Thursday, January 27, 2011

Thursday, January 27, 2011

குக் ”ஜி” & பேடாகாட். (1)

                     குக் ”ஜி”   &       பேடாகாட்.
  உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதியது இந்தக்கதை.

 கோபு,கிரிஜா மணமாகி 6-மாதங்களே ஆன புது தம்பதிகள். கோபு நாக்பூரில்
 வேலை பார்த்து வந்தான். கிரிஜா ஹௌஸ் ஒய்ஃப். கோபுவுக்கு ஆபீசில்
 ஒரு 10  நாட்களுக்கு டெபுடேஷனில் ஜபல்பூர் போகும்படி ஆர்டர் வந்தது,புதுமனைவியை எப்படி தனியாக விட்டுப்போவது என்று பெரிய ஆபீசரிடம்
 ரிக்வெஸ்ட் பண்ணீ அவளையும் கூட்டிப்போக பர்மிஷன் வாங்கினான்.இருவரும் கிளம்பி ஒரு விடி காலை நேரம் ஜபல்பூர் போய்ச்சேர்ந்தார்கள்.
 சிட்டியை விட்டு 30. 40 கிலோ மீட்டர் உள்ளே தள்ளீ இருந்தது ஆபீஸ். அங்குஅவர்கள் தங்குவதற்கு ஆபீசின்கெஸ்ட்ஹவுசில்இடம்கொடுத்திருந்தார்கள்.

                                               

ஆபீசிலிருந்து 2 கிலோமீட்டர்தள்ளி கெஸ்ட் ஹவுஸ் இருந்தது. ஏற்கனவே சொல்லிஇருந்ததால் அவர்களுக்காக ஒரு ரூம் தயார் செய்து வைத்திருந்தார்கள்.சமையல்,வீடுபெருக்கித்துடைக்க பாத்திரம் கழுவ, துணீ துவைக்க என்று எல்லா வற்றுக்குமேஆட்கள் இருந்தார்கள். 4 பெட்ரூம், பெரிய ஹால், டைனிங்க் ஹால், கிச்சன் என்று
 பெரிய வில்லா, மாதிரி பெரிய பங்களாவாக காட்சி அளித்தது கெஸ்ட் ஹவுஸ்.அடிக்கடி பெரிய ஆபீசர்கள் வந்து போய்க்கொண்டிருப்பர்களாம். அதனால் மிகவும்சுத்தமாக பராமறித்து வந்தார்கள்.பார்க்கவே மிகவும் உற்சாக மாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. இவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ரூமும் நல்ல பெரிதாகவே இருந்தது.நடுவில் பெரிய ரெட்டைக்கட்டில், ஃபோம் மெத்தைதலகாணிகள், ஏ,ஸி, அட்டாச்ட் பாத்
 ரூம் என்று அமர்க்களமாக இருந்தது.
                               

நாக்பூரிலும் ஆபீஸ்குவார்ட்டர்சில் தான் வாசம். அது அடக்கமாக ரெண்டு பெட்ரூம் வீடுதான்.இருவருக்கு தாராளம். முத நாள் இரவு ரயிலில் சரியான உறக்கமில்லை. இருவருக்குமே மிகவும் டயர்டாக இருந்தது. சமையலுக்கு 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆள் இருந்தார்.இவர்கள் வந்ததுமே ஆயியே ஸாப்ஜி, ஆயியே மேம்ஸாப் என்று முகம் மலர வரவேற்றார்.
முதல் பார்வையிலேயே எங்க இருவருக்கும் அவரை மிகவும் பிடித்துவிட்டது. ஸாப், ப்ரேக்ஃபாஸ்ட் ரெடியா இருக்கு, முகம்கழுவிட்டு வாங்க என்றார். நாங்களும் ஃப்ரெஷ் ஆகி டைனிங்க் ஹால் போனோம். பெரிய ரவுண்ட் டேபிள்.சுற்றி 6 சேர்கள் என்று அம்சமா இருந்தது. ஃபேனைச்
 சுழலவிட்டவர், ப்ரெட்,பட்டர், ஜாம், இஞ்சி, ஏலக்கா மணக்க சாயா எல்லாம் கொண்டு தந்தார்.இதுபோல எங்களை உக்காரவச்சு உபசாரம் பண்ணுமனுபவம் கிரிஜாவுக்கு புதுமையாக இருந்தது.




 அந்த நேரம் அந்த ப்ரேக்ஃபாஸ்ட் அமுதமாக இருந்தது. இன்னும் ரெண்டுஸ்லைஸ் போட்டுக்கோங்க என்று பார்த்து,பார்த்து அன்பான உபசரிப்பில்  வயிறுஃபுல்லா ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டு சூப்பரான சாயா வையும் குடித்தோம். காலியான பாத்திரங்களை எடுத்துபோனவர் ஸாப் லஞ்சுக்கு என்ன சாப்பிடரீங்கஎன்று கேட்டார். கோபு, நாங்க ப்யூர் வெஜிடேரியன், அதுக்குத்தகுந்தமாதிரி ஏதானும் பண்ணுங்க ஐயாஎன்றான். ஓ, நீங்க மதராசியா, என்றார். ஆமாங்கன்னு நாங்க சொன்னோம். சரிங்க நான் பாத்துக்கரேன்12.30, இல்லைனா 1-மணிக்கு லஞ்ச் ரெடியா இருக்கும். எப்பவேணா வந்து சாப்பிடலாம் சாப் என்றார்.திரும்ப ரூமில் போய் படுத்ததுதான் தெரியும் நல்ல தூக்கம். கதவைத்தட்டும் சத்தம் கேட்டுத்தான் எழ்ந்தோம். வெளியில் சமையல்காரர்தான் ஸாப் மணி 3 ஆச்சு. நீங்க இன்னும் லஞ்ச் சாப்பிட வரலியேஎன்று பணிவாகக்கேட்டார். ஏ,அப்பா, 3 மணஆச்சாகிரி,வம்மாபாவம்அவருமநமக்காகவெயிட்பண்ணிக்கிடிருக்கார்பாரு.




அவசரமாக முகம் கழுவி, டைனிங்க் ஹால் போனோம். அருமையான சாப்பாடு தயார் செய்து வைத்து இருந்தார்.அவ்வளவு ருசியான சாப்பாடு. ஐயா உங்க பேரு என்னங்கன்னு கோபு கேட்டார். நாரயன்என்றார்.  நாராயன் ஜி சாப்பாடு அருமையா இருக்கு. ரெண்டுபேருமே அளவுக்கு அதிகமாவே சாப்பிட்டோம்.ஆமா, நீங்க சாப்பிட்டீங்களா?என்ரோம். அது எப்படிங்க, நீங்க சாப்பிடாம நான் சாப்பிடுவேனா. என்கிரார்.ஐயோ, சாரி நாராயன் ஜி, எங்களால உங்க ளுக்கு நேரம் ஆயிடுத்து. வாங்க நீங்க உக்காருங்க நாங்கஉங்களுக்கு பரிமாறுகிறோம் என்று இருவரும் சொல்ல, நாராயனுக்கு கண்கலங்கி விட்டது. என்னாச்சுஙகஎன்று நாங்க இருவரும் பதறிப்போய்க்கேட்டோம். இல்லீங்க யாரும் என்னிடம் நீசாப்பிட்டியான்னு இதுவரை கேட்டதே இல்லீங்க, நீங்க அன்பா கேட்டீங்களா ஒரு நிமிசம் கலங்கிட்டேன் ஸாப், என்றார்.

  அவர் கிச்சனில் ஒரு ஓரமாக உக்காந்து சாப்பிட்டார். பாத்திரம் தேய்ச்சுக்கழுவி வைக்க ஒரு அம்மாவந்துட்டு போனாங்க. மறுபடியும் 5 மணிக்கு இஞ்சி ஏலக்காய் மணக்க சாயுடன் சூடாக பஜ்ஜி போட்டுகொண்டுவந்தார். சப்பிட்ட சாப்பாடே இன்னும் ஜீரணம் ஆகலியே நாராயன் ஜி,அதுக்குள்ள இது வேரயா?பரவால்லைங்க சாப்பிடுங்க. என்று எங்களை சாப்பிட வைத்தார். 9 மணி இரவு சாப்பிட்டு படுத்துட்டோம்.நாளை முதல் கோபுவுக்கு ஆபீஸ் போகணும்.

20 comments:

எல் கே said...

ஹ்ம்ம் நல்ல துவக்கம்.. சரளமா இருக்கு நடை

கோலா பூரி. said...

thankyou kaartik

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நல்ல நடையில் எழுதியுள்ளீர்கள்! விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருந்தது! கடைசியில் எதிர்பாராத சஸ்பென்ஸ் ஒன்றை எதிர்பார்த்தேன்!

அன்புடன் மலிக்கா said...

எழுத்து நடை அருமை.வாழ்த்துக்கள்..

http://niroodai.blogspot.com

கோலா பூரி. said...

மாத்தி யோசி, வருகைக்கு நன்றி. என்ன சஸ்பென்சை எதிர் பாத்தீங்க சார்?

கோலா பூரி. said...

அன்புடன் மலிக்கா வாங்க. வருகைக்கும் கருத்துக்ககும் நன்றி.

ஆமினா said...

கோமு கலக்கலான தொடரா இருக்கு

வாழ்த்துக்கள்

கோலா பூரி. said...

தேங்க்யூ ஆமி.

Jaleela Kamal said...

மிக arumai gomu akkaa

கோலா பூரி. said...

தேங்க்யூ ஜலீலாமேடம்.

enrenrum16 said...

கோமு நல்லா இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு... படங்கள் சூப்பராயிருக்கு...

கோலா பூரி. said...

enrenrum16 thank you very much.

ஆனந்தி.. said...

புதுசு புதுசா கதைசொல்ரிங்க...நேரில் பார்த்த மாதிரி விவரிக்கிரிங்க கோம்ஸ்...

vanathy said...

கோமு, நல்லா இருக்கு. தொடருங்கோ.

தமிழ்வாசி பிரகாஷ் said...

கதை மிகவும் அருமை...
-------------------------
கிறுக்கலும், சங்கமும்

கோலா பூரி. said...

ஆனந்தி, வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

கோலா பூரி. said...

வானதி நன்றி.

கோலா பூரி. said...

தமிழ்வாசி, பிரகாஷ் நன்றி.

Mahi said...

எனக்கு அதிகம் பரிச்சயமில்லாத வட இந்திய வாழ்க்கையை உங்க எழுத்தில் படிப்பது நல்லா இருக்குங்க கோமு! :)

கோலா பூரி. said...

மஹி வருகைக்கு நன்றி.