Sunday, January 9, 2011

Sunday, January 9, 2011

ஹிமாச்சல்பிரதேஷ்(கடைசி பகுதி)

ஹிமாச்சல் ப்ரதேஷ்(பகுதி6) (கடைசி பகுதி)

இன்று கிளம்பணும் என்று எல்லாரும்7மணிக்கே எழுந்து ப்ரெக்ஃபாஸ்ட்டுக்காக டைனிங்க்ஹால்போனோம். அங்கு வட்டமாக உக்காந்து நேற்றுபோய் வந்த இடங்களைப்பற்றி பேசிக்
கொண்டிருந்தோம். பஞ்சாப் த்லை நகர் சண்டிகரிலிருந்து235 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதுபொற்கோவில்.சுற்றுலா வரும் எல்லா பயணிகளும் தவறாமல் பொற்கோவில் வருகிறார்கள்.குரு அர்ஜுன் தேவ் அவர்களால் 1588-ம் ஆண்டு இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது.சீக்கிய
மத வழிபாட்டின் மையமாக இவ்வாலயம் உருவாக்கப்பட்டது.இந்தியா சுதந்திரம் அடைந்தபின்னர் நடை பெற்ற மிகவும் சர்ச்சைக்குரிய விஷயங்களில்ஒன்றான ஆபரேஷன் ஃப்ளூஸ்டார் நடை பெற்று 25 ஆண்டுகள் ஆகியுள்ளதை சீக்கியர்கள்இன்றும் அனுஷ்டித்து வருகிறார்கள்.
1984-ம் ஆண்டு சீக்கியர்களின் புனிதஸ்தலமான பொற்கோவிலில் மறைந்து இருந்த பிரிவினைவாத சீக்கிய தீவிரவாதிகளை அழிக்க இந்திய ராணுவம் பொற்கோவிலுக்குள் நுழைந்தது.அடுத்த நாள் பொற்கோவில் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்க்குள் வந்தது. ஆனால்நூற்றுக்கணக்கான பிரிவினை வாதிகளும் அக்கோயிலில் இருந்த பொது மக்களும் கொல்லப்பட்
டனர்.

இந்த சம்பவத்திற்குப்பின்னர் அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி அவரது சீக்கிய மெய்காப்பாளர் களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தில் சீக்கியர் சார்பில்போராடியபிந்தரன்வாலேகொல்லப்பட்டார். இது நாம் அனைவருமே அறிந்த சரித்திர நிகழ்வுகள்.

இப்படியே பொற்கோவில் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது ட்ரைவர், சாப் நாஷ்டா சாப்பிட்டுஜாலியன் வாலா பாக் போய் வரலாமா. அதுவும் நிறைய டூரிஸ்டுகள் பார்க்க ஆசைப்படும்இடம்தான் என்றான். நாங்க எல்லாருமே ஒரே குரலில் வேண்டவே, வேண்டாம் அப்பா. அங்கே
போனா ஒருஆங்கில துரை எவ்வளவு கொடூரமாக சாதாரண அப்பாவி ஜனங்களை ஈவு இரக்கமில்லாமல்சுட்டுக் கொன்றது தான் நினைவில் வரும். அவர்கள்சிந்திய ரத்த துளிகள் கதறிய கதறல் எல்லாம்
இப்பவும் நம் காது களில் ஒலிக்கும். நம் மனதெல்லாம் துக்கத்தில் பாரமாக கனத்துவிடும்.உல்லாசப் பயணம் மேற்கொள்வதே நம் மனதை சந்தோஷமாக வைத்துக்கொள்ளவும் எஞ்சாய்பண்ணவும் தான். அதுவும் கடைசியாக அந்த இடத்தை பார்த்தால் அந்த துக்க நினைவுகள் தான்மனதில் ஆழமாக தங்கி எல்லாரோட மூடும் அப்செட் ஆயிடும்.அடுத்த தடவை வந்தால் பார்க்கலாம்/
என்று தட்டி க்கழித்துவிட்டோம்.

டிபன் முடிந்து ரூம் போய் எல்லாரும் குளித்து ரெடி ஆகி மூட்டை, முடிச்சுகளுடன் கீழே வந்தோம்.டெல்லி போக வேண்டிய வண்டி 1 மணிக்கு இருந்தது. 11மணி ஸ்டேஷன் வந்தோம்.ப்ளாட்ஃப்ர்ம்
எல்லாம் நல்லா பெரிசா இருந்தது. ஆனா உக்கார ஒரு ப்ளாஸ்டிக் சேரோ, நீண்ட பெஞ்சோ எதுவுமேஇல்லை.எங்க லக்கேஜ் மேலயே உக்காந்துண்டோம். டிக்கட் கன்ஃபார்ம் பண்ணிக்க ஆண்கள் கவுண்டர்


பக்கம் போனா. அந்த கௌண்டரில் இருந்தவன் சார் இது நேற்றைய வண்டியோட டிக்கெட் சார்.நீங்க சரியாகவனிக்கலையாஎன்கிரான்.ஆன்லைன் மூலம் ஏஜண்ட் தான் எல்லாம் புக் பண்ணியிருந்தான். எல்லாம் சரியா இருக்கும் என்று நம்பிக்கையில் நாங்களும் சரியா கவனிக்கலை
இப்போ என்ன பண்ணறது? அதுவும் 15 டிக்கெடுகள் வேறு வேண்டுமே. இதுவரயிலும் எல்லாமே சரியாதானே இருந்தது. சரி மேற்கொண்டு என்ன பண்ணறது. சரி சார் இன்றைய ட்ரெய்னில் டிக்கெட்இருக்கா என்று கேட்டோம். உங்க லக் இன்று வண்டில நிறைய காலி இடம் இருக்கு என்று தேர்ட் ஏ/ஸி.
யில் 15 டிக்கெட் கிடைத்தது.1 மணிக்கு வண்டி வந்தது.அதுவரையும் வேன் ட்ரைவரும்,க்ளீனரும்எங்க கூடவே இருந்தா. வண்டியில் சாமான் எல்லாம் ஏற்றி விட்டு எங்களுக்கு பை, பை சொல்லிட்டுதான் போனா. அமிர்த்சர்,


பாணகங்கா என்று ஒரு எக்ஸ்ப்ரஸ். எங்க கம்பார்ட் மெண்டில் அங்க ஒன்று, இங்க ஒன்று என்று கொஞ்ச பேர்கள்தான் இருந்தார்கள். மத்த படி கம்பார்ட்மெண்ட் பூராவும் காலிதான். யாரு வேணா எங்க வேணாலும் உக்கருங்கோ என்றதும் எல்லாரும் ஒரு விண்டோ ஸீட்
பிடிச்சுண்டோம்.எதில் பிரயாணம் செய்தாலும் ரயில் வண்டி பிரயாணம்தான் சுகம். வெளியில் ஓடும்மரங்கள்,லாம்ப் போஸ்ட்கள், வீடுகள் என்று ரசிப்பதற்கு எக்கச்சக்க விஷயங்கள். அதுவும் த்ரீடயரில்
உக்காந்தா,வெளியிலிருந்து சுகமாக வீசும் காற்றும், தடக், தடக் என்ற ரயிலின் தாலாட்டும் சப்தமும்இந்த ஏ,ஸி.கம்பார்ட்மெண்டில்ரசிக்கமுடியாது.செயற்கை குளிரூட்டல், வண்டி ஓடரதா, நிக்கரதாஎன்றே தெரியாம அலுங்காம, குலுங்காம இருக்கும்.எக்ஸ்ப்ரஸ் நல்ல வேகமாவே போச்சு,எல்லரும்ஒரு ச்சாய் வரவழைத்து குடித்தோம். கொஞ்ச நேரம் கார்ட்ஸ் விள்யாடினோம்.கொஞ்ச நேரம்செஸ் ஆட்டம். குழந்தைகளுடன் கொஞ்ச நேரம் டைம் பாஸ் என்று இருந்தோம். வழியில் ஜலந்தர்,
லூதியானா, அம்பாலாபோன்ற கொஞ்சம் பெரியஸ்டேஷன் களில் 10 நிமிடம் நின்று விட்டு கிளம்பியது.லூதியானா3மணிக்கு வந்தது. அங்குதான் லஞ்ச் பார்சல்வாங்கினோம்.ஃபாயில்பேப்பர்பாக்கெட்களில்5சப்பாத்தி,ஒருபாக்கெட்டில் அடைத்து தந்தா. ஒரு பாக்கெட்டில் கொஞ்ச சாதம் தால் மிக்ஸ்
பண்ணிதந்தா.ஒரு பாக்கெட்டில் ஏதோ ஒரு பாஜி. எல்லாருமா ஷேர் பண்ணிண்டு சாப்பிட்டு முடித்தோம்.எல்லாரும் கொஞ்ச நேரம் படுத்து எழுந்தோம். 5மணிக்கு ஒரு ஸ்டேஷனில் ச்சாய் குடித்தோம்


6மணிக்கு குருஷேத்ரா ஸ்டேஷ.ன். 9மணிக்கு ஓல்ட் டில்லி ஸ்டேஷன் வந்தது. 16ப்ளாட்ஃபாரங்களுடன்அமர்க்களமா இருக்கு. ஆனால் பூராவும் புழுதி, குப்பை மயம்.முகம் நிரைய தாடியும், த்லையில் பெரிய
டர்பனுடனும் சர்தார்ஜிகள். பையாக்கள் நிரைய கூட்டம், கூட்டமாக இருக்கிறார்கள். ஆனால் கிட்டவந்தாலே கப்ப் அடிக்கறது. வெளியில் வந்து ஆட்டோ பிடித்து ஏற்கனவே புக் பண்ணியிருந்த ஓட்டல்தேடினோம். குண்டும் குழியுமா ரோடுகள்,ரொம்ப அழுக்கு மயம் .ஒருவேளை நியூ டில்லி மட்டுமே
சுத்தமாக இருக்குமோ என்னமோ.ஒரு முட்டு சந்திற்குள் ஹோட்டல் இருந்தது. தேடிக் கண்டுபிடிச்சு போயிட்டோம். வழக்கம் போல ரூம் எல்லாம் நன்னா இருந்தது.எல்லா இடங்களிலுமே 2,2.பேருக்கு ஒரு ரூம் என்றே புக் பண்ணி யிருந்தார்கள். அவா, அவா ரூம் களுக்கே டின்னர் வரவழைத்து
சாப்பிட்டோம்.இங்கெல்லாம் குளிர் எதுவும் இல்லை.11மணி படுத்தாச்சு. காலை சீக்கிரமே ஏர்போர்ட்கிளம்பணும். 6மணிக்கு முழிப்பு. ரூம் சர்வீஸில் காபி, ப்ரேக்ஃபாஸ்ட் ஆர்டர் பண்ணிட்டு குளியல்எல்லாம் முடிந்து டிபன் சாப்பிட்டு 8 மணிக்கி கிளம்பினோம்.ஆம்னி வேன்2புக் பண்ணி ஏர்போர்ட்
போனோம்.ஏர்போர்ட் நல்ல பெர்சா விஸ்தாரமா அழகவும் இருந்தது.


கிங்க்பிஷரில் புக் பண்ணிஇருந்தா. வழக்கமான பார்மாலிட்டீஸ் முடிந்து ஃப்ளைட்டுக்குள் போனோம். உள்ள ரொம்பவே நன்னா
இருந்தது. ஒவ்வொரு ஸீட்டுக்கு முன்னாடியும் குட்டி டி.வி. இருந்தது. ஏர்ஹோஸ்டஸும், ஸ்டூவர்டும்பார்க்கவும் அழகா இருக்கா, நம்மை நன்றாக கவனிக்கவும் செய்யறா.ஃப்ளைட் கிளம்பினதே தெரியாம
டேகாஃப் பண்ணினா பைலட்ஸ். உள்ள பூராவும் சிகப்பு, கலரில் தான் எல்லாமே. முதலில் ஆப்பிள்ஜூஸ்எல்லாருக்கும் ஒருபௌச் கொடுக்கரா. அதில் ஒரு இயர்போன்,பெனா,மிண்ட் டாஃபி, அன்றைய மெனு
கார்ட் எல்லாமிருந்தது. ரைஸ்சேவை, மசால்தோசா, வடை சட்னி சாம்பார் ஒரு பெரிய பீங்கான் பௌலில் எல்லா பழங்களும் சிறு, சிறு பீஸ்களாக கட் பண்ணி வைத்திருந்தார்கள். ரொம்ப நல்ல உபசாரம். ஹிமாச்சல் ட்ரிப் முடிந்து பேக் டு த பெவிலியன்.1மணி பாம்பே ஏர்போர்ட். ட்ரைவர் வண்டி
கொண்டு வந்திருந்தான்.குஜராத்தி காரா அவா வீடு, நாங்க தானா வீடு போனோம். நாங்க இருவரும்அடுத்த நாள் காலை பூனா கிளம்பி போனோம்.

12 comments:

vanathy said...

komu, super!!

komu said...

vanathi, thankyou very much.

அமைதிச்சாரல் said...

ஹிமாச்சல் யாத்ரா முழுசையும் படிச்சு முடிச்சுட்டேன். ஒரு பயணத்தை தொடங்கி முடிப்பதுவரையிலான அனுபவங்களை அழகா சொல்லியிருக்கீங்க..

கிங்ஃபிஷரின் சேவை ரொம்ப நல்லாவே இருக்கும்..

ஆனந்தி.. said...

அருமையான கைடு கூட இருந்தே வழிகாட்ட சொன்ன மாதிரியான அருமையான பயண தொடர் கோம்ஸ்..நிச்சயமா சின்ன சின்ன விஷயங்கள் கூட விடாமல் சொன்னிங்க..அது நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்க முடிஞ்சது...கலக்கல் தொடரை கொடுத்த கோம்ஸ் க்கு பெரிய பாராட்டு..:))

komu said...

தேங்க்யூ அமைதிச்சாரல். பொறுமையாக எல்லாம் படித்து கருத்தும் சொன்னதுக்கு மிகவும் நன்றி

komu said...

ஆனந்தி, என்னோட ஒவ்வொரு பதிவிலும் வந்து நல்ல கருத்துக்களைக்கூறிவருகிரீகள். மிகவும் நன்றிகள்.

ஆமினா said...

ஒரே மூசில் படித்து முடித்தேன்...

மிகவும் அருமையா சொல்லியிருக்கீங்க கோமு

அடுத்தது எங்கே போனீங்க? :)

komu said...

ஆமி வாங்க.

எல் கே said...

நல்லத் தொடர் கோமதி. இவ்ளோ சீக்கிரம் முடிஞ்சிடுச்சே

komu said...

சீக்கிரம் முடிஞ்சுதா? நான் இதுவே ரொம்ப இழுத்துண்டே போனேனோன்னு நினைச்சேன்.

வலைபின்னுபவர் said...

Nalla irrukku.....

where are you in Thane. I'm also in Thane (Majiwada)

komu said...

ஓ, நீங்களும் தாணாவா? நான் வசந்த் விஹார்ல .