Saturday, January 22, 2011

Saturday, January 22, 2011

ஆல்பம்


ஆல்பம்.
ப்ளாக்கில் நான் எழுதும் முதல் கதை.
தெரிந்தவர்கள் வீட்டில் போனமாதம் ஒருகல்யாணம் இருந்தது.வாசுவாலும் லதாவாலும்அதில் கலந்துக்கமுடியாமல் போச்சு. அதனால் ஒருசண்டே லீவு நாளில் அவர்கள் வீட்டில்கல்யாணம் விசாரிக்கப்போனார்கள். காபி,ஸ்னாக்ஸுடன் தடபுடலான வரவேற்பு. பின்பு

அந்தவீட்டு மாமியும் புதுமாட்டுப்பெண்ணீடம் சுபா, இவா ரெண்டுபேரும் கல்யாணத்துக்குவரலை. அந்தபோட்டோ ஆல்பத்தை எடுத்துண்டு வந்து காட்டுன்னாங்க. மருமகளும் உள்ளே

இருந்து ஆல்பம் கொண்டுதந்தா. எங்க இரு புரமும் மாமியும் மருமகளும் உக்காந்தாங்க. நாங்கஆர்வமுடன் ஆல்பம் பாக்க ஆரம்பித்தோம். நல்ல ஆடம்பரமாக, நிறைய செலவு செய்து க்ராண்ட்டாக கல்யாணம் செய்திருப்பது ஆல்பத்திலேயே தெரிந்தது. மாப்பிள்ளை பெண்ணின் ட்ரெஸ்ஸிலிருந்து, நகை நட்டுக்கள் வரை நல்ல பணம் விளையாடி இருந்தது.


பெண்பக்கத்தில் போட்டோவில் நின்றுகொண்டிருப்பது யாருன்னு(தெரியாத்தனமா) கேட்டுட்டேன்.

மாமிக்காரி பிடிசுண்டுட்டா, அதுவந்து பொண்ணோட அத்தை, அடுத்து நிப்பது பொண்ணோட அத்தங்காஓட ஓர்ப்படி பொண்ணு. அதுக்கு அடுத்து பொண்ணோட அப்பா, அம்மா, அவதம்பி. அவனுக்கு பூணலும்

போட்டா.என்பையனுக்கு வாச், ஒன்னரைப்பவுனுக்கு மோதிரம், ப்ர்ரெஸ்லெட், ஒரு பைக் சீதனமா தந்தா.நாங்க எதுவுமே டிமாண்ட் பண்ணலை அவங்களே அவங்க பொண்ணுக்குப் பிரியமா செய்ஞ்சாங்க. இவஒரே பொண்ணுதானே, வேர யாருக்கு செய்யப்போராங்க? என்று மாமியார்க்காரி மூச்சுவிடாமப்பேசிட்டுஉள்ள போனா.அப்பாடான்னு பேருக்கு ஆல்பத்தைப்புரட்டிண்டு இருந்தேன். மருமகக்காரி பக்கத்ல வந்து

உக்காந்து, மாமி நான் சொல்ரேன்னா.மாமி பாத்தேளா,கைக்கா கல்லு,கல்லா 6, 6 வளயல்,காதுல, மூக்குல பாத்தேளா வைரம் என்னமா டாலடிக்

கறது, இல்லியா?கழுத்துல காசுமாலை,ரெட்டைவடத்ல முத்துமாலை,தாலிக்கொடி8பவுன்லவைர நெக்லெஸ்
மொத்தமா பாத்தா 50, 60 பவுனாவது இருக்கும். இது நிச்சயதார்த்தப்புடவை,காஞ்சிபுரத்லேந்து ஸ்பெஷல்
தறிபோட்டுத்தான் கல்யாண்ப்புடவை எல்லாம் எடுத்தாங்க.கையகல ஜரிகை எப்படி மின்னுது இல்லே?என்று அவ பங்குக்குஅவ அடுக்கிண்டே போனா. அதற்குள் உள்ளே இருந்துவந்த மாமியார்க்காரி சுபாஎன்கூட என்பக்கத்ல இருக்கரது யாருன்னு சொன்னியோன்னு பக்கத்ல வந்தா. சுபா, மாமியாரிடம், சாரிம்மாஎனக்கு யாருன்னு சரியா தெரியலியே நீங்களே சொல்லிடுங்கோ என்றா. அது எப்படித்தெரியாமப்போகும்உன் ஆத்துக்காராரை எல்லாம் நான் சரியா சொன்னேனோ இல்லியோ. நீ என்கிட்ட கேட்டாவது தெரிஞ்சுக்க
வேண்டாமான்னு கோபமா பேச ஆரம்பிச்சுட்டா.லதா, என்பக்கத்ல கிளிப்பச்சை, நிறத்துல கை அகல பார்டர்போட்ட பட்டுப்புடவைகட்டிண்டு இருக்காளே அவஎன் தங்கையின் மாமியாரின் ஓர்ர்ப்படிபொண்ணாக்கும்.ஃபாரின்லேந்து இந்தக்கல்யாணத்துக்குன்னே வந்தா.என்னை ஆல்பத்தின் அடுத்தபக்கத்தைக்கூட திருப்ப விடாம மாமியும் ,மருமகளும் ரன்னிங்க் காமெண்ட்ரிமாத்தி, மாத்தி அடிச்சிண்டே இருந்தா. எனக்கோ சரியான தலைவலி. சரிமாமி நேரமாச்சு நாங்க கிளம்பரோம்

என்ரேன். நன்னா கிளம்பினே போ 100 பக்க ஆல்பத்தில் 10 பக்கம கூட பாக்கலை அதுக்குள்ள கிளம்பினாஎன்ன அர்த்தம். இருந்து ஆல்பம் பூராவும் பாத்துட்டு ராத்திரி இங்கியே சப்பிட்டு போங்கோன்னு சொன்னா.
இவர் என்னைப்பார்க்க, நான் அவரைப்பாக்க,
இல்லை மாமி நாங்க வந்தே 4 மணினேரம் ஆச்சு. ஆல்பம் பாத்ததில்( :)))))))) டைம் போனதே தெரியலைஇன்னொரு நா சாவகாசமா வந்து பூரா ஆல்பமும் பாக்க்ரோம்னு சொல்லி ஆளை விடுங்கப்பான்னு ஓடியேவந்தோம். இனி யாரு வீட்லயாவது கல்யாணம் விசரிக்கப்போனா ஆல்பம்னு ஆரம்பிக்கும் போதே எஸ்கேப்ஆய்டனும், இதைப்போல மாட்டிண்டு முழிக்கக்கூடாதுப்பா.

23 comments:

yeskha said...

எங்க வீட்லயும் ஒரு பெரிய ஆல்பம் இருக்கு. பார்க்க வர்றீங்களா?

விழியில் விழிமோதி said...

very nice friend, keepit up

ஆனந்தி.. said...

கோம்ஸ்..கதையை படிச்சால் ஏதோ சொந்த அனுபவம் மாதிரி தெரியுதே..எங்கோ ஆல்பம் பார்த்து அவஸ்தை பட்டு ஓட்டமா ஓடி வந்திருக்கிங்க..கரெக்ட்ஆ ? :))

ஆமினா said...

கோமு
உங்க சிறுகதைக்கு நான் முன்பிருந்தே ரசிகை

செம கலக்கல் கதை

கண்டிப்பா அடிக்கடி நீங்க எழுதணும்

எல் கே said...
This comment has been removed by the author.
எல் கே said...

ஆனா மத்தப்படி செம காமெடிதான்

எல் கே said...

http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_23.html

asiya omar said...

very interesting.

பாரத்... பாரதி... said...

இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டதற்கு வாழ்த்துக்கள்..
http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_23.html

komu said...

yeskha என்ன கிண்டலா?

komu said...

ஃப்ரெண்ட் நீங்கதானா? நம்பவேமுடியலியே. நல்லா இருக்கீங்களா? வருகைக்கி நன்றிப்பா,

komu said...

எஸ் ஆனா, வருகைக்கு நன்றிம்மா.

komu said...

ஆமி, உங்க முன்னாடில்லாம் நான் வெரும் கத்துக்குட்டிதான். வருகைக்கு நன்றிப்பா.

komu said...

என்ன கார்த்திக் இப்படி சொல்லிட்டீங்க. ஆல்பத்தை மெயினா வச்சுத்தானே கதையே பின்னியிருக்கேன்.

komu said...

முதல் முறையாக வலைச்சரத்தில் அறிமுகம் பண்ணியிருக்கீங்க. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி.எல்.கே.

komu said...

ஆஸியா மேடம் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்.

komu said...

பாரத்..பாரதி வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

goma said...

சரியாச் சொன்னீங்க கோமு.
ஒரே கலக்கல்தான் ...
அதுவும் இப்பல்லாம் மண்டபம் சைசில் ஆல்பம் போட்டு அசத்றதும் சீர்வரிசையில் சேர்த்தி மாதிரி தெரிகிறது.

komu said...

goma- முதல் தடவையா என் பக்கம் வரீங்களா. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிம்மா.

vanathy said...

komu, super!

komu said...

தேங்க்யூ வானதி.

பத்மநாபன் said...

ஆல்பமும்...அவஸ்தையும்...கதை நல்லா கொண்டுபோயிருக்கிங்க....

komu said...

தேங்க்யூ பத்மனாபன் சார்.