Tuesday, December 14, 2010

Tuesday, December 14, 2010

ஹிமாச்சல்பிரதேஷ்(2)

                                                                      ஹிமாச்சல் ப்ரதேஷ். (பகுதி-2.)

மலை அடி வாரத்திலேயே தடிக்கம்பு விற்கிறார்கள். ஆளுக்கு ஒரு கம்பு வாங்கிண்டோம்.ஏற்றப்பாதை இல்லையா கம்பை சப்போர்ட்டுக்கு ஊனிண்டு ஏறலாமே. எல்லாருமே கீழேகம்பு வாங்கிண்டு தான் மலை ஏறுகிறார்கள். நம்மலக்கேஜை சுமப்பதற்கும் கூலி ஆட்கள்கிடைக்கிறார்கள்.4மணிக்கு மலை ஏற ஆரம்பித்தோம்.அகல,அகலமாக படிக்கட்டுகள் கட்டி,
தலைக்கு மேலே தகரத்தினால் கூரையும் போட்டு நல்ல வசதிகள் செய்திருந்தார்கள். மலைஏறுவதுபோலவே இல்லை. ஜாலியாக சிரிச்சு பேசிண்டு தான் ஏற ஆரம்பித்தோம். ஒரொருகிலோமீட்டருக்கும், ஒரு செக் போஸ்ட் வைத்திருக்கா. மெட்டல் டிடெக்டர் கொண்டு எல்லாரையும் செக் பண்ணிதான் மேற்கொண்டு செல்லவே அலவ் பண்ணறா.அப்படியும் இப்படியுமா3 கிலோமீட்டர் வ்ரையும் ஏறிட்டோம். அதுவரை எந்த சிரமமும் தெரியலை.பாதையின் இரண்டுபுரமும், சின்ன,சின்ன கடைகள். பூரா,பூராவும் பாதாம், பிஸ்தா,அக்ரூட்,முந்திரி, பேரீச்சை கிஸ்மிஸ் என்று எல்லாமே ட்ரைஃப்ரூட்ஸ் தான். நாங்கள் எதுவும் வாங்கலை. அந்த வெயிட்டையும்
சுமந்துண்டு எப்படி மலை ஏறமுடியும்?. ஆனா குஜராத்திக்காரா கொஞ்சம்கூட யோசிக்கவே இல்லஎல்லாவற்றிலும் 5, 5 கிலோ வாங்கிண்டா.சுமைதூக்கும் கூலிகளையும் அவர்கள் ஏற்பாடு பண்ணிண்டா.எங்களிடம் என்ன் நீங்க எதுவுமே வாங்கலை, நாம மும்பைல 100 க்ராமுக்கு கொடுக்கற விலையில்
இங்க 1 கிலோ வாங்கிடலாம்.அவ்வளவு சீப் ரேட். அதுவும் தவிர நாங்க எல்லாம் காலை ப்ரேக்பாஸ்ட்டுடன் டெய்லி ஒரு பிடி ட்ரை ஃப்ரூட்ஸ்ம் எடுத்துப்போம். நீங்க எல்லாம் ட்ரைஃப்ரூட்ஸ் சாப்பிடவே
மாட்டீங்களா என்று கேள்வி வேறு கேக்கறா. பொதுவா நம்மள்ள பலபேரு விசேஷ தினங்களில்பாயசமோ, ஸ்வீட்டோ பண்ணினா அதில் கொஞ்சம் முந்திரி,த்ராட்சை நெய்ல வறுத்துபோடுவோம்.தீபாவளிசமயம்னா, பாதாம் அல்வாவோ,வேறு எதுவுமோ ஸ்வீட்பண்ணும் போதுதான் இந்தமாதிரி
ட்ரைஃப்ரூட்ஸ்களை யூஸ் பண்ணறோம். இந்தபக்கம்லாம் சிலபேரு, குழந்தைகளுக்கு காலை டிபனுடன் 2பாதாம், 2பிஸ்தா என்று கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் இவர்கள் போல தினசரி

ட்ரைஃப்ரூட்ஸ்செல்லாம் நம்மளால சாப்பிடமுடியாதுப்பா. குஜராத்திகாரர்களில் 50 வயதை தாண்டியவர்கள் இரண்டுபேர், 4குழந்தைகளும்10-லிருந்து3வயது வரை, 35, 40 வரை 4பேர். எல்லாருமே
அடிகடி எதையாவது கொறித்துக்கொண்டே இருக்கிறார்கள். 2 பிக்‌ஷாப்பர் பையில் ஃபுல்,ஃபுல் டிட்,பிட்ஸ்தான்.ஒருவேளை அதுவும் ட்ரைஃப்ரூட்ஸ்தானோ என்னமோ? அனா அவா எல்லருக்குமே நல்ல ஸ்டெமினாஇருக்கு.கொஞ்சம்கூட அலட்டிக்காம நடக்கிறா. நாங்க எல்லாருமே குளிருக்காக கம்பளி உடை களை
போட்டுண்டு போயிருந்தோம் இல்லையா,அந்த வெயிட்டோட நடப்பது கொஞ்சம் கஷ்டமா இருந்தது.எல்லாருக்கும் 40,அல்லது 50 வயதிற்கு மேலதான் ஆர்த்த்ரைடீஸ் ப்ராப்ளம் வரும்னு சொல்லுவா.
எனக்கு கொஞ்சம்ஸ்பெஷலா 30 வயதிலேயே முட்டிவலி ஆரம்பித்து விட்டது. மாடி ஏறி,இறங்குவதுரோட்டில் நடக்கும்போதே மேடு,பள்ளங்களில் நடக்க கொஞ்சம் சிரமப்படும்.அதற்காக முட்டிகளில்நீ,பேண்ட்,ஸாக்ஸ்,ஷூ,ஷால் ஸ்வெட்டர், மப்ளர்(ஸ்கார்ப்)எல்லாம்போட்டுண்டு 3கிலோ மீட்டர்
நடந்ததும் எல்லாமா சேந்து உடம்பை இறுக்கற மாதிரி ஆயிடுத்து. அதனால ஒருகடை வாசலில்உக்காந்துண்டு எல்லாவற்றையும் எடுத்துவிட்டு கொஞ்ச நேரம் காலை அமுக்கி விட்டுண்டு உக்கா ந்துட்டேன். அதை எங்கள் நண்பர் பார்த்துட்டு, மேடம் நீங்க வேணும்னா குதிரைல வந்துடுங்கோ
என்றார். குழந்தைலேந்து, பெரியவாவரை நடந்து வரும்போது நான் மட்டும் குதிரைலெ வந்தா நன்னாஇருக்காது. நானும் மெள்ள,மெள்ள நடந்தே வரேன் என்றேன். அப்படிஎல்லாம் நினைச்சு உங்களைகஷ்டபடுத்திக்கவேண்டாம். நாம இப்போதான் 3 கிலோ மீட்டரே ஏறி இருக்கோம். இன்னம் 11 கிலோ
மீட்டர் போகணும். சொன்னாகேளுங்கோ.என்று என்னல்லாமோ சொல்லி என்னை குதிரையில் ஏற்றிவிட்டார்கள்.லைஃப் ல ஒருதடவை யாவது குதிரை சவாரியும் செய்துபார்க்க வேண்டாமா?எனக்கு கிடைத்ததோஒரு நோஞ்சான் குதிரை. தினசரி யாரையாவதுசுமந்துபோயிண்டுஇருக்கிறகுதிரைதான்.உக்கார 4,5 கம்பளி போட்டு வைத்திருந்த்து. கால்வைக்கற 2 ரவுண்ட் கம்பியிலும் கால்
வைத்து ஜம் என்று ஏறி உக்கந்தாச்சு.கையில் கடிவாளத்தையும் பிடிச்சாச்சு. மெதுவாகத்தான் போச்சு.குதிரைக்காரன் கம்பாட்டு அடிச்சுண்டே வந்தான். எனக்குதான் ஐயோ பாவமா இருந்தது. 3கிலோமீட்டர்
போனதும், இதுக்குமேல குதிரை போகாது, இங்கியே இற்ங்கிக்க என்கிரான் குதிரைவாலா.என்னப்பாமேலவரையில் போகும்னு சொல்லிட்டு, இப்போ இங்கியே இறக்கி விட்டா என்ன அர்த்தம், என்றேன்.
சரி அவனிடம் பேசி எதுவும் ஆகப்போரதில்லை என்று தெரிந்து விட்டது. எதுவும் பேசாமல் இறங்கிவிட்டேன்.குதிரை சவாரி என்னை ஒரு வழி பண்ணிடுத்து. முத்லில் கால் மூட்டிலமட்டும்தான் வலிச்
சது, குதிரை குதிச்சு, குதிச்சு வந்ததில் கழுத்து முதுகு எலாமே சேர்ந்து வலிக்க ஆரம்பிச்சுடுத்து.வேண்டாத த்லை வலியை விலைகொடுத்து வாங்கினதுபோல ஆச்சு. நடந்து வருகிறவர்கள் எப்போ
வருவார்களோ என்று வெயிட் பன்ண ஆரம்பித்தேன். நல்ல வேளை குதிரை வாலா என்னை ஒருஓட்டல் முன்னாடிதான் இறக்கிவிட்டுட்டு போயிருக்கான். வெளியில் உக்காரவும் நிரைய சேர்கள்போட்டு வத்திருந்தா. காலை பிடிச்சுண்டு உக்கந்துட்டேன். ஒருமணி நேரம் கழித்து அவர்கள் எல்லாம்
வந்தார்கள். என்னை பார்த்ததும் என் வீட்டுக்காரர், என்ன கோமு இன்க உக்காந்திருக்கே? குதிரைஎங்க? என்கிறார். அவர்கள் எல்லருக்குமே அதே கேள்விதான். நான் நடந்ததை சொல்லிட்டு எல்லாரும்
ஓட்டல் போய் சூடா காபி ஆர்டர் பண்ணினோம். இங்கெல்லாம் காபி கிடையாது ச்சாயா தானிருக்குஎன்றான். எனக்கு ச்சாயே பிடிக்காது. ஆனாலும் என்னசெய்வது அந்த நேரம் ஏதாவது குடிக்கணும்போல இருந்தது. எல்லாருடனும் ச்சாயா வையே குடித்தேன்.திரும்பவும் நடராஜா சர்வீஸ்.
அங்கியே 2 பிஸ்லேரி தண்ணிபாட்டிலும் வாங்கிண்டோம். போகும் வழிபூராவும் சூப்பர் ஸீனரிபாதையின் 2புரமும் கனத்த கம்பிகள் பாதுகாப்பிற்காக போட்டு வைத்திருகிறார்கள்.ஒரு கையில்
தடிகம்பு,மறுகையில் சைடு கம்பிகளை பிடிச்சுண்டு ஏறினோம்.ஒரொரு கிலோமீட்டருக்கு நடுவிலும்உக்காந்து இளைப்பாற நிரைய பெருசு,பெருசா இரும்புசேர்கள் போட்டுவத்திருக்கா.ஜெய்மாதாதீ
என்று கோஷம் போட்டுண்டு எவ்வளவு ஜனங்கள் மலை ஏரி வரா. என்னதான் அப்படிஒரு முரட்டுபக்தியோ.மேலே போட்டிருக்கும் தகர கூரைகளின்மேல் குரங்குகளின் செமைகுதி ஆட்டம். நாம்நடக்கும் வழி பூராவும் குரங்குகள்மயம் தான். அனால் யாரையும் எதுவும் செய்வதில்லை.
6மணிக்குமேல வெளில வேடிக்கை பார்த்துண்டே நடக்கமுடியலை. இருட்டாயிடரது. ஒரு வழியாஇரவு11 மணி கொவில் வாசலை அடைந்தோம். மேல போயிட்டு கீழ பாக்கும் போது ஏ அப்பா எவ்வளவு
மேலயா ஏறி வந்திருக்கோம் என்ற ப்ரமிப்பு ஏற்படுகிறது. நிரைய விளக்கெல்லாம் போட்டு அந்தநேரத்திலும் ஜெகஜ்ஜோதியாக கோவில் ப்ரகாசிக்கிறது. ஆனா கோவில் தாண்டி வாசல் தாண்டி
ரொம்ப பெரிய க்யூ இருந்தது. அந்தவரிசையில் கடசியா நின்னாகூட தரிசனம் செய்ய குறைந்தது3 மணி நேரங்களாவத் ஆகும். 7 மணி நேரம் நடந்துட்டு திரும்பவும் 3 மணி நேரம் க்யூ வில் நிற்கயாருக்குமே தெம்பு இல்லை. அங்க்யே இரவு தங்க ஏதாவ்து ஹோட்டலோ, ரூமோகிடத்தால் எல்லாரும்
கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துண்டு அதிகாலை 4மணிக்கு தரிசந்த்துக்கு வரலாம் என்று முடிவுபண்ணிரூம்தேடினார்கள்.ரூம்கள், ஹோட்டல்கல் எல்லாம்ஃபுல். எதிலுமே இடமில்லை அவ்வளவு கூட்டம்.
அன்று நல்ல பௌர்ணமி நாளாக இருந்தது. அதனால எக்கசக்க கூட்டம். இல்லைனா கூட இங்கஎப்பவுமே இவ்வளவு கூட்டம் வந்துண்டுதானிருக்கு. கோவிலுக்கு வெளியிலேயே நிறைய ரூம் எல்லாம் கட்டிப்போட்டிருக்கா. அனா இன்று எல்லாம் ஃபுல். 3 மாடிகளில் வரிசையாக ரூம்கள்.
அதன்வெளியி நீ...............ண்..............ட காரிடார் மாதிரி பெரிய வராண்டாக்கள் ஜனங்கள் அந்தவராண்டாக்களில் கம்பளி விரித்து படுத்துக்கொண்டிருந்தார்கள். நாங்களும் வாடகைக்கு ஆளுக்கு 2 கம்பளிகள்
வாங்கிக்கொண்டு படுக்கவாவ்து இடம் இருக்கா என்று தேடினோம். ஒருவராண்டாவில் ஒருவர்படுக்கும் அளவுக்கு இடம் இருந்தது. 2,வது,3வது வராண்டாக்களில் கொஞ்சபேருக்கு இடம் உண்டாக்கிண்டோம். கிடைத்தைடங்களில் எல்லாரும் ஒடுங்கி படுத்தோம்.

12 comments:

ஆமினா said...

super komu

ஆமினா said...

இந்த முறையும் சுகமான அனுபவமா இருந்தது!!!

தொடர்ந்து எழுதுங்க

கோலா பூரி. said...

தேங்க்யூ ஆமி, தொடர்ந்து முத ஆளா வந்து பாராட்டரீங்க. சந்தோஷமா இருக்கு. இந்தவாட்டி தொடர்ந்து 2 பின்னூட்டம்.

சிவகுமாரன் said...

முதலில் உங்கள் பதிவுகள் வெறும் சமையல் குறிப்புகளாக இருக்குமோ என நினைத்தேன். ஆகா உங்கள் கத்திரிக்காயில் கணபதி பப்பாவும், பயணக் கட்டுரைகளும் அருமை.

vanathy said...

மாமி, சூப்பர். ட்ரை ப்ரூட்ஸ் உடம்பிற்கு நல்லது. காலையில் கொஞ்சம் சாப்பிட்டா பசி எடுக்காது. சும்மா தோசை, இட்லின்னு கார்போஹைட்ரேட்டை உள்ளே தள்ளாமல் ஹெல்தியா சாப்பிட்ட பீலீங்ஸ் வரும்.

கோலா பூரி. said...

தமில் ப்ளாக்ஸ் வருகைக்கு நன்றி.பகிர்ந்து கொள்கிரேன்.

கோலா பூரி. said...

சிவகுமாரன் நான் இதுவரையிலும் சமையல் குறிப்பே போடலியே. நீங்க ஏன் அப்படி நினைச்சீங்க? வெரைட்டியா கலக்கனும்னுதான் என் விருப்பம்.
வருகைக்கு நன்றி.

கோலா பூரி. said...

ட்ரை ஃப்ரூட்ஸ்பத்தி எல்லாருக்குமே தெரியவந்தால்
ஒருவேளை சாப்பிட ஆரம்பிக்கலாம் இல்லியா?
வானதி நான் மாமி இல்ல, இல்ல, இல்ல.

ஆனந்தி.. said...

கோமு...புல் ஸ்விங் கில் ரெண்டு பாகமும் படிச்சுட்டேன்...ரொம்ப லைவ்லி ஆ இருக்கு நீங்க விவரிக்கும் விதம்...போக முடியாட்டியும் நான் அப்படியே உங்க விளக்கங்கள் பார்த்து நிறைய தெரிஞ்சுட்டேன்...ட்ரை ப்ரூட்ஸ் முக்கியம் கூட புரிஞ்சது...மலை னால் பழனி மலை மாதிரி இங்கயும் செட்.படிகள் எல்லாம் இருக்கும்னு இப்ப தான் தெரியும்...நான் ஐஸ் கட்டி மலையில் நடப்பங்கனு யோசிசுருந்தேன்...சூப்பர் ஓ சூப்பர் கோம்ஸ்..

கோலா பூரி. said...

அனந்தியோட பின்னூட்டம் பாத்தாதான் இன்னும் சிறப்பா எழுத உற்சாகமா இருக்கு.

எல் கே said...

அருமை.. நான்லாம் எங்க அங்க போய் ஏறப் போறேன்,. நம்மூர்ல இருக்கற சின்ன குன்றே ஏற முடியல ... அருமையா போது . தொடருங்கள் கோமதி

கோலா பூரி. said...

கார்த்திக் வருகைக்கு நன்றி. என் கால் ப்ராப்ளத்தை
வச்சுண்டு நானே ஏறிட்டேன். நீங்க முடியாதா என்ன?
அதுவும் ஜாலியா பேசிண்டே போக க்ரூப் அமைஞ்சுட்டா கேக்கவே வேண்டாம். ரொம்ப நல்லா எஞ்சாய் பண்ணலாம். அப்பறம் இந்த இடங்கள் எல்லாம் எப்பதான் பாக்கரது?