Sunday, January 2, 2011

Sunday, January 2, 2011

ஹிமாச்சல்பிரதேஷ்(5)

ஹிமாச்சல்ப்ரதெஷ்.(பகுதி-5)




காலை எல்லாரும் சீக்கிரமே எழுந்தோம். இன்று கிளம்பணுமே? நேற்று போல இன்றுபனிப்பொழிவு இல்லை. ஆனாலும் செமை குளிர்.8மணிக்கு கிளம்பினோம். வளைந்துவளைந்து செல்லும் ரோட்டின் இரு புறமும் நீண்டு, நெடிதுயர்ந்த பச்சை,பசேல் மரங்கள்அணிவகுத்து வரிசையாக இருந்தன.சிறிதுதூரம் சென்றதும் தர்மசாலா என்று ஒரு இடம்வந்தது.அங்குபூராவும்திபேத்தியர்களின்கட்டுப்பாட்டில்இருக்கிறது.கொவில்,ஸ்கூல், வீடுகள் எல்லமே திபேத்திய கலாச்சாரம்.பெண்கள் கலர்,கலராக, உடலை சுற்றி,சுற்றி உடை அணிகிறார்கள். சிறுவர்,பெரியவர்,ஆண்கள் தலாய் லாமா ஸ்டைலில் உடலைச்சுற்றி டார்க் ப்ரௌன்கலரில் உடை அணிகிறார்கள்.ஆண்கள் தலை முடியும் முழுவதும் மழித்து விடுகிறார்கள்..

ஹிமாச்சல் மக்கள் பார்ப்பதற்கு ரொம்பவும் சாதாரணமானவர்களாகவே தெரிகிறார்கள்நங்கள் வரும்வழியில் ஒரு ஆட்டோவோ, காரோ, டாக்ஸியோ எதுவுமே ஓடலை.ஓப்பன்ட்ரக் மட்டுமே. அந்த ட்ரக்கில் நடுவில் ஒரு பெரிய பலகை அடித்திருக்கிறார்கள் உள்ளயேடபுள் டெக்கர் மாதிரி பண்ணியிருக்கா. அதில் மேல் வரிசையில் ஆண்களும், கீழ் வரிசையில்பெண்கள், குழந்தைகள், ஆடு,மாடுகள்என்றுப்ரயாணம்செய்கிறார்கள்.கொஞ்சம்பெரியடெம்போக்களும் கண்ணில் படுகின்றன. இப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டே வேன் சவாரி.



50கிலோமீட்டர் போவதற்கே 2 மணி நேரம் எடுக்கறது. பதான்கோட் வந்ததும் ஒருதாபாவில்ச்சாய்,நாஷ்ட்டா.முடிச்சுண்டுதிரும்பப்ரயாணம்.பதான்கோட்டிலிருந்து அமிர்த சரஸ் 100கிலோமீட்டர்.இப்போலேந்து மெயின் ரோட் பயணம். வழிபூராவும் மிலிடரி கண்டோன்மெண்ட்ஏரியா. ரொம்ப நன்னா இருந்தது.அமிர்தசரஸில் கிஷோர் கேஸல் என்னும் ஹோட்டலில் ரூம்

புக் செய்திருந்தார்கள்.எல்லா ஏற்பாடுகளுமே ஆன்லைன் மூலம் பக்காவாக இருந்தது.ஹோட்டல் ஏதோ ஒரு நெருக்கடியான சந்திற்குள் இருந்தது. வண்டி உள்ளேயே நுழையமுடியலை பார்க்கிங்க்ஏரியாவே இல்லை வண்டியை மெயின்ரோட்டிலேயே நிறுத்திட்டு

  நாங்கள் ஹோட்டல் போய் எல்லாரும் முகம், கைகால் அலம்பி ஃப்ரெஷ் ஆகி மறுபடியும் கிளம்பினோம்.வாகா பார்டர் என்னுமிடத்திற்குப் போனோம். மெயின் ரோட் கொஞ்ச தூரம்வரையிலும்ரொம்ப கச்சாரோடு.ஊர்பூராவும் புழுதி, குப்பை.5கிலோமீட்டர் இப்படி போன பிறகுநல்ல ஸ்மூத்ரோடு வந்தது. இருபுறமும் யூகலிப்டஸ் மரங்களின் அணிவஹுப்பு ரொம்பநன்றாக இருந்தது. ரோடும் நன்றாக இருந்ததால வண்டி ஃபுல் ஸ்பீடில் போச்சு.ஹிமாலயா



மாதிரி குளிர் நடுக்கலை. 4.30.க்கு வாகா பார்டர் வந்தோம் தினசரி 4.45 முதல் 6 மணி வரையும்பரேட் நடக்குமாம் ஒருபக்கம் இண்டிய வீரர்கள், மறு புரம்..பாகிஸ்தானிய வீரர்கள்.அணிவகுத்து நிற்கிறார்கள். இந்தபக்கம் இந்தியகொடியுடன் ஆர்மி வீரகள், ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்,பாரத்மாதாகீஜேய் என்றுகோஷம் போட்டுக்கொண்டே கொடி வணக்கம் செய்கிறார்கள். அதேபோல அந்தபக்கம்பாகிஸ்தான் வீரர்கள் அவர்களின் கோஷங்களுடன் கொடிவணக்கம் செய்கிறார்கள். ஜவான்கள்

டக், டக் என்று ஷூ சப்தம் ஒலிக்க கம்பீரமாக நடந்து மார்ச் பாஸ் பார்ப்பதே தனி அழகு.இங்கிருந்து ஜவான்கள் அந்தஸைட் போறா. அதுபோல அங்கிருந்து ஜவான்கள் இந்தஸைட்டுக்குவரா. இரண்டு ஸைட் ஆர்மி ஆபீசர்களும் கொடிகளை இறக்கி மடித்து அதற்குரிய இடத்தில்பவ்யமாக வைத்து பெரியஸல்யூட் வைக்கிறார்கள். இதைப் பார்ப்பதற்கு ஏக கும்பல். சுற்றி வரபெரிய, பெரிய காலரிகள் கட்டி இருக்கிறார்கள். பார்வயாளர் களுக்கு அங்கு உக்கார்ந்து பார்க்கரொம்ப சவுகர்யமாக இருந்தது. இதுவுமொரு புது அனுபவமாக இருந்தது. பர்சனலாக இந்த ஜவான்களுக்குள் நல்ல ஒரு ஃப்ரெண்ட் ஷிப்பே இருக்கலாம். ஆனா இரு நாடுகளுக்கும் வார் என்று வந்து விட்டால் அடிபட்டு பாதிக்கப்படுவதும் இவர்கள் தான் இல்லையா? தேச சேவை. இந்த பரேடைபார்ப்பவர்களுக்கே வீரம் வந்துவிடும். அதை யெல்லாம்பார்த்துவிட்டு திரும்பவும் வேன் ஏற்னோம்.


நாங்கள் தங்கி இருந்த ஹோட்டலில் இருந்து 50- வது கிலோமீட்டரில் வாகா பார்டர் இருந்தது.வாகா பார்டர் மிலிடரி ஏரியா இல்லையா அங்கேந்து ஒரு 25 கிலோமீட்டருக்கு ரோடெல்லாம்ரொம்ப சூப்பரா இருந்தது. அடுத்து கோல்டன் டெம்பிள். பிறகுவந்த 15 கிலோமீட்டர் ரோடு ரொம்பமோசம்.சின்ன க்ராமம் மாதிரி புழுதி, குப்பையுடன் ரோடு.இருபக்கமும் ஆட்டோமொபைல்ஸ்

கடைகள்தான் நிறைய தென்படறது. தலையில் முண்டாசு கட்டிய அழுக்கான பஞ்சாபிகள் தான்திரும்பிய பக்கமெல்லாம். 7.30. கோல்டன் டெம்பிள் ரோடு வந்தோம் . நல்லவே இருட்டிடுத்து.



உள்ள வண்டி போக இடமில்லை. ஒரு புறமாக வண்டியை நிறுத்திட்டு நடராஜா சர்வீஸ்.குட்டிகுட்டியா தெருக்கள், இருபக்கமும் அடைசலாக கடைகள். கச, கச என்று கூட்டம்.எங்க பார்த்தாலும்அழுக்கும்,குப்பையுமாவே தெரியறது.இந்த இடம் பேர் பட்டாலாவாம்.கை ரிக்‌ஷா, ஆட்டோ ரிக்‌ஷா

கூட்டத்தில் நிழைந்து ஓடிக்கொண்டிருக்கு. இப்படியே 15 நிமிடங்கள் நடந்து பொற்கோவில் வாசலைஅடைந்தோம். நல்ல இருட்டாயிட்டதால எதயுமே நன்னா பார்க்க முடியலை சுற்றி வர பளிங்குகற்களால் இழைத்து, இழைத்து அழகாக கட்டி இருக்கா. நடுவில் ஒரு பெரிய குளம் மாதிரி இருக்கு.

கோவிலுக்குள் போகும் அனைவரும் தலையில் முக்காடு போட்டுண்டுதான் போகணுமாம். ஆண்கள் கர்சீப்பை தலைக்குமேலே போட்டுக்கொண்டார்கள். பெண்கள் துப்பட்டாவால் தலையை மூடிக்கொண்டார்கள். உள்ள போகும் படிக்கட்டு களில் கால் அலம்ப அருவி மாதிரி தண்ணி கொட்டிக்கொண்டே

இருக்கிறது.தண்ணீர் ஐஸ்மாதிரி ஜில்லா இருந்தது. வழக்கம் போல என் கால் தகறாறு பண்ணிடுத்து.இந்த கோவிலுக்குள்ளும் போக முடியாம பண்ணிடுத்து. வாசலிலேயே ஒரு பெஞ்சில் காலைநீட்டிண்டு உக்காந்து விட்டேன். பாக்கி எல்லாரும் உள்ளே போய் எல்லாம்பார்த்து விட்டு வந்தார்கள்.



திரும்ப வேன் நிற்குமிடம் வரயும் நடந்து போய் பிரயாணம் கண்டின்யூ.9 மணிக்கு ரூம் வந்தோம்.இங்க ரூம் ரொம்பவே சுமார் டைப் தான்.டின்னர் முடிந்து தூங்க ஆரம்பிச்சாச்சு. நாளை இங்கேந்துகிளம்பணம்.

10 comments:

vanathy said...

கோமு, சூப்பரா இருக்கு. இந்த இந்தியா, பாகிஸ்தான் எல்லை வீடியோ நானும் பார்த்திருக்கிறேன்.

கோலா பூரி. said...

வானதி வருகைக்கு நன்றிம்மா.

ஆமினா said...

கோமு....

பல விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டேன்.....

சூப்பரா எழுதுறீங்க பா....

மெயில் பார்த்தேன். கூடிய விரைவில் பதில் அளிக்கிறேன்.

அப்பறம் தமிழ்மணத்தில் நீங்களும் ஓட்டு போடலாம்

ஆனந்தி.. said...

//ஆனாலும் செமை குளிர்.8மணிக்கு கிளம்பினோம். வளைந்துவளைந்து செல்லும் ரோட்டின் இரு புறமும் நீண்டு, நெடிதுயர்ந்த பச்சை,பசேல் மரங்கள்அணிவகுத்து வரிசையாக இருந்தன.சிறிதுதூரம் சென்றது//

கோம்ஸ்...நீங்க கொஞ்சம் முயற்சி செஞ்சால் அற்புதமான ஒரு தொடர்கதை எழுதலாம்...அந்த அளவுக்கு எழுத்து நடையில் ஒரு மெருகு...

கோலா பூரி. said...

ஆமி நிறைய விஷயங்கள் தெரியலியேம்மா. தமிழ் மணத்தில் எப்படி ஓட்டு போடனும்?

கோலா பூரி. said...

ஆனந்தி அளவுக்கு அதிகமா சொல்ரீங்க. நான் ப்ளாக் எழுதுவதில் எல். கேஜி. தான்.

எல் கே said...

அதென்ன கோவிலுக்கும் உங்களுக்கும் அப்படி ஒரு பொருத்தம் ???

வலைபின்னுபவர் said...

உங்கள் பயணக்கட்டுரைகள் அனைத்தும் அருமையாக உள்ளது.
ஆனால் வாரம் ஒருமுறை என்பதை, வாரம் மும்முறையாக மாற்றலாம்....
அப்புறம் உங்கள் தளம் இந்துதான் பார்த்தேன். எல்லாத்தையும் வாசித்து முடித்துவிட்டேன்....ப்ப்ப்ப்ஹா
:)))

கோலா பூரி. said...

ஆமா, கார்த்திக் அதுதான் எனக்கும் புரிஉஅவே மாட்டேங்குது.

கோலா பூரி. said...

வலை பின்னுபவர். முதல் வருகைக்கு நன்றி. இனிமேல அடிக்கடி வாங்க.