலும் ஏ.ஸி.
சௌரியங்கள். இரவு சாப்பாடு முடிந்து சிறிது நேரம் எல்லாரும் ஹாலில்
உக்காந்து பேசிக்கொண்டிருந்தோம். முதலில் குலு மணாலி போவதாகத்தான்
ப்ளான் இருந்தது. போன்செய்து விசாரித்ததில் அங்க இப்போ ஸ்னோ ஃபால்ஸ்
ரொம்ப ஜாஸ்தியாக இருப்பதால் நிரைய ரோட் சைட் ட்ராபிக் எல்லாம் ஸ்டாப்
பண்ணிட்டாளாம். ஹோட்டல்களெல்லாமெ ஃபுல்லாம். அதனால ப்ளானில்
கொஞ்சம் சேஞ்ச் பண்ணி வெறு, வெறு இடங்களை செல்க்ட் செய்து எல்லா
ஏற்பாடுகளும் செய்திருப்பதாக ஃப்ரெண்ட் சொன்னார்.
மறு நாள் காலை 9 மணிக்கு மும்பை டு டெல்லிக்கு போற ஏர்டெக்கன் என்னும்
ஃப்ளைட்டில் புக் பண்ணி இருந்தார்கள்.அதிகாலை எல்லாருமே சீக்கிரமே எழுந்து
குளியல் காப்பி, ப்ரேக் ஃபாஸ்ட் எல்லாம் முடிந்து 7மணிக்கு வீட்டை விட்டு
கிளம்பினோம். ஃப்ரெண்ட் கிட்ட ஸாண்ட்ரோ வண்டி இருந்தது. அவரேதான்
ட்ரைவ் பண்ணினார்.சரியா 8 மணி சாந்தாக்ரூஸ் ஏர்போர்ட் வந்தோம்.
எங்களுக்கு முன்பே குஜராத்தி ஃப்ரெண்டும் அவா ஃபேமிலியும் வந்திருந்தா.
ஒரெகல,கல பேச்சும் சிரிப்பும்தான். 10 பேர் க்ரூப்பாக ட்றாவல் பண்ணினால்
எவ்வளவு லக்கேஜ் இருக்கும்? எங்களுக்கும் அப்படித்தான்.
ஏர்டெக்கன் 9மணிக்கு என்று முதலில் சொன்னார்கள்.சாமான்களை பேக்கேஜில்
போடப்பொகும்போது ஏர்டெக்கன் சாயங்காலம் 5மணிக்கு தான் கிளம்பும்
என்கிறார்கள். எல்லாருமே அப்செட். அதுவரை இங்க உக்காந்து என்ன பண்ணரது ? ஆண்கள் அனை வரும் கூடிப்பேசி காலை இப்பவே டெல்லி போக
வேறுஎதாவது ஃப்ளைட் இருக்கா என்று கௌண்டர்,கௌண்டரா போய் விசாரித்து 11 மணிக்கு ஏர் சஹாரா ஃப்ளைட் ஒன்று இருந்தது. அதில் காலி
இடமும் இருந்தது. யோசிக்கவே இல்லை உடனே அதில் டிக்கெட் எடுத்து
அனைவரும் ஏறி உக்காந்தாச்சு. அப்பாடா ஒருவழியா ஃப்ளைட் பிடிச்சாச்சு.
இங்க லேட் ஆனா எல்லா இடங்களிலும் லேட் ஆயிடும். எல்லா இடங்களிலும்
ஏற்கனவே எல்லாம் அட்வான்ஸா புக் வேற பண்ணியாச்சு. எல்லாமே வேஸ்ட்
ஆயிருக்கும். மும்பைஃப்ரெண்ட் டோட ஒய்ஃப்,குழந்தகள், குஜராத்திகாரஃபேமிலி
எல்லாருமே இதுதான் முதல் ஃப்ளைட் ஜர்னியாம். கொஞ்சம் தகறாறு பண்ணினார்கள். இது பட்ஜெட் ஃப்ளைட் அத்னால சாப்பிட எதுவும் தரமாட்டா.
2மணி டெல்லி ஏர்போர்ட். அங்கேயிருந்து பார்மாலிட்டிஸ் முடிந்து வெளியில்
வந்துஒரு அம்பாசிடர், 2 ஆம்னி டாக்ஸிகள் பிடித்துகிளம்பினோம் டெல்லி டு
ஜம்மு போக ட்ரெயினில் புக்பண்ணியிருந்தோம்.அது இரவு 8.30.க்குதான்
இருந்தது.அதுவரை டைம் பாஸ் பண்ணனுமே? முதலில் ஸ்வாமி நாராயன்
டெம்பிள்போனோம். 4மணிவரை அங்க சுற்றி பார்த்துட்டு(கோவில் மிக நன்றாகவே இருந்தது.)ஒரு நல்ல ஹோட்டலைத்தேடிப்போனோம். ரொம்ப,ரொம்ப சுமார் டைப் ஹோட்டல்கள்தான் கண்ல பட்டுது. குஜராத்திகாரா
ஃபுல் தாலி வாங்கி சாப்பிட்டர்கள். பாக்கி எல்லாருமே யாருக்கு என்ன தேவையோ வாங்கி சாப்பிட்டார்கள். எனக்குதான் ஹோட்டலை பாத்தா சாப்பிடணும்னே தோணலை.வெரும் காபி மட்டும் குடித்தேன்.அதுமுடிந்து க்ரேட்
இண்டியா கேட் போனோம்.அங்கயும் ஒருமணி நேரம் டைம்பாஸ். நிறைய
குழந்தைகள் இருந்ததால ஒரு குழந்தை ப்லூன் கேட்டால் எல்லாகுழந்தைகளுமே
கோரசாக எங்களுக்கும் பலூன்வேணும் என்றுராகம்பாட ஆரம்பித்துவிடுகிறார்கள்.6மணிக்கே இருட்டிடரது. எதுவுமே சரியா பார்க்க முடியலை மூன்று கொடிகள் பறக்கிறதே அதுஎன்ன? இது என்ன என்று என்
மனதில் ஏக கேள்விகள்.பேருக்கு டெல்லி வந்த மாதிரி ஆச்சு.7.30. ரயில்வே
ஸ்டேஷன்.ஒரே குப்பையா கசமுசான்னு இருக்கு டெல்லி ரயில்வே ஸ்டேஷன்.
இங்கேருந்தே ஸ்டார்ட்டிங்க் வண்டிதான் செகண்ட் ஏ.ஸி. யில் புக் பண்ணியிருந்தா.இரவு நேரம் ஆனதால வெளியில் எதுவுமே பார்த்து ரசிக்க முடியலை.கரெக்டாக விடிகாலை 7மணி ஜம்முதாவி ஸ்டேஷன் வந்தது.
இறங்கினதுமே செமை குளிர். பல்லெல்லாம் கிடு,கிடு தான்.3 அம்பாசிடர் டாக்ஸி
பிடித்து 8மணி கிளம்பினோம். வழி பூராவும் சுகமான இயற்கை காட்சிகள்.
கூடவே குரங்குகளும் கூட்டம்,கூட்டமாக தாவி விளையாடிண்டு இருக்கு.
பாதை மிக ஏற்றமா இருந்ததால்50.கிலோமீட்டர் போகவே 2மணி நேரம் ஆச்சு.
மிடில்ல ஒருபெட்டிக்கடையில் வண்டியை நிறுத்தி எல்லாரும் ச்சாயா,ப்ரெட்,
பிஸ்கெட் சாப்பிட்டு கிளம்பினோம்.10மணிக்கு கத்ரா என்னுமிடம். அங்கும் 2,2
பேருக்கு ஒர் ரூம் என்று ஹோட்டலில் ரூம் புக் பண்ணியிருந்தார்கள்.
நல்லவ்சதியாகவே இருந்தது. அதுவரை இவர்களின் ப்ரயாணம் பற்றி நான்
எதுவுமே கேட்டுக்கொள்ளவில்லை.எங்கெல்லாம் போரோம் என்ன ப்ளான் என்று
ரூமில் தனியாக வந்த பிறகு தான் இவரிடம் கேட்கவே முடிந்தது.இப்போ
முதலில் எல்லாரும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துண்டு 3மணிக்கு கீழ
போய் ஒரு ஹோட்டலில் லஞ்ச் முடிச்சுண்டு உடனே 14 கிலோமீட்டர் மலை
ஏறிப்போய் வைஷ்ண்வி தேவி த்ரிசனம் பண்ணப்போரோம்.பாக்கி விபரங்கள்
வந்து சொல்ரேன், இப்போ ரொம்ப டயர்டா இருக்குன்னு பெட்ல படுத்துட்டார்.
எனக்கோ மனசு பூரா கேள்விமயம். எனக்கு இந்த கோவில் சாமி எல்லாம்
கொஞ்சம் அலர்ஜியான விஷயங்கள்.முதல்லேயே தெரிஞ்சிருந்தா அவாய்ட்
பண்ணியிருப்பேன்.சரி இப்போ கிளம்பி இவ்வளவு தூரம் வந்த பிறகு எப்டி
போகாமல் இருக்க முடியும்? சரி ஒரு பிக்னிக் மாதிரி இயற்கை காட்சிகளை
ரசித்துகொண்டே போய்வர வேண்டியதுதான். என்று எண்ணி எல்லாருடனும்
கிளம்பியாச்சு. ஹோட்டல்பேர் நிஹாரிகா. பெரிய,பெரிய ஹீட்டருடன்
ஃபோம் மெத்தையுடன் ரொம்பவே சவுரியமாக இருந்தது.குளிர்தான் தாங்கவே
முடியலை. மத்யானம் 3 மணிக்கே இந்தக்குளிர் இருக்கே. இன்னும் நேர்மாக,
நேரமாக ரொம்பவே குளிருமே என்று நினைத்தேன். எல்லருமே தேவையான
கம்பளி உடைகள் கொண்டுவந்திருந்தோம். கிழே போய் ஒரு சுமாரான
ஓட்டலில் லஞ்ச். பேப்பர் ப்ளேட் களில்தான் சர்வ் பண்ணரா.சுக்காரொட்டி,
தால்,க்ரீன் சலாட்,எதோ ஒரு பாஜி கொஞ்சூண்டு ரைஸ்.எனக்கு தயிர் இல்லாம
சாப்பிடவே தெரியாது. தயிர் வெணுமே என்றேன். ஒருசின்ன பேப்பர் கப்பில்
கெட்டியாக தயிர் தந்தான்.ஸ்பூனாட்டு தயிர் புளிக்கிரதா என்று பார்த்தேன்.
புளிக்கலை ஒரே ஸ்வீட். பால் உறை ஊற்றும்போதே ஜீனி போட்டுதான் உறை
ஊற்று வார்களாம்.யாருமே ப்ளைன் தயிர் சாப்பிட மாட்டார் களாம். லஸ்ஸி
தானாம். இந்த் தயிரை எப்படி சாத்த்தில் போட்டு சாப்பிட முடியும். 2 சுக்கா
ரொட்டி தால் சாப்பிட்டு, லஸ்ஸி குடித்து வைத்தேன். வேறுவழி?
இனி 14 கிலோமீட்டர் மலை ஏற்றம் பற்றி. நம்ம சினேகிதிகளில் யாராவது
வைஷ்ணவிதேவி போயிருக்கிறீர்களா?

4 comments:

ஆமினா said...

இங்கேயே போடுறீங்களா? வாழ்த்துக்கள் கோமு!!!

நல்ல விருவிருப்பா போகும். தமிழ் மணமும் இனைச்சாச்சு போல. ஈட்டும் போட்டுட்டேன்...

சீக்கிரமா அடுத்த பாகத்தையும் சொல்லிடுங்க. மறக்காம போட்டோ போடுங்க கோமு! அதுலையாவது பாத்துக்குறோம்

கோலா பூரி. said...

ஆமி முதலா வந்து கருத்து சொன்னதுக்கு மிகவும் நன்றி. எனக்கு உங்க கூட பேச்னும் நிரைய................. நிரைய. நேத்து தான் அட்மின் கிட்ட பர்மிஷன் வாங்கிண்டேன். இன்னிக்கு ப்போட்டாச்சு. வாரம் ஒரு பகுதி போட்டாதானே சரி வரும் இல்லியா?

ஆனந்தி.. said...

பட்டைய கிளப்புரிங்க கோமு...இன்ச் பை இன்ச் ஆ பகிர்ந்துக்கிரிங்க...என்னவோ நானும் கூடவே வந்த மாதிரி இருக்கு....

கோலா பூரி. said...

ஆனந்தி இப்படி அடிக்கடி வாங்க. ஒவ்வொரு முறையும் நா வந்து இன்விடேஷன் வைக்க வேண்டி இருக்கு!!!!!!!!!!1