Sunday, February 20, 2011

Sunday, February 20, 2011

குக் ”ஜி’ & பேடாகாட்

குக் ”ஜி” & பேடாகாட்

அடுத்து, படகுக்காரர் செய்தகாரியம் எங்க எல்லாருக்குமே குலை
நடுக்கத்தைக்கொடுத்தது. தன் இடுப்பிலிருந்து ஒரு பெரிய பட்டாக்
கத்தியை எடுத்து குழந்தையின் காலை, கண்ணிமைக்கும் நேரத்தில்
வெட்டி விட்டார். வெட்டுப்பட்ட பகுதியைக்கவ்விக்கொண்டு முதலை
நதியின் ஆழ்த்துக்குச்சென்று விட்டது. எல்லாரும் என்னை மன்னிக்கனும்.
எனக்கு வேறு வழி தெரியலை. நா இப்படி செய்யலைன்னா முதலை குழன்
தையை இழுத்துக்கொண்டு போய் விடும்மா. அதுக்கு தண்ணீல அசுரபலம்
உண்டு. நம்ம யாராலயும் எதுவும் பண்ணமுடியாதம்மா.இப்ப குழந்தை உங்க
ளுக்கு உயிரோட கிடைக்கனும்னா இதைத்தவிர வேர வழியே இல்லைம்மா. என்றுதன்னிலை விளக்கமும் கொடுத்தார். அவர்சொல்வது உண்மைதான். குழந்தை வீல்வீல்னு கதரி அழுவதைப்பார்க்கவே சகிக்கலை. அதற்குமேல் அதன் பெற்றோர் பிரமைபிடித்தது போல உக்காந்திருந்தனர்.

படகுக்காரரே, பக்கத்தில் உள்ள ஒவ்வொரு படகுக்காரரிடமும் பையா டூரிஸ்ட்ல யாரானும்டாக்டர் இருக்காருங்களான்னு விசாரித்துக்கொண்டிருந்தார். நல்ல வேளைக்கு ஒரு மெடிகல்
ஸ்டூடண்ட் இருந்தார். கையில் மெடிகல் கிட்டும் வைத்திருந்தார். கரையில் இறங்கினதும்பெருகி வழியும் ரத்தத்தை கண்ட்ரோல் பண்ண மருந்து போட்டு குழந்தைக்கு வலி தெர்யாமல்இருக்க ஒரு ஊசியும் போட்டு முதல் உதவி செய்தார்.அம்மா உடனே கிளம்பி ஜபல்பூர் போயி24 மணி நேரம் திறந்திருக்கும் ஆஸ்பிடலில் குழந்தையைச்சேர்க்கனும். நான் வெரும் முதல்
உதவி மட்டும் தான் செய்திருக்கேன்.அது போதாது.உடனே கிளம்பிடுங்க என்ரார். படகுக்காரர்எங்களிடம் மன்னிப்புக்கேட்கும்விதமாக,மாப்கரோமேடம். நாங்க படகுவலிக்கும் துடுப்புஎங்க கை பட்டுப்பட்டு,வழுமூன ஆயிடும். துடுப்பை சொர,சொரப்பா வைக்க நாங்க எல்லாருமே
இதுபோல ஒரு பட்டாக்கத்தி எப்பவுமே கையோட வச்சுப்போம். அதுக்கு இப்படி ஒரு உபயோகம்பண்ணவேண்டி வரும்னு நினைச்சுக்கூட பாக்கலீங்க. இப்படி பண்ணலைனா முதலை குழந்தையை
முழுசா இழுத்துகிட்டு போயிருக்கும்.என்காலை பாத்தீங்கதானே நான் ஒருவயசா இருக்கும்போது எனக்கும் இதுபோல்தான் ஆச்சு.
நான்கூட எங்க அப்பா, அம்மாவுக்கு ஒரேமகந்தான். முதலை என் காலை கவ்வி பிடிச்சப்போ என்அப்பாதான் இப்படி காலைக்கட்செய்து போட்டார். நான் இந்த நர்மதா நதிக்கரையில் தான் பிறந்துவளர்ந்தேன். இப்படி ஆனபிறகும் கூட இங்கியேதானே படகு ஓட்டிண்டு இர்க்கேன். என்று எங்களை
சமாதானப்படுத்தும் விதமாகப்பேசினான். நான் நடு ஆத்ல முதலை இருக்குன்னு முதல்லியேசொல்லியிருந்தா நீங்கல்லாம் எப்போ முதலை வந்துடுமோன்னு பயத்துல தண்ணியே பாத்துகிட்டு
இருப்பீங்க. தவிர குழந்தைங்க யாரும் கையையோ, காலையோ தண்ணில விட்டு விளையாடலை.சொல்லவேண்டிய அவசியமே உண்டாகலை. நீங்களும் பார்க்கவந்த அதிசயங்களை முழு மனசோட
ரசிச்சு பாத்தீங்க. என்ரான். சரி அவன் சொவது சரிதானே என்று நாங்களும் கிளம்பினோம்.
டெம்போகாரனும் அங்கியே இருந்ததால உடனே ஜபல்பூர் போகனும்பா. கிளம்பலாமா? என்ரோம்.என்னங்க, விளையாடரீங்களா? வரும் வழிபூரா பாத்துகிட்டே தான வந்தீங்க. வெரும் அத்துவானக்காடு
பொட்டல் வெளிமட்டும் இல்லை. பூலான் தேவி கேள்விபட்டு இருப்பீங்களே அவ கூட்டாளிகளானசம்பல் கொள்ளைக்காரங்க வந்து தலைமறைவா இங்கதான் இருப்பாங்க. இப்ப மணி இரவு 2.
இந்த அர்த்தராத்ரில பயணம் செய்வது பாதுகாப்பானது இல்லைம்மா. விடிகாலை4 இல்லைனா 5மணிக்கு கிளம்பலாம் என்று அவன் பங்குக்கு அவன் வேறு வயிற்றில் புளி கரைத்தான். இல்லைப்பா
கொஞ்சம் அவசரம், என்று நடந்த விஷயங்களைச்சொல்லி வண்டியைக் கிளப்பச்சொன்னோம்.அவனும் அரைமனதுடன் வண்டியை எடுத்தான். வழி பூராவும் யாராலுமே நிம்மதியாக இருக்கமுடியலை. எந்த நேரம் சம்பல் கொள்ளைக்காரங்க வந்துடுவாங்களோன்னு ஒருபயத்திலேயே வண்டி
இருந்தோம். வரும்போது இருந்த உற்சாகமோ, அற்புதமான காட்சிகள்கண்ட பிரமிப்போ எல்லாம்போன இடம் தெரியலை. மனதுபூரா,பாரமாக கனத்ததுதான் உண்மை.
3.30 ஜபல்பூர்சிட்டி வந்ததும் ஒரு பெரிய ஆஸ்பிடலில் குழந்தையை அட்மிட்செய்து விட்டு குழந்தையின்தாய் தந்தை அங்கியே தங்க, மற்றவர்கள் அவரவர் இடங்களுக்குபயணத்தைதொடர்ந்தோம். நாங்கள்
4.30 வீடுபோய்ச்சேர்ந்தோம். நாராயன் ஜி டெம்போ வரும் சத்தம் கேட்டதுமே எழுந்து கதவைத்திறந்துவைத்துக் காத்துக்கொண்டிருந்தார். அப்போது எதுவும் பேசும் மன நிலையில் கோபு, கிரிஜாஇருவருக்குமே இல்லை. பெட் ரோம் நோக்கி சென்று படுக்கையில் விழுந்தார்கள். கிரிஜாவுக்கு கண்ணை
மூடினாலே குழந்தையை காலை பிடித்து இழுக்கும் முதலையின் காட்சிகளே திரும்ப திரும்ப வந்தது.கோபுவும் தூங்கமுடியாமல் அவஸ்தையில் புரண்டு கொண்டுதான் இருந்தான்.தூங்கவோ முடியலை
என்று இருவருமே 6 மணிக்கு எழுந்து வந்து விட்டார்கள். நாராயன் அவர்களைப்பார்த்ததும் என்னச்சுசாப் என்றார். ஒன்னுமில்லை நாராயன் ஜி, இன்னிக்கு 7 மணிக்கே ஆபீசில் இருக்கனும். அதுதான்,
சீக்கிரமா எழுந்துட்டேன். என்று என்னன்னமோ சொல்லி சமாளித்தான்.

17 comments:

FARHAN said...

திரட்டிகளில் சமர்பிக்கவும் உங்களுன் கருத்துக்கள் பலரை சென்றடைய வசதியாக இருக்கும்

மதுரை சரவணன் said...

மனசு டச் பண்ணும் கதை.. வாழ்த்துக்கள்

எல் கே said...

மனதை உலுக்க வைத்த பாகம். காலை வெட்ட எவ்வளவு திட மனம் வேண்டும்

komu said...

திரட்டிகளிலும் இணைக்கிரேனே.ஃபர்ஹான் வருகைக்கு நன்றி.

komu said...

மதுரை சரவனன் வருகைக்கு நன்றி.

komu said...
This comment has been removed by the author.
komu said...

ஆமா, கார்த்திக் மனத்தை உலுக்கிய சம்பவம்தான்.

vanathy said...

Komu, super o super. Well written.

enrenrum16 said...

படகோட்டியைக் குறை சொல்ல முடியாது...அவர் செய்தது சரிதான்...தலைக்கு வந்தது காலோடு போனதே... :(

தமிழ்வாசி - Prakash said...

இது உண்மை சம்பவம் என்றால் மனசு ரொம்ப வலிக்குதே.

Chitra said...

Oh felt a lot abt the incident :(

komu said...

வானதி வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமா.

komu said...

என்றும் 16, ஆமாங்க அவரைக்குறைசொல்லமுடியாதுங்க.

komu said...

தமிழ்வாசி இந்தக்கதையின் ஆரம்பத்திலேயே உண்மைசம்பவத்தை அடிப்படையாக இதை எழுதுவதாகச்சொல்லியிருந்தேனே, பாக்கலியா? அந்த உணமைச்சம்பவமே இதுதாங்க.

komu said...

ஆமா, சித்ரா நேரிலே பாத்தவங்களுக்கு எப்படி இருந்திருக்கும் இல்லியா?

சுந்தர்ஜி said...

வெட்டுப்பட்டது காலோடு மனமானாலும் அந்த சந்தர்ப்பத்துக்கு அதுதான் முடிவு.

எத்தனை பேருக்கு இந்த சமயோஜிதம் வரும்?

அந்தப் படகோட்டிக்கு இருக்கும் உடனடி முடிவெடுக்கும் திறன் நம் நாட்டுத் தலைவர்களுக்கிருந்தால்
கால் மட்டும் போயிருக்கும். மானம் மிஞ்சியிருக்கும்.

நல்ல பகிர்வு கோமு.

komu said...

thank you suntharji, வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்.