Saturday, January 29, 2011

Saturday, January 29, 2011

குக் ”ஜி” & பேடாகாட்(2)



குக் ”ஜி” & பேடா காட்(2)




மறு நாள் கோபு காலை எழுந்து ஷேவ்பண்ணி குளித்து8-மணிக்குடைனிங்க்

ஹால் வந்தான்.கிரிஜாவும் கூடவே வந்தாள். நாராயன் ஜி நேற்று போலவே

ப்ரெட் டோஸ்ட் பண்ணி வெண்ணை தடவி,ஜாம் தடவி கொடுத்தார்.சாயும்

கொடுத்தார். 8.30-க்கு ஆபீசிலிருந்து கோபுவைக்கூட்டிப்போக கார் வந்தது.

கோபு கிளம்பி போனதும் கிரிஜா கிச்சனில் நாரயன் ஜியுடன் பெச்சுக்கொடுதுக்

கொண்டே வந்தாள். கிச்சனையும் சுத்தமாகவே வைத்திருந்தார். அவரையும்

டிபன் சாப்பிடச்சொன்னாள். அவரும் சாப்பிட்டு பாத்திரங்களை ஒழுத்து சிங்கில்போட்டுவிட்டு, மேம் சாப் லஞ்சுக்கு என்ன சாப்டுரீங்க?என்ரார். நாராயன் ஜி நீங்கஎதுபண்ணினாலும் ஓ. கே தான். என்றாள்.


                                                                                            

சரிமேம்சாப், நீங்க குளிச்சுட்டு வாங்க, நானும் குளிச்சுட்டு மத்தவேலைகளை கவனிக்கரேன் என்றார்.துணியெல்லாம் நீங்க வாஷ் பண்ணா தீங்க, எல்லாத்துக்கும் ஆட்கள்இருக்காங்க என்றார். கிரிஜா, பாத்ரூம்னோக்கி போனாள். பெரிய பாத்ரூம், வென்னீருக்குதனிகுழாய், தண்ணீருக்குத்தனிக்குழாய்,பெரிய பாத் டப் என்று அமர்க்களமாக இருந்தது.

இது என்ன ராயல் லைஃப் ஸ்டைல். என்று எண்ணியவாறே குளிக்கப்போனாள். புது சோப்,புது பேஸ்ட், புது டர்கிஷ் டவல் என்று எல்லாம் சுத்தமாக வைக்கப்பட்டிருந்தது.ஆனந்தமாக
                                                
அலுப்புத்தீர குளித்து வந்தாள். டேபிள் மேல் அன்றைய ந்யூஸ்பேப்பர் டைம்ஸ் ஆஃப் இண்டியா,உமன்ஸ் ஈரா, ப்ளிட்ஸ், ரீடர்ஸ்டைஜஸ்ட் என்று எல்லாம் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
கொஞ்ச நேரம் எல்லாவற்றையும் திருப்பிப்பார்த்துவிட்டு அங்கிருந்த ஹோம் தியேட்டர் டி. வி. யில்கொஞ்ச நேரம் சேனல் சேனலா திருப்பிப்பார்த்துவிட்டு, எல்லாம் ஹிந்தி, இங்க்லீஷாவே வரதே.தமிழ் ஒன்னுமே வல்லியே என்று நினைத்தாள். நாராயன் ஜி வித விதமாக, டிபன், சாப்பாடு எல்லாம் பண்ணிப்போட்டுடரார். என்க்கு





கல்யாணமாகி 6 மாதங்கள் தான் ஆகி இருந்ததால் இன்னும் பாஷை சரளமா பேச வரலை. மற்றவர்பேசுவது ஓரளவு புரிந்து கொள்ள முடியும். ஒரு வேலையும் இல்லாமல் பூர நாளும் இப்படி சும்மாவே
இருப்பது கொஞ்ச நேரத்துக்கு சுகமா தான் இருந்தது. பிறகு போரடிக்க ஆரம்பிச்சுடரது. சரின்னு கிச்சன்போனாள். நாராயன் ஜியும் குளித்து சமையல் வேலைகளில் பிசியாக இருந்தார். நாராயன் ஜி நான் ஏதானும்

ஹெல்ப் பண்ணவா என்றாள். ஐயோ அதெல்லாம் வேணாம்மா. அங்க ஒரு சேர் இருக்கில்லையா உக்காந்துக்கோங்கம்மா. என்றார். சும்மா இருக்க போராரது நாராயன் ஜி. என்றாள். அவர் சிரித்துக்கொண்டே இங்கதானேம்

மா ப்ரீயா இருக்க முடியும். உங்க இடம் போயாச்சுன்னா நீங்கதானே எல்லா வேலையும் பண்ணனும்.இங்க ஹாயா இருங்கம்மா, என்று பரிவாகச்சொன்னார்.




சரி நாராயன் ஜி நான் இங்க உக்காந்து பேசினா உங்களுக்கு இடைஞ்சலா இருக்குமா என்றாள். என்னம்மா,இப்படி கேட்டுட்டீங்க, அதெல்லாம் இல்லை தாராளமா பேசுங்கம்மா என்றார்.அதற்குள் சமையல் முடித்து

விட்டிருந்தார். கோபு 1- மணிக்குத்தான் சாப்பிட வருவார்.ஏன் நாராயன் ஜி, உங்க மனைவி, குழந்தைகள்எல்லாரும் எங்கே இருக்காங்க? என்றாள். அவங்கல்லாம் போபால் ல இருக்காங்கம்மா. ஏன் நாராயன் ஜி

அவங்களையும் இங்க கூட்டிண்டு வரலாமே? என்றாள்.. அது சரிவராதும்மா. இந்தவீட்ல ஃபேமிலி தங்கவைக்க அலவ்ட் கிடையாது. வாடகைக்கு தனி வீட்ல வைக்கலாம்னா இங்கல்லாம் வீட்டு வாடகை கொடுத்து

கட்டுப்படி ஆகாதும்மா. தவிர நான் நாள் பூரா இங்கியேதான் இருக்கணும். ஆபீசர்கள் யாரு எப்ப வருவாங்கன்னுசொல்லவே முடியாது.




போபால்ல பூர்வீக வீடு இருக்கு. அதனால வாடகை பிரச்சினை இல்லை. நான் அனுப்பும் பணத்ல மனைவிரெண்டு பசங்க ஓரளவு நல்லாவே இருக்காங்கம்மா. எனக்கும் இங்க ஒரு குறையும் இல்லைம்மா. மூணுவேளைச்சாப்பாடு, வருஷத்துக்கு 3 ஸெட் ட்ரெஸ், இருக்க இவ்வளவு பெரிய வீடு. வேர என்னம்மா வேணும். என்னாஒன்னு

மனைவி, குழந்தகள் கூட இருக்கமுடியலைன்னு ஒரே குறைதான். 2 வருஷத்துக்கு ஒருமாசம் லீவுதருவாங்க.அப்ப அவங்க கூட சந்தோஷமா இருந்துட்டு வருவேன்மா. ஆமா உங்க அப்பா, அம்மா?

அவங்க இல்லைம்மா. காலமாகிட்டாங்க. நான் ஒரேமகன் தான் அவங்களுக்கு. என் அம்மா இதுபோல பெரிய மனுஷங்க வீட்ல சமையல் வேலைதான் பாத்துகிட்டிருந்தாங்க. அம்மாகிட்டேந்து எல்லா சமையல்
கத்துகிட்டேன். அது இப்ப சவுரியமா இருக்கு, என்று சிரித்தபடியே சொன்னார்.




கோபு வரவும் இருவரையும் உக்காரவைத்து பரிமாறினார். வயிரார சாப்பிட்டோம். நாராயன் ஜி நீங்களும்சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு கோபு கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துவிட்டு 2- மணீக்கு திரும்பவும் ஆபீஸ் போனான். கிரிஜா புக்ஸை வச்சுண்டுபடுக்கையில்படுத்தவாரேபடித்துக்கொண்டிருந்தாள். நல்ல சாப்பாடு, ஓரளவு அளவுக்கு அதிகமாகவே சாப்பிட முடிந்தது. கண்களைச்சுழட்டிண்டு வரவே அப்படியேசிறிது கண் அயர்ந்துவிட்டாள். கதவு தட்டும் சப்த்தத்தில் எழுந்தாள். மணி 6. கோபுவே வந்திருந்தான்.

நாராயன் ஜி சாயாவும் கொஞ்சம் பிஸ்கெட்சும் கொண்டுதந்தார். கிரி, இப்படி ஓவர் சாப்படு, நோ வாக், நோ எக்சர்ஸைஸ் இப்படி இருந்தா நாம திரும்பி போகும்போது 5கிலோ கூடிடுவோமென்று கோபு சொல்ல

சாப் வீட்டைச்சுற்றி அழகாகதோட்டம் போட்டிருக்கேன். அங்க வேணா சின்னதா ஒரு வாக் போய் வாங்க.என்றார்.

10 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ம்.. கதை நல்லாப் போய்க்கிட்டு இருக்கு மேடம் ! அந்த சமையல்காரர் நம்ம மனசுல நிரந்தரமா பதிஞ்சிடப் போறார்! மொதல்ல இது தொடர் கதைன்னு தெரியாம போச்சு! இந்த எபிசோட் முடிவுலயும் தொடரும் னு போட்டிருக்கலாம்! அடுத்த எபிசோட்டுக்காக வெயிட்டிங்! உலவு தளத்தில இணைக்கலீங்களா மேடம்?

எல் கே said...

ஹ்ம்ம் கதை ஒரே சீராக போய்ட்ருக்கு ....

கோலா பூரி. said...

மாத்தி யோசி, வருகைக்கு நன்றி சார். உலவு-ல இணைக்கவே முடியலியே.

கோலா பூரி. said...

நன்றி கார்த்திக்.

Prabu Krishna said...

இரண்டாவதை படித்து விட்டு பின்னர்தான் முதலாவதை படித்தேன். தொடருங்கள்.

உலவு திரட்டியில் சேர்க்க இந்த postன் URL மட்டும்தானே கொடுத்தீர்கள். அப்படி மட்டுமே கொடுக்க வேண்டும். பின்னர் நீங்கள் அதில் கேட்டு உள்ளதை பூர்த்தி செய்து பதிவை உலவில் சேர்த்து விடலாம்.

கோலா பூரி. said...

பலே பிரபு வருகைக்கு நன்றி. இந்தபோஸ்ட் டின் url எப்படி எங்க தெரியும்? நான் வெரும் என்பேரு ப்ளாக்ஸ்பாட்.காம் மட்டுமே கொடுக்கரேன் அப்போ அங்க இப்படி வருது
duplicate article url: http://gomathykomu.blogspot.com
ippa enna pannanum?
ஒவ்வொரு போஸ்டுக்கும் தனி url
உண்டா. அதை எங்க பாக்கனும் தெரியலையே?

enrenrum16 said...

பேச்சுவழக்கு ரொம்ப நல்லாயிருக்கு கோமு... எனக்கென்னமோ நாராயண்ஜி தான் இந்த கதையின் ஹீரோன்னு தோணுது.... ஆமா..பேடாகாட்னா என்ன?

கோலா பூரி. said...

enrenrum16 நாராயன் ஜி ஹீரோ ஆனதால தான் தலைப்பில்யே அவருக்கு மறியாதை. பேடாகாட்பத்தி அடுத்தடுத்த
பகுதிகளில் வந்துகொண்டிருக்கு.

ஆனந்தி.. said...

கோம்ஸ்..பட்டைய கிளப்புரிங்க...நடக்கட்டும்..நடக்கட்டும்...படங்கள் எல்லாம் நல்லா இருக்கு கோம்ஸ்...

கோலா பூரி. said...

ஆனந்தி, நன்றி.